அன்னையர் தினம் - பசு தங்கம் புதுவெள்ளி மாணிக்கம் மணி வைரம்…

அன்னையர் தினம் - பசு தங்கம் புதுவெள்ளி மாணிக்கம் மணி வைரம்

அன்னையர்தினத்தில் அம்மாவின் சிறப்பை பற்றிய ஜோதிட பதிவாக இது அமைகிறது, தமிழ் என்பது அன்பின் மொழி பாசத்தின் மொழி இந்த மொழி உலகில் உள்ள உறவுகளுக்கெல்லாம் உயர்ந்த உறவாக தாயை கருதிதால் இந்த தமிழ் மொழி அம்மாவிற்கு தந்த பிற சொற்கள் அதிகம்

அம்மா, அன்னை, தாய், ஈன்றாள், அம்மை, பெற்றவள், ஆய், யாய், அம்பா, அயின்றாள், தன்னை, தந்தவள், நற்றாய், மோய், மொய் அப்பப்பா அடிக்கி கொண்டே போகலாம்

இந்து மத அடியார்கள் இறைவனுக்காக பாடிய பாடல்களில் முதலில் வரும் உறவும் இதுவே உதாரணமாக தாயும் நீயே தந்தையும் நீயே, தாயாகி தந்தையுமாய், அம்மை அப்பனாய், தாயும் தந்தை பல்லுயிர்க்கும் தாமே

இப்படி உயர்வாக பேசப்படும் உறவான தாய் அமையும் பலத்தையும் அந்த தாயின் ஆரோக்கியம் மற்றும் அவர்களின் நிலை ஆகியவற்றை காட்டும் ஸ்தானமாக இருப்பது முதன்மையான ஸ்தானம்

உங்களின் ஜென்ம லக்னித்தில் இருந்து 4 ஆம் ஸ்தானம் ஆகும், 4 ஆம் ஸ்தானாதிபதி சுப நட்புகிரகங்களின் வீடு சேர்க்கையோடு பலத்துடன் அமர்ந்தால் தாயின் ஆரோக்கியம், தாயின் பாசம், அரவணைப்பு, உணவு உடை உறைவிடம் நல்லவிதமாக அமையும், அவரது தாய் தான் கஷ்டபட்டாலும் தன் பிள்ளையை தளராமல் காப்பாள் அதுவே நல்லவிதமான ஆழமான பலத்துடன் 4 ஆம் ஸ்தானம் ஆகும் 4 ஆம் ஸ்தானாதிபதி நிலையிருந்தால் தாயும் பலமடைந்து தன் பிள்ளையையும் சீரும் சிறப்புமாக வளர்ப்பாள்.

உங்களின் தாயின் ஆரோக்கிய பலத்தை காட்டும் ஸ்தானம் உங்களின் ஜென்ம லக்னித்தில் இருந்து 2,6,7ஆம் ஸ்தானம் ஆகும் இங்கு பாபகிரகங்கள் மற்றும் தீய ஸ்தான வலிமை அடைய கூடாது.

உங்களின் தாயின் நோய்நொடிகளை சுட்டி காட்டும் ஸ்தானம் உங்களின் ஜென்ம லக்னித்தில் இருந்து 3, 9,11, ஆம் ஸ்தானம் ஆகும் இந்த ஸ்தானத்தை குரு, சுக்கிரன், சந்திரன் பார்வை பெறுவது நல்லது

உங்களின் தாயின் அதிர்ஷடங்களை இடையூறுகளையும் சுட்டி காட்டும் ஸ்தானம் உங்களின் ஜென்ம லக்னித்தில் இருந்து 2, 5, 7, ஆம் ஸ்தானம் ஆகும், இந்த ஸ்தானத்தில் சுபகிரகங்கள் அமைந்தால் தாயின் மூலமாக நமக்கு கிடைக்கும் நன்மைகளை பெறலாம்.

ஒருவரின் தனிபட்ட ஜாதகத்தில் தாய் ஸ்தானத்திற்கு காரகன் 4 ஆம் ஸ்தானாதிபதி ஆகும், மற்றும் பொதுவாக அனைவருக்கும் தாய் ஸதானத்திற்கு காரகனாக இருப்பது சந்திரன் பகவான் ஆகும், சில நூல்களில் பகலில் பிறந்தவருக்கு சுக்கிரன்  தாய் காரகன் என்றும், இரவில் பிறந்தவருக்கு சந்திரன்  தாய் காரகன் என்றும் கூறுகின்றன, எப்படியானாலும் தாய் ஸ்தான பலத்திற்கு முக்கியமாக இருப்பது  சந்திரன் பகவான் ஆகும்,

இந்த  சந்திரன் பகவான் சுப நட்புகிரகங்களின் வீடு சேர்க்கையோடு பலத்துடன் அமர்ந்தாலும் ஒரு குறிபிட்ட அளவு  தாய் ஸ்தானத்திற்கு நன்மை செய்வார் அதன் மூலம் அந்த ஜாதகருக்கும் நன்மை செய்வார்.

நான்காம் ஸ்தானாதிபதி நான்காம் ஸ்தானத்தில் ஆட்சி, உச்சம் பெற்று அமைவது மிக்க நல்லது ஆனால் அவர் பாதக ஸ்தானபதியாகவோ அல்லது அப்படி ஆட்சி, உச்சம் பெறும் கிரகத்துடன் இராகு, கேது சேர்ந்தாலும் தோஷம் தரும்.

நான்காம் ஸ்தானாதிபதி நான்காம் ஸ்தானத்தை குரு, சுக்கிரன், சந்திரன் பார்வை பெறுவது நல்லது அதுவே அவர்களின் வீடாகவும் இருந்த  மிகவும் நன்மையாகும்.

4ல் தனி கிரகமாக சுக்கிரன், சந்திரன், இராகு, கேது அமர்வது அவ்வளவு சுபமான பலன்களை தராமல் போக வாய்ப்பை ஏற்படுத்தி விடும்.

4ல் சனி, சந்திரன் சேர்ந்து அமர்வதுவும் அவ்வளவு சுபமான பலன்களை தராமல் போக வாய்ப்பை ஏற்படுத்தி விடும்.

நான்காம் ஸ்தானமும் ஐந்தாம் ஸ்தானாமும் அதன் ஸ்தானபதிகளும் நன்றாக அமைந்தால் தாய்வழி உறவுகளும் நன்றாக அமையும், நான்காம் ஸ்தானமும் ஏழாம் ஸ்தானாமும் அதன் ஸ்தானபதிகளும் நன்றாக அமைந்தால் திருமண வாழ்க்கையில் தாயின் ஒத்துழைப்பு, தாய்வழி உறவுகளில் மனைவி அமைவது போன்ற நற்பலன்கள் அமையும். இன்னும் தொடர்ந்து தாய் ஸ்தானங்களின் ஜோதிட கருத்துகளை பின் வரும் காலங்களின் பதிவுகளில் மெல்ல மெல்ல பார்ப்போம்.

அன்பாக நம்மை பேணி வளர்க்கும் தாயை அடையவும் அவ்வாறு அடைந்த பின் அந்த தாயின் ஆரோக்கியம் உள்ளம் அரவணைப்பை சிறப்பாக பெற்று வாழ என்னென்றும் அனைவருக்கும் அன்னையாக விளங்கும் மலைமகள், கலைமகள், அலைமகள் இவர்களின் சங்கமாக விளங்கும் ஆதிசக்திகளை வழிபட்டு நலம் பெற வாழ்த்துக்கள்.


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "அன்னையர் தினம் - பசு தங்கம் புதுவெள்ளி மாணிக்கம் மணி வைரம்…"

கருத்துரையிடுக

Powered by Blogger