ஆன்மீக எண்ணங்கள், இறைவன் பக்தி கொண்டவராக்கும் அமைப்புகள்….

ஆன்மீக எண்ணங்கள், இறைவன் பக்தி கொண்டவராக்கும் அமைப்புகள்….


ஜோதிடத்தில் மோட்ச யோகம், சந்நியாசி யோகம் அடிக்கடி பொதுவான அமைப்புகளை எடுத்து சொல்லவார்கள் அதை அப்படி எடுத்துக்கொள்ள கூடாது ஏனென்றால் மோட்ச யோகம், சந்நியாசி யோகம் என்பது எளிதாக அமையும் யோகம் அல்ல ஒவ்வொரு நூற்றாண்டுகளுக்கு சில விரல் விட்டு சொல்லக்கூடிய அல்லது ஒரு பக்கத்தில் எழுதக்கூடிய அளவுக்கு கூட உண்மையான ஞானிகளோ, ஞான மோட்சம் அடைந்த மகான்களோ வருவதில்லை இதுவே எதார்த்த உண்மை அதனால் பிறவிகளிலேயே அரிதான பிறப்பு மோட்ச பிறப்பு அவர்கள் இறப்பில்லாத மகான்கள் தன்னை இந்த பிரபஞ்ச சக்தியில் கலந்து கரையும் புண்ணிய அருளாற்றல் பெற்றவர்கள்

அதனால் சாதாரண மனிதர்களுக்கு மோட்ச யோகம், சந்நியாசி யோகம் போன்றவற்றை பேசுவதை விட நல்ல ஆன்மீக எண்ணங்கள் கொண்டவராக்கும் யோக அமைப்புகள் இருந்தாலே போதும் ஏனென்றால் அதன் மூலம் அடிப்படை ஒழுக்கம், இறைவன் பக்தியால் அடக்கம், தெய்வத்திற்கு பயந்தோ அல்லது அன்பின் காரணமாகவோ பெரிய பாபங்கள் செய்யாத குணங்களை கொடுக்கும் மேலும் இறைவனுக்கு அல்லது கோயில்களிலில் திருப்பணி மற்றும் மற்ற விஷயங்களில் ஆர்வமாகவும் உதவிகாரமாகவும்  இருப்பதன் மூலம் தவறான எண்ணங்களில் இருந்தும் சமூகத்தின் தீமை தரும் பக்கத்தில் இருந்தும் அவர் காப்பாற்ற படுவார் அதற்கு இறைபக்தியும் சேவையும் உதவும்.
  •  லக்னம், லக்னாதிபதி சுப வலிமை குறையாமல் 1,5,9,10 ல் அமர்ந்து
    குரு (வியாழன்) கோளால் பார்க்கபட்டால் அடிப்படை ஒழுக்கம், இறைவன் பக்தி, இறைவனின் அடியார்களை மதித்தல் போன்றவை ஏற்படும்.
  •  பொதுவாக லக்னம், லக்னாதிபதி, குரு அசுப வலிமை பெறாமல் இருப்பதும், 6,8,12 ஆம் ஸ்தானங்களில் போய் கெடாமல் இருப்பது அடிப்படையாக நல்லது.
இது முழுமை அல்ல இன்னும் எழுதலாம் இருந்தாலும் நேரம் கருதி நிறுத்தி உள்ளேன்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்



0 Response to "ஆன்மீக எண்ணங்கள், இறைவன் பக்தி கொண்டவராக்கும் அமைப்புகள்…."

கருத்துரையிடுக

Powered by Blogger