மேஷம் & கடகம், மேஷம் vs கடகம் - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…



ஜோதிடத்திற்கு என்று வலைபதிவு தொடங்கி காலத்தில் இருந்து நான் ஜோதிடத்தை பற்றிய கல்வி குறைவாக உள்ளவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஆழமாகவோ அல்லது முக்கிய குறிப்புகளை மட்டும் வாசிக்க விரும்புபவர்களுக்கும் சரி என அனைவருக்குமாகவே எழுதிக்கொண்டு வருகிறேன், சில ஆய்வு ஜோதிட கட்டுரைகள் ஜோதிடத்தை ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்கள் மட்டும் அதாவது குறைவான பேர்கள் வாசித்தாலும் அதை எழுதுவதையும் விடாமல் அதே நேரத்தில் அதிகமான பேர்கள் வாசிக்கிறார்கள் என்பதற்க்காக பொதுவான  ஜோதிட விஷயங்களை மட்டும் எழுதிக்கொண்டு இருக்காமல் என்னால் முடிந்த அளவு அனைத்து விஷயங்களும் வருவிதமாக வலைதளத்தை கொண்டு சென்று உள்ளேன் அது தங்களுக்கு தெரிந்திருக்கலாம் இப்போது நாம் பார்க்க உள்ள தொடர்

பாரம்பரிய திருமணம் என்ற உடன் தான் பொருத்தம் என்ற விஷயங்கள் வரும் ஆனால் மனம் ஒத்த காதலர்கள்  அல்லது காதலாக பழகி கொண்டிருப்பவர்கள், வெவ்வெறு பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி மற்றும் ஒரே பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி இந்த நட்பு, காதல் 12 இராசிக்கு இடையே ஏற்படும் போது அது எவ்வாறு அமையும் அதன் பலம் பலவீனம் என்ன என்று விளக்குவதே இந்த தொடர் பதிவு ஆகும்.

உதாரணமாக ஒருவர் மேஷம் இராசியாக இருந்து அவரின் நண்பரோ அல்லது காதலரோ கடகம் இராசியாக இருந்தால் அவர்களுக்கு இடையே ஏற்படும் நட்பு, காதல் பலம் பலவீனம் என்ன என்று பார்க்க உள்ளோம்.

மேஷம் & கடகம், மேஷம் vs கடகம்
இந்த மேஷ கடக ராசிக்காரகளுக்குமிடையே ஒரு நட்போ அல்லது காதலோ அமையும் போது அந்த கூட்டு சற்று எதிர் தன்மை கொண்ட அமைப்பு, மேஷம் சற்று செருக்கு மற்றும் அவசரத்தன்மை உள்ள ராசி கடகம் பாசத்தன்மையும் மற்றும் உணர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் ராசி. மேஷ ராசி துடுக்கானா வேகமான நடத்தை கடக இராசி சிலசமயங்களுக்கு உணர்ச்சி கொந்தளிப்புக்கு விட்டுச்செல்லும். கடக இராசிக்காரர்கள் பொதுவாக வணிக நடவடிக்கைகள் மற்றும் உறவுகளுக்குள்ளான முடிவுகளை கொஞ்சம் அதிக நேரம் எடுத்து தான் முடிவுகளை எடுப்பார்கள் ஆனால் மேஷமோ சீக்கிர ஆலோசனை உடனடி முடிவுகளை எடுப்பார்கள்.

நன்றாக அமைந்தால் மேஷத்தின் வெளிப்படையான உறவுகளின் அணுகுமுறைகள் கடக இராசிக்கு ஒத்துபோக கூடியதாகவும் கடகத்தின் அனைவரையும் அரவணைத்து செல்லும் அணுகுமுறைகள் மேஷ இராசிக்கு பயன் தரக் கூடியதாகவும் அமையும். கடக ராசியிடம் மனநிலை ஊசலாட்டம் அதிகமாக இருக்கும் அந்த சமயம் மேஷத்தின் அதிக ஆக்கிரமிப்பு தன்மையும் வெளிபட்டால் சில சமயங்களில் பிரச்சனைகள் ஏற்படலாம் இதனால் இரண்டு ராசிகளும் தங்கள் நண்பர்கள் எண்ணங்களை அதிக நேரம் பொறுமையாக கேட்க வேண்டும் ஒவ்வொருவரின் பார்க்கும் நோக்கங்களையும் கேட்டு பகிரவேண்டும்.

மேஷம் ராசியின் சவால்களை எதிர்கொள்ளும் திறனும் பாதுகாப்பு உணர்வும் கடக ராசியின் அரவணைப்பு உணர்வு மற்றும் வீட்டு அக்கறை இந்த இரண்டும் நல்லவிதமாக சேர ஒருவரை ஒருவர் அவர்களை பாதுகாப்பாகவும் நன்கு கவனித்து கொள்ள உதவும் இதன் மூலமாக சந்தோஷம், விருந்தோம்பும் பண்பு மற்றும் உறவுப் பாதுகாப்பு ஏற்படும். பொதுவாக கடக இராசிக்கு கற்பனைத் திறன்கள் அதிகம் அதனால் மேஷ ராசிக்காரர்கள் அது உபயோகம் மற்றதாக இருந்தாலும் அதை அன்போடு அணுக வேண்டும். மேஷ ராசிக்காரர்கள் கடகத்தை போல் அதிக உணர்ச்சிவசப்படுபவர்கள் இல்லை ஆனால் ஏதேனும் ஒரு உணர்ச்சி ஆழமாக வெளிபடுத்தக்கூடியவர்கள் அதனால் அவர்களிடம் கடக இராசிக்காரர் மென்மையாக பக்குவமான சமயங்களிலில் தான் உணர்வசமான கருத்துகளை பேச வேண்டும்.

கடகம் நண்டு இராசி என்பதால் ஆழமான உள்ளுணர்வு உள்ளவர்கள் அதனால் அவர்களின் ஆலோசனைகள் மேஷத்திற்க்கு திட்டமிடல் பற்றாக்குறையால் வரும் சிறு தவறுகள் தடுத்து மோசமான முடிவுகளை தவிர்க்க உதவும். மேஷத்திற்கு 4 ஆம் கேந்திர ராசியாக கடகமும் கடகத்திற்கு மேஷம் 10 ஆம் கேந்திர ராசியாக இருப்பதால் இரண்டும் நல்லவிதமாக சேர இருவருக்குள்ளும் மதிப்பு மற்றும் மரியாதை தரக்கூடிய பயனுள்ள உறவாக அமையும், இது ஆண் பெண் உறவானால் அது ஒத்த கொடுத்து வாங்கல் உள்ள பாச உணர்வான பிணைப்பாக இருக்கும்.

மேஷம் இராசிநாதன் செவ்வாய் மற்றும் கடகம் சந்திரன் இராசிநாதன் ஆகும் இந்த கிரகங்களில் செவ்வாய் அதீத ஆர்வமுடைய குணம் மற்றும் செயல்திறனையும் சந்திரன் பெண்மை சக்தி மற்றும் தேடும் திறன் குறிக்கின்றன, செவ்வாயும் சந்திரனும் நட்பு கிரகங்கள் இதனால் இருவருக்கும் கற்றுக்கொள்ளும் ஆர்வம், உணர்ச்சிப் பசப்பான பழக்கம், வலுவான முயற்சிகளை செய்யும் நம்பிக்கை ஆகியவையின் கலவையாக இருக்கும், பாதிக்க பட்டால் பாராட்டுகிற தன்மை போய் உணர்ச்சிப் போராட்டம் அதிகம் இருக்கும்.

மேஷம் ஒரு நெருப்பு இராசியாகும் மற்றும் கடகம் ஒரு நீர்த் தன்மை கொண்ட இராசியாகும் அதனால் இந்த இருவரும் நட்பால் அல்லது காதலால் இணையும் போது இது ஒரு வித்தியாசமான சிறந்த குணக் கலப்பாகும் அதாவது கடகம் மேஷத்திற்கு மெதுவாக மற்றும் மென்மையான இருக்க கற்றுக்கொடுக்கும் மாறாக மேஷம் கடகத்திற்கு வாழ்க்கையை பயனுள்ள வகையில் அணுக கற்றுக்கொடுக்கும், அதே நேரத்தில்  மிகவும் அதிகமாக பழகும் போது நெருப்பும் நீரும் அதிமாக ஏற்படுவதை போல ஒரு கொந்தளிப்பான உறவு அணுகமுறைகளை ஏற்படுத்தும் அதனால் சமமான பழக்கமே உதவும்.

மேஷம் கடகம் இரண்டும் சர இராசியாகும் அதனால் நண்பர்களும் அல்லது காதலர்களும் அடிக்கடி பயணகங்கள், சந்திப்புகள் செய்யக்கூடியவர்கள், தளர்ந்து விடாமல் பொறுப்பாக சவாலை சந்திப்பார்.  பாதிக்க பட்டால் ஆதிக்க மனபான்மைகள், பொறுப்புக்களை மறைக்கும் தன்மை, உணர்ச்சிவயப்பட்ட நிலைகள் காரணமாக உறவுகள் பிரிவில் முடிய வாய்ப்பாகும்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "மேஷம் & கடகம், மேஷம் vs கடகம் - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…"

கருத்துரையிடுக

Powered by Blogger