ஞாயிறு, 2 அக்டோபர், 2016

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்...

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்...மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள்...

நட்சத்திரம் - மிருகசீரிஷம்
நட்சத்திர ஆதிபத்ய கிரகம் - செவ்வாய்
நட்சத்திர அதிதேவதைகள்  - சோமன் (சந்திரன்)
நட்சத்திர யோனி - பெண் பாம்பு
நட்சத்திர கணம் - தேவ கணம்
நட்சத்திர பூதம் - நெருப்பு, நீர்
இராசி சக்கரம் இருப்பு பாகை - 53:20:00 முதல் 66:40:00 பாகை வரை
இராசி இருப்பு - மிருகசீரிஷம் 1,2 ஆம் பாதம் = ரிஷபம், மிருகசீரிஷம் 3,4 ஆம் பாதம் = மிதுனம்
இராசி நாதன் - மிருகசீரிஷம் 1,2 ஆம் பாதம் = சுக்கிரன், மிருகசீரிஷம் 3,4 ஆம் பாதம் = புதன்

சந்திரன் இந்த நட்சத்திரத்தில் பயணிக்கும் காலத்தில் பிறந்தவர்களுக்கு மிருகசீரிஷம் நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரமாகும். ஜென்ம இராசி மிருகசீரிஷம் 1,2 ஆம் பாதம் ஆனால் ரிஷபம் இராசியும், மிருகசீரிஷம் 3,4 ஆம் பாதம் ஆனால் மிதுனம் இராசியாகும்.
ஏன் சந்திரன் - சந்திரனே மனசுக்கு காரன் மற்றும் உடல்காரகனும் இந்த கிரகம் தான் அதனால் தான் ஒவ்வொரு மனிதனின் மன குண இயக்கத்தை பார்க்க ஜோதிடத்தில் பெரிதும் பயன்படுத்தபடுகிறது.

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள் -

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பொதுவான உணவு நாட்டங்கள் மற்றும் சுவை விருப்பங்கள் -
காரம், சுவை கூட்டபட்ட உணவுகள், பால், பால் சார்ந்த இனிப்புகளில் பிரியம், சூடான இனிப்பு உணவுகள், பழச்சாறுகள், நீர்சத்துள்ள காய்கறி உணவுகள், அளவான முட்டை, இறைச்சி, மீன், அதிகமாக வேக வைத்த உணவுகள், ஆவியில் உண்டான உணவுகள்,  இயற்கை வண்ணங்கள் கொண்ட உணவுகள், நார்ச்சத்துள்ள உணவுகள்,  இவர்களுக்கு சூடான உணவுகளும் அதே சமயம் குளிர்ந்த உணவுகளும் இரண்டு சாப்பிடும் தன்மை கொண்டவர்கள், இனிப்புடன் கூடிய  காரம் மற்றும் உப்பு உணவுகளில் விருப்பம் ஏற்படும், புலால் குறைத்து மற்ற பாதார்த்தங்கள் கூட்டி பயன்படுத்தபட்ட உணவுகள், பருப்பு பயறுகள் பெரித்த அல்லது நீரினில் வேக வைத்த உணவுகள், உடல் வெப்பத்தை சம அளவில் வைத்திருக்க உதவும் பழங்கள் காய்கறிகள் ஆகியவை பொதுவான உணவு நாட்டங்கள் மற்றும் சுவை விருப்பங்களாக இருக்கும்.

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்த அடியார்கள் & மகான்கள் -
கண்ணப்பர்
சுவாமி பிரபுபாதா
ஸ்ரீ ராகவேந்திர சுவாமி

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக