முற்கால 12 இராசிகளுக்கு உரிய இடங்கள் மற்றும் நிலங்கள்….

முற்காலத்தில் கூறபட்ட 12 இராசிகளுக்கு உரிய இடங்கள் மற்றும் நிலங்கள்….

இது ஒரு ஜோதிட பழம் நூல் கூறும் 12 இராசிகளுக்கு உரிய இடங்கள் மற்றும் நிலங்கள் அதனால் அந்த காலத்திற்கு தக்கவாறு பிரிக்கபட்டுள்ளன தற்போது இதற்கு மறுவிளக்கம் செய்யபட்டுள்ளது இருந்தாலும் பழம் நூல் கூறுவதையும் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா. 12 இராசிகளுக்கு உரிய இடங்கள் நவீனமான விளக்கத்தை பின் ஒரு முறை பதிவு செய்கிறேன்.

1. மேஷம்: மலைகள், காடுகள், சூடான பிரதேசங்களில், கிராமங்கள்.
 
2. ரிஷபம்: மலை அடிவாரம், மாடு கட்டும் கூடம், விவசாய நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள்.
 
3. மிதுனம்: பூங்கா, தோட்டங்கள், சூதாட்டம், படுக்கை அறைகள், பெரிய மன்றங்கள்.
 
4. கடகம்: தண்ணீரால் சூழ்ந்த இடங்கள், விவசாய நிலங்கள், நதி ஓரங்கள், வண்டல் மண்.
 
5. சிம்மம்: குகைகள், மலைகள், காடுகள், பாறை பகுதி, செம்மண் பகுதிகள், மலைக்கோயில்கள்.
 
6. கன்னி : ரகசிய அறைகள், தொழிற்கூடங்கள், கடைகள், நகரங்கள்.
 
7. துலாம்: எல்லைப்புற கிராமங்கள், வணிக ஸ்தலங்கள், மண்டபங்கள்.
 
8. விருச்சிகம்: படுக்கை அறை, துளைகள், தரைக்கு கீழ் உள்ள சுரங்கங்கள், தொலைதூர கிராமங்கள்.
 
9. தனுசு: போர்க்களம், போர் பயிற்சிக்கூடங்கள், முட்புதர்கள், பாலைநிலம்.
 
10. மகரம்: நிலம் பாதி தண்ணீர் பாதி சுழப்பட்ட பகுதிகள், நன்னீர் வளமான பகுதிகள்.
 
11. கும்பம்: ரகசிய இடங்கள், கள்ளு கடை, சூதாட்டம், களிமண் பூமி, நீரோடை.
 
12. மீனம்: தண்ணீருக்கு அருகே இருக்கும் பகுதிகள் அல்லது தண்ணீரால் சுழப்பட்ட பகுதிகள்.

0 Response to "முற்கால 12 இராசிகளுக்கு உரிய இடங்கள் மற்றும் நிலங்கள்…."

கருத்துரையிடுக

Powered by Blogger