ஜோதிடத்தில் திதிகளின் அடிப்படை - சதுர்த்தி திதியில் பிறந்தவர்களின் பொது பலன்கள் பகுதி 4...

ஜோதிடத்தில் திதிகளின் அடிப்படை - சதுர்த்தி திதியில் பிறந்தவர்களின் பொது பலன்கள் பகுதி 4...

ஜோதிடத்தின் ஆதார அமைப்புகளில் முக்கியமானது பஞ்சாங்கம் ஆகும் பஞ்சாங்கம் என்றால் வாரம் - திதி - நட்சத்திரம் - யோகம் - கரணம் ஆகிய ஐந்தின் அங்கத்தின் சேர்மான வார்த்தை தான் பஞ்சாங்கம் அதில் திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் ஆகும் என்று முன் பதிவில் பார்த்தோம், இப்போது நாம் பார்க்க இருப்பது சதுர்த்தி - நான்காம் பிறையை பற்றி அதாவது சூரியனில் இருந்து சந்திரன் 36° (36 பாகையில்) முதல் 48° பாகை வரை சுக்கிலபட்ச சதுர்த்தி (வளர்பிறை சந்திரன்) ஆகும், சூரியனுக்கு சந்திரன் 216° (216 பாகையில்) முதல் 228° பாகை வரை கிருஷ்ணபட்ச சதுர்த்தி (தேய்பிறை சந்திரன்) ஆகும் இது தான் பொதுவாக கடைபிடிக்கபட்டு வரும் முறை ஆகும்.

இதன் எளிய அட்டவணை -

விளக்கம்
பாகை - கலை -விகலை
பாகை - கலை -விகலை
திதி
சூரியனில் இருந்து சந்திரன்
36:00:00 முதல்
48:00:00 வரை
சுக்கில பட்ச - திருதியை
சூரியனில் இருந்து சந்திரன்
216:00:00 முதல்
228:00:00 வரை
கிருஷ்ண பட்ச - திருதியை

சதுர்த்தி -
அதிதேவதை - எமன், விநாயகர்
சந்திரகலையின் பெயர் - துஷ்டி
சக்தி வடிவம் -  பேருண்டா
சதுர்த்தி திதிக்கான பாடல் -

நான்காம் பிறைதனில் உதித்த பிறப்பானால் மனநிறைவுக்கு
     முக்கியமும் இருதயத்தில் ஒட்டி நிற்கும் பாசஉறவும்
அன்பும் காட்டுவார் காட்டினாலும் மாறென்று தான் கண்டால்
     வன்பும் காட்டுவார் சட்டதிட்டத்தில் உயர் நெறியாளர்
என்றும் சீர் குறிக்கோள் கொண்டவர் எதிரிகளுக்கு சிம்மம்
     சூரியசந்திர போக்கு கெடில் அனைத்து தடைகளும்
முன்னிற்கும் வாழ்க்கை நிறைவுகாணா கனா ஓரிடத்தில்
     நின்று கெடும் நீராகும் இதை சூரியசந்திர முறை கண்டுரை
-  கோள்முனி ஞானமாயிரம்

பாடல் விளக்கம் -
இந்த பாடலை விளக்கம் செய்வது கடினம் ஏனென்றால் மறைபொருள்கள் அதிகமாக உள்ளது அதனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக பொருள் கொள்ள வாய்ப்பு உண்டு அதனால் என்னளவில் உணர்ந்த கருத்தை சுருக்கமாக சொல்வதானால் சதுர்த்தி திதியில் பிறந்தவர் மனநிறைவுக்கு முக்கியத்துவம் காட்டக்கூடியவர்கள். அன்போ அல்லது காதலோ எது காட்டினால் உள் உண்மையோடு காட்டக்கூடியவர்கள், அதே சமயம் தனக்கு ஒரு கருத்தில் மாறுபாடு வருமானால் கடுமையாக எதிர்க்கவும் செய்வார்கள். சட்டங்கள் மற்றும் எடுக்கும் திட்டங்களிலும் கடைபிடிப்பதில் கண்டிப்பு உடையவர்கள். நல்ல லட்சியங்கள் உடையவர்கள். எதிரிகளுக்கு சிறந்த போராளியாக அச்சுறுத்தலாக இருப்பார்கள். சூரியசந்திரனின் போக்கு கெட்டு இருந்தால் வாழ்வில் அனைத்து விதமான தடைகளையும் சந்திக்க நேரலாம். கண்ட கனவுகள் மற்றும் ஆசைகள் குறைவாக பலிக்கும். பரிதாபகரமானதாக எளிதில் மற்றவர்களால் இகழ கூடியதாக வாழ்க்கை பாதிக்க படலாம் இதை சூரியசந்திரனின் முழுமையான நிலையை அறிந்து பின் உரைக்க வேண்டும்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "ஜோதிடத்தில் திதிகளின் அடிப்படை - சதுர்த்தி திதியில் பிறந்தவர்களின் பொது பலன்கள் பகுதி 4..."

கருத்துரையிடுக

Powered by Blogger