திசாபுத்தி கணிதமுறையின் பகுதி 7 - சுக்கிரன் (வெள்ளி) திசாபுத்தியின் காலக்கட்டங்கள்…

திசாபுத்தி கணிதமுறையின் பகுதி 7 - சுக்கிரன் (வெள்ளி) திசாபுத்தியின் காலக்கட்டங்கள்

இந்திய ஜோதிட கணித சாஸ்திரத்திற்கு சிறப்பு சேர்க்கும் ஜோதிட கணித முறைகளில் இந்த திசா கணிதமுறை ஜோதிட பலன்களை நிர்ணயிப்பதில் திசாபுத்தி கணக்கிட்டு அறிவது என்பது பிரதானமானது, இந்த திசாபுத்தி கணக்கிட்டு பலன் அறியாமல் மற்ற பலன்கள் சொல்வது என்பது காலில்லாத உடலுக்கு சமம் என்று சொல்லாம், காரணம் ஜாதக பலன்கள் யாவும் திசாபுத்தி காலக்கட்டங்களின் படிதான் நடைபெறுகிறது. நவகிரகங்களும் தங்களின் பலாபலன்களை அவர் அவர்க்குரிய திசாபுத்தி காலக்கட்டங்களில் தான் வழங்குகின்றன எனவே தான் சொன்னேன் திசாபுத்தி அறியாது பலன் சொல்வது காலில்லாத உடலுக்கு சமம் என்று. இதன் படி நாம் இப்போது பார்க்க இருப்பது ஒவ்வொரு கிரகத்தின் திசா மற்றும் அதன் புத்தியின் காலக்கட்டங்களின் அளவுகள்.

ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் தொட்டு ஒருவரின் திசாபுத்திகள் தொடங்கும் உதாரணமாக ஒருவர் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களில் ஒருவர் பிறந்தால் அவருக்கு சுக்கிரன் திசை முதலாவதாக கொண்டு திசாபுத்தி வயது காலகட்டங்கள் தொடங்கும் அதில் தாயின் கர்ப்பத்தில் குழந்தை இருந்த காலத்தை சுக்கிரன் திசையில் கழித்து மீதி சுக்கிரன் திசை நடக்கும் அதனால் சுக்கிரன் திசை முதலாவது திசையாக தொடங்கினால் அது முழுமையான இருபது ஆண்டுகள் நடப்பில் இருக்காது.

சுக்கிரனுக்குரிய நட்சத்திரங்கள் மற்றும் திசையின் ஆண்டுகள் -

நட்சத்திரம்
நட்சத்திரத்திற்கு உரிய கிரக திசைகள்
கிரக திசையின் ஆண்டுகள்
பரணி
சுக்கிரன் திசை
20 ஆண்டுகள்
பூரம்
சுக்கிரன் திசை
20 ஆண்டுகள்
பூராடம்
சுக்கிரன் திசை
20 ஆண்டுகள்

சுக்கிரன் திசையில் சுக்கிரன் உள்ளபட மற்ற கிரகங்களின் புத்திகள் கால அளவுகள் -

எந்த கிரகத்தின் திசை தொடங்குகிறதோ அந்த கிரகத்தின் புத்தி தான் முதலாவதாக வரும்.

சுக்கிரனின் திசை 20 ஆண்டுகள் = 7200 நாட்கள் = 172800 மணி நேரம்

சுக்கிரன்
திசை
7200
20 வருடம், 0 மாதம், 0 நாட்கள்
சுக்கிரன்
புத்தி
1200
3 வருடம், 4 மாதம், 0 நாட்கள்
சூரியன்
புத்தி
360
1 வருடம், 0 மாதம், 0 நாட்கள்
சந்திரன்
புத்தி
600
1 வருடம், 8 மாதம், 0 நாட்கள்
செவ்வாய்
புத்தி
420
1 வருடம், 2 மாதம், 0 நாட்கள்
ராகு
புத்தி
1080
3 வருடம், 0 மாதம், 0 நாட்கள்
குரு
புத்தி
960
2 வருடம், 8 மாதம், 0 நாட்கள்
சனி
புத்தி
1140
3 வருடம், 2 மாதம், 0 நாட்கள்
புதன்
புத்தி
1020
2 வருடம், 10 மாதம், 0 நாட்கள்
கேது
புத்தி
420
1 வருடம், 2 மாதம், 0 நாட்கள்

ஒருவருக்கு கேது திசை நடப்பு திசையாக இருந்து கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம் அந்த திசையின் 7 ஆண்டுகள் முடிந்தால் அடுத்ததாக அவர் அப்போது இருக்கும் வயதில் இருந்து தொடங்கி சுக்கிரன் திசையின் 20 ஆண்டுகள் முழுமையாக நடக்கும்.

உதாரணமாக சுக்கிரன் திசை ஒருவருக்கு அவரின் வயது 13 வருடம், 10 மாதம், 10 நாட்களில் ஆரம்பம் ஆகிறது என்று வைத்துக்கொள்வோம் அப்போது அவருக்கு தொடந்து நடக்கும் புத்திகளின் வயது காலகட்டங்கள் விவரம் பின்வருமாறு காலகட்டங்களில் வரும்.

சுக்கிரன்
திசை
4990
13 , 10 , 10
சுக்கிரன்-திசை-சுக்கிரன்-புத்தி
புத்தி
6190
17 , 2 , 10
சுக்கிரன்-திசை-சூரியன்-புத்தி
புத்தி
6550
18 , 2 , 10
சுக்கிரன்-திசை-சந்திரன்-புத்தி
புத்தி
7150
19 , 10 , 10
சுக்கிரன்-திசை-செவ்வாய்-புத்தி
புத்தி
7570
21 , 0 , 10
சுக்கிரன்-திசை-இராகு-புத்தி
புத்தி
8650
24 , 0 , 10
சுக்கிரன்-திசை-குரு-புத்தி
புத்தி
9610
26 , 8 , 10
சுக்கிரன்-திசை-சனி-புத்தி
புத்தி
10750
29 , 10 , 10
சுக்கிரன்-திசை-புதன்-புத்தி
புத்தி
11770
32 , 8 , 10
சுக்கிரன்-திசை-கேது-புத்தி
புத்தி
12190
33 , 10 , 10

திசாபுத்தி கணிதத்தில் சிலர் வருடத்திற்கு 360 நாட்கள் என்று கணக்கிடுபவர்களும் உண்டு நான் மேலே கொடுத்து வருவது வருடத்திற்கு 360 நாட்கள் என்ற கணிதம் சிலர் வருடத்திற்கு 365  நாட்கள் என்று கணக்கிடுபவர்களும் உண்டு.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "திசாபுத்தி கணிதமுறையின் பகுதி 7 - சுக்கிரன் (வெள்ளி) திசாபுத்தியின் காலக்கட்டங்கள்…"

கருத்துரையிடுக

Powered by Blogger