நமது உடலின் ஒன்பது வாசல் - நவதுவாரங்களும் நவகிரகங்களும்…

நமது உடலின் ஒன்பது வாசல் - நவதுவாரங்களும் நவகிரகங்களும்


நமது உடலில் ஒன்பது வாசல் உள்ளது அதாவது உடலின் சக்தி மண்டலத்தின் போக்குவரவு செய்யும் புற சூட்சம ஒட்டைகள் ஒன்பது உள்ளன இவைகளின் வழியாக உடலுக்குத் தேவையான பஞ்சபூதங்கள் மற்றும் அந்தக்கரண இயக்கங்களும் போக்குவரவு செய்யும் பாதைகள் இதை மோலோட்டமாகச் சொன்னால் இதன் அவசியம் புரியாமல் போகலாம் அதே நேரத்தில் விளக்கிச் சொன்னாலும் உயிர் உடலின் மொத்த இயக்க அமைப்பையும் சொன்னால் தான் புரியும் இருந்தாலும் உடலின் ஒன்பது வாசலையும் அதன் நவகிரகங்களின் காரகத்துவங்களையும் முதலில் தெரிந்துகொள்வது ஆரம்பத்தில் உதவும்,

அடுத்து முக்கியமானது ஆனால் துவாரங்களில் சேராதது நம் பிறப்பிற்கும் நம் விதியின் தொடக்கத்திற்கும் ஆதார இடமாக இருப்பது இந்த பாடல் அதன் முக்கியத்துவத்தை சொல்லும்

உந்திக்கமலத்து உதித்துநின்ற பிருமாவைச்
சந்தித்துக் காணாமல் தட்டழிந்தேன் பூரணமே!
                                                                             - பட்டினத்தார் பாடல்

உந்தி ஆம் கொப்பூழ் தூய தமிழ் இதை தொப்புள் என்று வழக்கு தமிழ் சொல்லப்படும் தாயின் துணையோடு பின்னபட்ட இந்த தொப்புள் தான் பிறப்பிற்கு ஆதாரம் ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொண்ட பெரிய பெருமாள் தொப்புள் இருந்து பிரம்மன் பிறந்ததாகவும் அவர் உலகத்தை உயிர்களை படைத்தாகவும் சொல்வது ஹரிபுராணம், அதனால் தொப்புள் லக்னம் ஆகும் தொப்புள் சூட்சம உடலின் முக்கிய பாகமாகும் அதாவது கொப்பூழிலிருந்து ஒரு ஜான் அளவு மேல் கீழ் செல்ல செல்ல ஆன்மிகத்தில் சொல்லபடும் ஆறு ஆதார ஸ்தலங்களை அடையாளம் காட்டும்.


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


0 Response to "நமது உடலின் ஒன்பது வாசல் - நவதுவாரங்களும் நவகிரகங்களும்…"

கருத்துரையிடுக

Powered by Blogger