12 ஸ்தானங்களில் அபோக்லிம ஸ்தானங்களின் தன்மைகளின் அடிப்படை…

லக்னத்திலிருந்து 12 ஸ்தானங்களையும் காரகத்துவ அடிப்படையில் ஜாதகத்தில் 1,4,7,10 ஆகிய ஸ்தானங்கள் கேந்திர ஸ்தானம் என்றும். அது போல் 1,5, 9 ஆகிய வீடுகள் திரிகோண ஸ்தானம் எனறும். 2,5,8,11 ஆம் இடங்கள் பணபர ஸ்தானம் என்றும். உபஜெய ஸ்தானம் என்பது 3,6,10,11 ஆகிய இடங்களாகும் பிரித்துள்ளனர் அதில் 3,6,9,12 ஆகிய வீடுகள் (ஸ்தானங்கள்) அபோக்லிமம் எனப்படும்.

கிருஷ்ண மூர்த்தி பத்ததி முறையில் கேந்திரம், பணபரம், அபோக்லிமம், உபஜெயம், திரிகோணம், மறைவு ஸ்தானம் போன்ற பாரம்பரிய பாவக பகுப்பு முறைகள் பொரும்பாலும் கடைபிடிக்க படுவதில்லை என்று சொல்லப்படுகிறது என்னை பொறுத்துமட்டில் எந்த முறையை பின்பற்றினாலும் இலக்கை அடைய வேண்டும் அது தான் முக்கியம் அதாவது துவைத்தின் வழியாக சென்றாலும் சரி விசிட்டாத்துவைத்தின் வழியாக சென்றாலும் சரி அல்லது அத்துவைத்த நிலையில் நின்றாலும் சரி எவ்வழியானாலும் முடிவில் இறைவனை உணர்வது தான் நோக்கம் என்பது போல் எந்த முறைகளை பின்பற்றி பார்த்தாலும் முடிவில் ஒரு தனிமனிதனின் வினை பலன்களை அறிந்தால் போதும் ஏன் இந்த விளக்க என்றால் சிலருக்கு இந்த பாவக முறை பிரிவுகளில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் அதற்குத்தான் இந்த விளக்கம்.

முதலில் சொன்னபடி அபோக்லிம ஸ்தானங்கள் என்பது லக்னத்திலிருந்து எண்ண வரும் 3,6,9,12 ஆம் ஸ்தானங்கள் ஆகும், அபோக்லிமம் என்றால் சமஸ்க்ருதத்தில் குறைவு, சரிவு, மற்றும் சிதைவு, அத்துடன் மாற்றம் ஏற்ப மாறும் திறன் என்றெல்லாம் பொருள் தருகின்றன ஆங்கிலத்தில் இதை cadent houses என்று கூறுகின்றனர் Cadent ஆங்கில மொழியில் "விலகிவிடும்" என்று பொருள், இதற்கு விரையம் அல்லது விலகிப்போகும் என்று பொருள் கொள்ளலாம் எதற்கு விரையமாகும் என்றால் நான் ஏற்கெனவே சொன்னபடி 1,4,7,10 நான்கு  கேந்திர ஸ்தானங்களும் மனித வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் நான்கு தூண்கள் அந்த கேந்திர ஸ்தானங்களுக்கு 12 ஆம் ஸ்தானங்கள் தான் 3,6,9,12 ஆம் ஸ்தானங்கள் அதனால் கேந்திர ஸ்தானங்களுக்கு சிதைவு விரையம் தருவது தான் இந்த அபோக்லிம ஸ்தானங்கள் அதாவது

 4 வது ஸ்தானம் வாழ்க்கையின் சுகபோகங்களை பிரதிபலிக்கும் ஸ்தானம் அதற்கு 12 ஆம் ஸ்தானம் தான் இந்த 3 ஆம் ஸ்தானம் என்பது அது அதிக அலைச்சல்கள், கடும் உழைப்பு அல்லது வீண் உழைப்பு போன்றவற்றை காட்டும்.

7 ஆம் ஸ்தானம் என்பது திருமண வாழ்க்கை, மனைவி (துணைவி), மனைவி பண்புகள், மற்றவர்கள் உங்களிடம் நடந்து கொள்ளும் முறை, கூட்டு வியாபாரம் என்று வைத்துக்கொண்டால் அதற்கு 12 ஆம் ஸ்தானம் தான் இந்த 6 ஆம் ஸ்தானம் என்பது அது வாழ்க்கை துணை மற்றும் கூட்டுறவில் வரும் மோதல்கள் மற்றும் உறவு இழப்புகளை காட்டும்.

10 ஆம் ஸ்தானம் என்பது வாழ்க்கையின் தொழில் ஸ்தானம் ஆகும் அதற்கு 12 ஆம் ஸ்தானம் தான் இந்த 9 ஆம் ஸ்தானம் என்பது சுப ஸ்தானம் தான் இருந்தாலும் தானதர்ம குணங்கள், தியாகம், தெய்வ பற்று காரணமாக தொழிலில் சிதைவு விரையம் தரும் ஆனால் இந்த வரிசை ஸ்தானங்களில் மிகவும் குறைவான தீயபலனை தான் தரும். பாதகாதிபத்தியம் பெற்றால் சற்று அதிக தீயபலன் விளையலாம்.

1 ஆம் ஸ்தானம் என்பது பொது வாழ்க்கையின் விதி கட்டமைப்பை காட்டும் ஸ்தானம் அதற்கு 12 ஆம் ஸ்தானம் தான் இந்த 12 ஆம் ஸ்தானம் என்பது அது பொது வாழ்க்கையின் கடன்கள், செலவுகள், தனிமை, மற்றும் நோய்கள் என உயிர் வாழ்க்கை சிதைவு விரையம் தருவது ஆகும்.

மேலும் இந்த அபோக்லிம ஸ்தானங்கள் வாழ்க்கையில் ஒருவரின் நெகிழ்வுத் தன்மை, சூழலுக்கு தக்கவாறு மாறும் திறன்கள் காட்டும் ஸ்தானங்களும் இவைகள் தான் 3,6 ஆம் ஸ்தானங்கள் ஒருவரின் உள்நாட்டு பயணங்கள் காட்டும், 9,12 ஆம் ஸ்தானங்கள் ஒருவரின் வெளிநாட்டு பயணங்கள் காட்டும் சூழலுக்கு தக்கவாறு மாறும் தன்மை கொண்ட கிரகங்கள் இங்கு நன்கு அமைய பயணங்களால் நன்மைகளும் மற்றும் நெகிழ்வுத் தன்மையால் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ளும் தன்மையும் கிடைக்கும்.

0 Response to "12 ஸ்தானங்களில் அபோக்லிம ஸ்தானங்களின் தன்மைகளின் அடிப்படை…"

கருத்துரையிடுக

Powered by Blogger