ரிஷபம் காட்டும் தொழில்கள் - உங்களின் தொழில் ஸ்தானம் காட்டும் தொழில்களும்…


ஜோதிடத்தில் ஒவ்வொருவரின் ஜாதகத்தை வைத்து அவரின் தொழில் வலிமையை பார்க்க பலவிதமான முறைகளை வழிகாட்டி சென்றுள்ளனர் நம் முன்னோர்கள் அதை பின்பற்றி பல புதிய தொழிலின் காரகத்துவங்களை கண்டு அறிய உதவியாக இருக்கிறது, ஒருவரின் ஜாதகத்தில் தொழில் வலிமையை காட்டும் ஸ்தானங்களாக கேந்திரங்கள் லக்னம் 4,7, 10 ஆம் ஸ்தானங்கள் உள்ளன, அதன் தொழில் யோகத்திற்கு உதவும் ஸ்தானங்களாக 5,9 உள்ளன, தொழிலின் பயிற்சிக்கு 3,9 ஆம் ஸ்தானங்கள் உள்ளன, தொழிலில் கடன் நிலைமை காட்டும் 6,8 ஆம் ஸ்தானங்கள் உள்ளன, தொழிலில் வரவை காட்டும் 2, 11 ஆம் ஸ்தானங்கள் உள்ளன, தொழிலில் செலவை காட்டும் 8, 12 ஆம் ஸ்தானங்கள் உள்ளன இப்படி ஒருவரின் தொழில் வலிமை அறிய இவ்வளவு அமைப்புக்கள் இருந்த போதும் அதற்கு ஆதார ஸ்தானமாக இருப்பது 10 ஆம் ஸ்தானம் என்னும் கர்ம ஸ்தானம் ஆகும்,

தொழில் வலிமை, எந்த வகை தொழில் போன்றவற்றை காட்டும் ஆதார ஸ்தானம் ஒருவரின் இராசி கட்டத்தில் லக்னத்தில் இருந்த எண்ண வரும் 10 வது ராசி ஸ்தானம் ஆகும், இந்த 10 வது ராசி ஸ்தானம்  மற்றும் இந்த 10 க்கு 10 வது ராசி ஸ்தானம், மற்றும் ஒருவரின் நவாம்ச லக்னத்திற்க்கு 10 வது ராசி ஸ்தானம், ஒருவரின் தசாம்ச லக்னம் மற்றும் அந்த லக்னத்திற்க் 10 வது ராசி ஸ்தானம், சந்திர லக்ன த்திற்க்கு 10 வது ராசி ஸ்தானம் என பல இராசி ஸ்தானங்களை பொருத்தே ஒருவரின் தொழில் வலிமை அமையும், அப்படி இருந்தாலும் எப்படியும் இந்த 10 ஆம் ஸ்தானங்கள் நமது 12 இராசி மண்டலத்தை தவிர வேறு ஒன்றிலும் வந்துவிட முடியாது எனவே ஒவ்வொரு இராசியும் காட்டு தொழில்களை தெரிந்து கொள்வதன் மூலம் யாரின் எந்த 10 ஆம் ஸ்தானம் வலுக்கிறதோ அதை ஒட்டி எவ்வகை தொழில் என்று அடையாளம் காண உதவும்.

பலநூல்கள் பல்வேறு வடிவங்களில் இராசிகள் குறிக்கும் தொழில் காரகத்துவங்களை கூறி உள்ளன, இதனால் உங்களை அதிகமாக குழப்பாமல் பலநூல்கள் கூறியுள்ளதை தொகுத்து உங்களின் 10 ஆம் ஸ்தானம் (கர்ம ஸ்தானம்) எந்த எந்த இராசியாக இருந்தால் எந்த எந்த தொழில் காரகத்துவங்கள் வரும் என்று வரிசையாக மேஷம் முதல் மீனம் வரை கூறவுள்ளேன் இனி ஒவ்வொரு இராசியாக பார்ப்போம், இது பல நவீன தொழிலில்கள் உருவாகி வரும் காலம் அதனால் நாம் அனுபவத்தின் மூலமும் ஒவ்வொரு இராசியின் காரகத்துவத்தை உற்று நோக்குவதன் மூலமாக புதிய நவீன தொழிலில்களின் காரகத்துவங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

ரிஷபம் -

பொன் வெள்ளி நகை வணிகம், கால்நடை பொருட்கள், கடன் கொடுப்பது, கமிஷன் ஏஜெண்ட், நிதி நிறுவனங்களில் பணி, கைவினை பொருட்கள், ஆடம்பரமான பொருட்கள், சுற்றுலா ஏஜெண்ட், வாசனை பொருட்கள், நட்சத்திர ஹோட்டல்கள், பூ வியாபாரம், பழச்சாறு கடை, நாடகம், சினிமா, இசை, கவிஞர், எழுத்தாளர், பதிப்பகம், பாடகர், நிதி சந்தைப்படுத்தல்,  திருமண ஏற்பாடு,  திருமண பொருட்கள் சார்ந்த சேவை மற்றும் வியாபாரம், நூற்பாளர்,  நூற்பாலை தயாரிப்பாளர் மற்றும் வியாபாரம், வாகன விற்பனை முகமம் முகவர், மேடை அலங்காரம், திரைப்படம் மற்றும் விளம்பர படங்கள் தயாரிப்பு, கணினி மூலம் விளம்பர பலகை உருவாக்கம், வங்கிப் பணிகள், சோதிடம் சத்சங்கம் ஆன்மீக உரைநிகழ்த்தல் ஆகியவற்றின் மூலம் வருமானம், உணவுப்பொருட்கள் விற்பனை, உணவு தானியங்கள் விற்பனை, மழலை பள்ளி சேவை, சுற்றுலா வாசஸ்தலம் அமைத்து வாடகை விடுதல், பத்திரங்கள் எழுத்துப்பணி, தூதுப் பணி.

இப்போது நாம் தொழில் என்ற உடன் ஆங்கிலம் தவிர்க்க முடியாது அதனால் இதன் ஆங்கில வடிவம் -

Gold And Silver Jewelry Business, Animal Products, Lending, Commission Agents, Financial Institutions Work, Handicrafts, Fancy Goods, Travel Agents, Spices, Star Hotels, Fruit Shops, Theater, Cinema, Music, Poet, Writer, Publisher, Singer, Financial Services, Wedding Organizing, Wedding Supplies And Service, Flower Wholesale, Spinner, Textile Producer And Wholesale, Auto Sales Agency, Make-Up, Stage Decorates, Film And Advertising Films Production, Computer Flex Board Creation , Banking Services, Astrology Satsang Spiritually Speaking, Food Outlets, Food Grains Sales, Infant School Services, Tourism Resort Built Rental, Massages, Bonds Writing, Messenger.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to " ரிஷபம் காட்டும் தொழில்கள் - உங்களின் தொழில் ஸ்தானம் காட்டும் தொழில்களும்…"

கருத்துரையிடுக

Powered by Blogger