செவ்வாய், 19 ஜூலை, 2016

ஜாதகத்தில் மீனம் ராசியில் சூரியன் இருந்தால்...

ஜாதகத்தில் மீனத்தில் சூரியன் அமர்ந்தால் -

இயற்கையாக இது சூரியனுக்கு நட்பு தன்மையை ஏற்படுத்தும் இராசி அதனால் ஏதேனும் ஒன்றில் பக்குவப்பட்டவர்களாக நடந்து கொள்ளுதல்,  கற்று தேர்ந்தவர், இறையியலாளர், சாஸ்திர வல்லுநர், சிக்கல் தீர்க்கும் திறன் அதே போல சிக்கல் ஏற்படுத்தவும் திறன் இரண்டும் பெற்றவர், பாதுகாக்க உணர்வு அதிகம் உடையவர், அமைதியானவர் ஆனால் சற்று பிடிவாதமான ஆடம்பர அல்லது ஊதாரித்தனமான செலவுகளும் செய்யக்கூடியவர், புகழுக்கு பங்கம் அல்லது வித்தியாசமான புகழ்,  கண் பார்வை குறைபாடு, தெளிவான புரிதல் பெறுதல், கட்டளைக்கு கீழ்ப்படிதல், தலைமைதிறன் இழத்தல் அல்லது குறைந்து போதல், நன்கொடை அளிக்கும் தன்மை,  தன் கை பொருட்கள் கொண்டு நல்ல தர்மமான ஸ்தாபனங்களை அல்லது பொது நிறுவனங்களை ஏற்படுத்தவும் ஆற்றல் ஏற்படும், பொது விஷயங்களில் அதிகமாக தலையிடுவதானால் இவர்களுக்கு ரகசிய எதிரிகள் ஏற்படுவர், காலத்தால் சீக்கிரம் முடிக்க வேண்டிய விஷயங்களை தாமதமாகவே முடிப்பார். குரு பார்வையிருந்தால் மேலே சொன்ன நன்மைகள் உடன் புகழும் சேர வாழ்வில் நல்ல ஆலோசகர்கள் கிடைத்து உயர்வை அடைய மிகவும் உதவியாகவும் இருக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் இருந்தால் - கல்விமான், பாண்டித்தியம் பெற்றவர் அல்லது உலக அனுபவ அறிவு மிக்க பெற்றவர், முன்னோக்கி சிந்திக்கும் பார்க்கும் ஆற்றல் சற்று பெற்றவர், உறுதியான விஷயங்களை நாடுவார், நன்கொடை அளிக்கும் தன்மை.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் இருந்தால் - ரகசிய எதிரிகள் ஏற்படுவர், செயல்கள் தாமதமாகும், பொன் பொருட்கள் சேர்க்கையில் தோஷம் தரும், புகழுக்கு பங்கம் ஏற்படும், ஊதாரித்தனமான செலவு, இழப்பு இடையூறுகள் அதிகம், அதிக வேலை, ஏமாற்றம்.

ரேவதி நட்சத்திரத்தில் இருந்தால் - பக்குவப்பட்டவர்களாக நடந்து கொள்ளுதல்,  கற்று தேர்ந்தவர், பிரச்சினைகளில் இருந்து தப்பிச் செல்ல முயலுதல், செல்வாக்கானவர், ஆதரவு வழிகாட்டி கிடைக்கும் பின் முதிர்ந்த பக்குவம் ஏற்படும்.

குறிப்பு - சூரிய பகவான் இந்த மாத காலங்களில் பிறக்கும் அத்தனை குழந்தைக்கும் இந்த இராசியில் தான் இருப்பார் அதனால் சொல்லபட்ட பலன்கள் முழுமை போய் சேராது சூரிய பகவான் இராசிகளில் பல சூட்சம பலங்கள் வலிமையடையும் முறைகள் உள்ளன அந்த காலங்களில் பிறக்கும் ஒருவருக்கே பலன்கள் முழுமை போய் சேரும் அதே போலத்தான் தீமைகளும்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக