செவ்வாய், 8 நவம்பர், 2016

மேற்கத்திய ஜோதிடம் - யுரேனஸ் பற்றிய சில குறிப்புகள்…


மேற்கத்திய ஜோதிடம் - யுரேனஸ் பற்றிய சில குறிப்புகள்


அடியேன் நமது வேதஜோதிடத்தின் அடிப்படையை பின்பற்றி மேலும் நவீன மாற்றங்களுக்கு தக்கவாறு சில அடிப்படை மற்றும் புதுமைகளை புகுத்தி ஜோதிட பலன்களை பார்ப்பவன். இருந்தாலும் இந்தியாவிலோ அல்லது உலகில் உள்ள மற்ற ஜோதிட கருத்துருக்களையும் கேட்டுக்கொள் பவனே மற்றும் சிறிது படிப்பவனே அது போல மேற்கத்திய ஜோதிடத்தின் உள்ள கருத்துருக்களையும் படிப்பவன்.

வேதஜோதிடம் வெறும் ஆகாய கோள்களையும் நட்சத்திரங்களையும் மட்டும் அடிப்படையாக கொண்டதல்ல அது ஆழமான ஆன்ம தத்துவத்துடன் தொடர்பு பெற்றது ஆனால் மேற்கத்திய ஜோதிடம் அவ்வாறு இல்லாமல் வெறும் திடப்பொருள்களாக உருண்டு சுற்றிக் கொண்டிருக்கும் கோள்களையும், ஒளிரும் நட்சத்திரங்களையும் மட்டும் எடுத்து விளக்குவதானால் அந்த ஜோதிடம் உடலை விட்டு இழந்த கையின் துடிப்பு போல் ஆகி விடும்.

அதாவது பல்லியின் வால் வெட்டப்பட்ட பின்னும் சிறிது நேரம் துடிக்கும் அப்படி துடிப்பதற்க்காக வாலுக்கு உயிர் இருப்பதாக கருதி விட முடியாது அந்த வால் சிறிது நேரத்தில் சடம் ஆகிவிடும் அது போல் ஆன்ம தத்துவத்துடன் தொடர்பு இல்லாத ஜோதிடம் என்ன தான் வலிமையிருப்பது போல் காட்டினாலும் அது அந்த பல்லியின் வால் போல் ஆகிவிடும். இப்படி இருந்தாலும் மேற்கத்திய ஜோதிடத்தில் உள்ள கருத்துருக்களை தெரிந்துகொள்ளவது ஒன்றும் தப்பில்லை. மேற்கத்திய ஜோதிடத்தில் மூன்று நவீன கிரகங்களான யுரேனஸ், நெப்டியூன், மற்றும் புளூட்டோ ஆகிய கோள்களையும் பலனுக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது அதில் யுரேனஸ் கிரகத்தை பற்றிய மேற்கத்திய ஜோதிடத்தின் கூறுகளை தற்போது பார்ப்போம்.

யுரேனஸ் என்ற இக்கிரகம் 1781 மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது. யுரேனஸ் ரோம பாரம்பரியத்தில் ஆகாய (வானம்) தேவதையாக கருதப்படுகிறார்கள், இது சூரியனுக்கு மிக தொலைவில் இருப்பதால் மிக மெதுவாக பயணித்து ஏழு வருடங்கள் எடுத்தே ஒரு இராசியை கடக்கிறது. ரோம ஜோதிடத்தின் படி யுரேனஸ் காரகத்துவம் - திடீர் நிகழ்வுகள் மற்றும் வாய்ப்புகள், புரட்சிகரமானவை சிந்தனை, நவீன அறிவியல், கண்டுபிடிப்பு, மின்சாரம், மனிதநேய இயக்கம், இணையதளம்.  காப்புரிமை மற்றும் பதிப்புரிமை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை, கணினி மற்றும் மைக்ரோ-தொழில்நுட்பம், சிறப்பான சுயஆற்றல் வெளிப்பாடு, விசித்திரமான அல்லது புதிய கருத்துருக்கள், திடீர் கிளர்ச்சி, தொலைநோக்கு பார்வை, மாறுபாடான மனம், புதிய சூழல் மற்றும் மனிதர்கள், விலங்கு - கருப்பு ஆடு.

கோள்
ஆட்சி வீடு
பகை
உச்சம்
நீசம்
யுரேனஸ்
கும்பம்
சிம்மம்
விருச்சிகம்
ரிஷபம்

யுரேனஸ் - 
அடிப்படை அம்சங்கள்:  பொதுநலத் தன்மை, உள்ளுணர்வு, தனது இயல்புக்கு முக்கியத்துவம் கொடுத்தல், திடீர் நடவடிக்கை.
நேர்மறையான தகுதிகள்: புதியது புனையும் ஆற்றல், சுதந்திரம்.
எதிர்மறையான தகுதிகள்: இயல்புக்கு மீறிய அல்லது விசித்திரமான செயல் அல்லது பழக்கம், பொறுப்பின்மை.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக