அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler) ஜாதகம் கணிப்பு - பகுதி 2...

அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler) ஜாதகம் கணிப்பு பகுதி 2...

அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler) ஜாதகம்

அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler) ஜாதகம் கணிப்பு - உலக சர்வாதிகாரி, வில்லன்களின் கதாநாயகன் பகுதி 1 ...

ஹிட்லரின் வீரியமான பாபசெவ்வாயின் ஆட்சி பெற்று பார்க்கும் பார்வை மற்றும் இன்னொரு பாப சூரியன் உச்சம் பெற்று பார்க்கும் பார்வை இதனுடன் லக்னாதிபதி யோகாதிபதியான புதனும் சுக்கிரனும் சேர்ந்து பார்வையும் பெற்ற வாக்கு ஸ்தானம் அதனால் போர்குண பேச்சு மற்றும் ஈர்க்கும் பேச்சாற்றல் 2,9 க்குடைய சுக்கிரனின் பார்வையால் மக்களை ஒருங்கிணைக்கும் ஆற்றல் அதில் ஏற்பட்டது ஆட்சி பெற்ற குரு இரண்டாம் ஸ்தனாதிபதியை பார்ப்பதால் இது மேலும் வலுவானது. இதனால் சிறுகுழுக்களால் ஆரம்பிக்கபட்ட ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் ஒரு உறுப்பினராக சேர்ந்தார் பின் கட்சிப் பணியில் தன் முழுக்கவனத்தையும் செலுத்துவதற்காக ஹிட்லர் இராணுவப்பணியை கைவிட்டார். தன் பேச்சுத்திறமையை கட்சி செயல்வீரர்களை கவர்ந்தார். இதனால் கட்சியில் அவரின் செல்வாக்கு உயர பின் சீரிய வேகத்தில் தனது பேச்சு வல்லமையால் கட்சித் தலைவரும் ஆனார்.

மேற்கத்திய ஜோதிடத்தில் தொடர்பாடல் (Communication) கலை ஸ்தானமாக மூன்றாம் ஸ்தானம் சொல்லபட்டுள்ளது நமது ஜோதிடத்திலும் இது மறைவாக சொல்லப்பட்டுள்ளது இதற்கு அதிபதியான செவ்வாய் வாக்கு ஸ்தானத்தை பலமாக 7ஆம் பார்வை பார்க்கிறார் அதாவது இராசி அம்சம் இரண்டில் ஆட்சி ஆகிறார் அது போதுமா இதோ கிழே உள்ள 2ஆம் இராசிமானம் இதில் செவ்வாய் 2ல் உச்சம் அடைகின்றார் மற்றும் அதுபோக மற்ற வர்க்க சக்கரங்களில் அதிக அளவில் செவ்வாய் ஆட்சி உச்சம் அடைக்கிறார்

 
அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மையால் தான் நாட்டில் வறுமையும், வேலை இல்லாத் திண்டாட்டமும் பெருகிவிட்டதாகவும் உணர்ச்சிப் பிழம்பாய், உடல் நடுங்க, கண்கள் கலங்க, கைகள் ஆவேசம் காட்ட ஹிட்லர் ஆற்றும் உரையினால் அப்போதைய ஜெர்மானிய மக்கள் கூட்டம் உணர்ச்சிவசப்பட்டு பரவசத்துடன் ஆராவாரம் செய்யும் இதன் பக்க விளைவாக தனது பேச்சாலேயே அப்போதைய அரசால் கைது செய்யவும் பட்டார் சிறையிலிருந்த போது "எனது போராட்டம்"என்ற பெயரில் தன் சுயசரிதையை எழுதினார்.

ஹிட்லர் சிறையிலிருந்த போது நடந்த தேர்தலில் ஜெர்மன் தொழிலாளர் கட்சி தோல்வியுற்றது பின் அவர் வெளியில் வந்த பின் கட்சியின் பெயரை "நாசிக்"கட்சி என்று மாற்றினார் ஹிட்லரின் இடைவிடாத உழைப்பும் பேச்சுத் திறனும் ஆட்சி பெற்ற இராகு கேது தொடர்பில் உள்ள குருசண்டாள குருவின் அரசியல் இராஜ தந்திரத்தினாலும் ஆட்சிக்கு எதிராக மக்ககள் கிளர்ந்து எழ செய்து பெரும் போராட்டத்தில் ஈடுபடுத்தினார்.

அப்போதைய ஜனாதிபதியாக இருந்தவர் மக்கள் போராட்டத்துக்கு அடிபணிந்தார். 1933 ஜனவரி 30 ஆம் தேதி அதாவது வீரியமான பாபசெவ்வாயின் திசையிலேயே ஹிட்லரை பிரதமராக அப்போதைய ஜனாதிபதி நியமிக்க பட்டார். பிரதமராக இவர் பதவி ஏற்ற ஒன்றரை வருடத்தில் ஜனாதிபதி ஹில்டன் பேர்க் மரணமடைந்தார்.
அதனால் ஜனாதிபதி பதவியையும் கைப்பற்றிக்கொண்டு ஜெர்மனின் சர்வாதிகாரியானார் எல்லாம் செவ்வாயின் திசையில் நடந்தெறியது.

ஆட்சி பெற்ற இராகு கேது தொடர்பில் உள்ள குருசண்டாள குருவின் சாரம் பெற்று இனி வந்த இராகுவின் திசையில் ஹிட்லரின் உச்சமும் வீழ்ச்சியும் நடந்து முடிந்தது அதாவது இராகுவின் திசையில் தான் பாராளுமன்றத்தை கலைத்தார், இராணுவ திணைக்களத்தினையும், இராணுவ தளபதி பதவியினையும் தானே ஏற்றுக்கொண்டார். அரசியல் கட்சிகள் எல்லாவற்றையும் தடை செய்தார். இனிமேல் ஜெர்மனியில் ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடமில்லை என அறிவித்தார்.


பாபசெவ்வாய் ஆட்சி இன்னொரு பாப சூரியன் உச்சம் பெற்று பாப ஸ்தானமான 8ல் வலிமை அடைந்தது மட்டுமல்லாமல் லக்னத்திற்கு 8ஆம் நட்சத்திரதில் அதுவும் ஒரே நட்சத்திரத்திற்குள்  சண்டாள குருவுடன் சேர்ந்து விஷசெம்பாம்பான கேதுவால் சந்திரனும் பாதிக்க பட்டதால் சிறிது இரக்கமற்றவராக ஆனார் இதனால் அவரிடம் ஆழமாக பதிந்து போன யூதபகைமையால் யூதர்களை அடியோடு அழிக்க முனைந்து அப்பாவி யூதர்களையும் கொன்று குவித்தார், முதலாளித்துவ பகைமை, மார்க்சிய பகைமையின் காரணமாக இரண்டாம் உலக யுத்தத்தை தொடங்கி வைத்தார்.

நான் எப்போது ஒருவரின் மறுபக்கத்தையும் பார்க்க கூடியவன் என்ன தான் ஹிட்லர் மற்ற மக்களுக்கும் தன் நாட்டின் எதிரிகளுக்கும் எதிர்ப்பாளர்களுக்கு அரக்கனாக தெரிந்தாலும் அவரின் ஆட்சி காலத்தில் பல நன்மைகளை தனது நாட்டிற்கு அவரின் தேச பக்தியால் செய்தார் செவ்வாய் ஆட்சி சூரியன் உச்சம் உடன் 1,10க்குடைய புதனும் சேர்ந்து அமையும் இந்த அமைப்பு நிர்வாகத்திறமைகளை கொடுக்கும் யோகம் ஆகும் அதனால் ஹிட்லரின் ஆட்சியில் முக்கியமாக நாட்டின் பொது கட்டுமானத்துறையில் பெரிய சாலை வசதி, பாலங்கள், அணைகள், கால்வாய்கள், துறைமுக வசதிகள் உருவானது. பொது நலன்புரி திட்டங்கள், பல வலி நிவாரணிகள், போதைப் பொருள் பழக்க மீட்பு மருந்துகள், பெண்களுக்கும் ராணுவத்தில் பணி, விபசார தடுப்பு, மிருகவதை தடுப்பு சட்டம், விஞ்ஞானம், விண்வெளி, இயந்திரவியல் துறையில் பல சாதனை கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கியாக இருந்தார்

என்ன இருந்தாலும் போர்கள் அதுவும் அதர்ம போர்கள் என்பது மிகக் கொடுமையான பாபத்தையும் அழிவையும் நாட்டுக்கும் அதை தலைமை ஏற்று நடத்தும் தலைவருக்கும் கொண்டு வந்து கொடுத்து விடும் என்பது மாறாத இறை விதி ஹிட்லர் இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பத்தார் யுத்தத்தின் ஆரம்பத்தில் ஹிட்லரின் கை ஓங்கியிருந்தாலும். ஆனால் போரில் அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்த பின்பு நிலைமை மாறியது, ஜெர்மனி வீழ்ந்தது. மராகாதிபதி சந்திரனை இராகு பார்ப்பதும் சனி செவ்வாய் ஒருவரை ஒருவர் பார்ப்பதும் சேர துர்மரணம் என்பது பொது விதி சந்திரன் செவ்வாய் சாரநாதன் சுக்கிரனின் அதாவது ராகு திசை சுக்கிரன் புத்தியில் துர்மரணம் அடைந்தார். இந்த உலகில் ஒன்றே ஒன்றை சம்பாதித்தால் மட்டுமே மகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் வாழவும் இறக்கவும் முடியும் அது நிபந்தனைகளும் எல்லைகளும் அற்ற "அன்பு".
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

1 Response to "அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler) ஜாதகம் கணிப்பு - பகுதி 2..."

  1. Unknown says:

    ஐயா ராசிமானம் கட்டத்தை எவ்வாறு கணிப்பது . ராசிக்கும் ராசிமானம் கட்டத்துக்கும் என்ன பலன் வேறுபாடு

கருத்துரையிடுக

Powered by Blogger