புதன், 27 ஜூலை, 2016

பாமரனின் மகிழச்சி - "கலியுகத்தில காசு வந்தாலே மகிழ்ச்சி வந்துடுயா"…

பாமரனின் மகிழச்சி - "கலியுகத்தில காசு வந்தாலே மகிழ்ச்சி வந்துடுயா"…


கபாலி படத்தின் தாக்கமாக இந்த மகிழ்ச்சி மகிழ்ச்சி என்ற வார்த்தையை அனைவரும் தற்போது சொல்லி வருகிறார்கள் இதை பற்றி எதார்த்தமாக பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு பெரியவர் என்னிடம் சொன்னார் இந்த வாசகத்தை "கலியுகத்தில காசு வந்தாலே மகிழ்ச்சி வந்துடுயா" என்று இந்த வாசகத்தில் எனக்கு உடன்பாடு குறைவானாலும் அந்த மனிதரின் எதார்த்தமும் தற்போது பலருக்கு இது போல உணர்வு இருந்து வருவதையும் மறுக்க முடியாது, ஒரு மனிதரை பார்த்து "அவர் பாருங்க காசு வந்ததும் சும்மா பளபளணு ஆயிட்டார்" என்றும் "அவனுக்கு என்னப்பா காசு வந்ததும் ஆளே மாறிட்டான்" என பல்வேறு வாசகங்களை நமது அன்றாட வாழ்வில் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.

காசு என்றால் பொன், பணம், ரோக்கம், நாணயம் என்றெல்லாம் பொருள் வரும் சொல்லாகும் இந்த காசு வரும் யோகத்தை ஜோதிடத்தில் தனயோகம் என்று அழைப்பார்கள் இதில் வரும் தனம் என்ற சொல்லுக்கு பணம், பரிசு, சொத்து, செல்வம், மூலதனம், புதையல் என்றெல்லாம் அர்த்தம் வரும், இந்த பொருளாதார போட்டி உலகத்தில் தனயோகத்தை ஒருவரின் ஜாதகத்தை ஆய்து தான் முடிவுக்கு வர வேண்டும் இருந்தாலும் பொதுவான ஒரளவுக்கு பலன் தரும் அடிப்படை தனயோகங்கள் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக