ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

நவகிரக காரகத்துவ ஸ்தலங்கள் - சந்திரன்...

நவகிரக காரகத்துவ ஸ்தலங்கள் - சந்திரன்...

நவகிரகங்களும் தங்கள் தங்கள் ஆதிக்கம் அதிகம் காட்டும் இடங்களாக பிரித்து சொல்லும் ஒரு சமஸ்கிருத நூலின் மொழி பெயர்ப்பாக வந்த ஒரு பழம் தமிழ் நூலின் சில குறிப்பிட்ட இந்த பகுதி மட்டும் கிடைத்தது அதை தங்களின் முன் இந்த வலைபதிவின் மூலம் பதிவிக்கிறேன்.

மதிபதி தேவன் வியாபிக்கும் காரகதலங்கள் மலையோடை
நதி பாதை ஏரி குளம் நீர்கால் தேக்கமும் நாட்டில் சத்திரம்
ஆதித்தாய் பார்வதியார் கோயில் வயல் வாய்கால் நீர்கழிவு
வீதி கிராமத் தோட்டம் மதிபதி தேவன் காரகதலங்களாம்.
- கிரகபதி சந்தம்

பொருள் - சந்திரனின் ஆதிக்கம் அதிகம் காட்டும் பூமியின் தலங்கள் ஆவன மலை ஓடைகள், ஆறு மற்றும் ஆறு ஓடும் வழித்தடங்கள், ஏரிகள், குளங்கள், கால்வாய்கள், நீர் தேக்கங்கள், நீச்சல் குளங்கள், நாட்டில் பொது மண்டபங்கள் மற்றும் பயணிகள் இல்லம், பார்வதி (அம்மாள், அம்மன்) கோயில்கள், வயல் வாய்கால்கள், நீர் கழிவுத்தொட்டிகள், வீதிகள், கிராம தோட்டங்கள் சந்திரனின் ஆதிக்கம் அதிகம் காட்டும் பூமியின் தலங்கள் ஆகும்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக