சனி, 3 டிசம்பர், 2016

ஜோதிட துணுக்குகள் பகுதி 6 - திருக்கோயில் திருப்பணி செய்தல்…

ஜோதிட துணுக்குகள் பகுதி 6 - திருக்கோயில் திருப்பணி செய்தல்

திருக்கோயில் திருப்பணி செய்வது என்பது ஒரு மதிப்பு மிக்க யோகம் அதுமட்டுமில்லாமல் செல்வம் இருப்பவனும் தெய்வீக புண்ணியம் இருந்தவர் மட்டுமே செய்யக்கூடி காரியம். இந்திய அல்லது இலங்கை மட்டும் அல்லாமல் உலகமெல்லாம் குடியேறிய தமிழர்களும் கூட தங்கள் குடியேறிய பகுதிகளில் தங்கள் தங்கள் தெய்வங்களின் கோயில்களை மற்றும் ஆன்மீக வழிபாட்டு தலங்களையும் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

தமிழரின் பாரம்பரியத்தில் தனது சுய செல்வ வளத்தை கொண்டும் அல்லது பொதுமக்களின் ஆதரவோடும் அவர்கள் பணத்தை கொண்டும் திருக்கோயில் கட்டுதல் அல்லது திருப்பணி செய்தல் என்பது தமிழர்களின் பொது சமூகத்தில் பொது மரியாதை மற்றும் பொது ஒழுக்க பண்புகள் கொண்ட சான்றோர்களுக்கே தரப்படும் உயரிய வேலை அதனால் தான் அவர்களை தமிழில் அறங்காவலர் / தர்மகர்த்தா / திருபொறுப்பர் என்றெல்லாம் உயர்த்தி வழங்கபடுகிறது. சரி கோயில் என்ன அவ்வளவு முக்கியமா என்று கேட்டால் சுருக்கமாக சொல்வதானால் -

தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்,
மனக் கவலை மாற்றல் அரிது. - திருக்குறள்இப்படிபட்ட பதவியை செல்வம் மற்றும் அரசியல் பலத்தால் அடைந்து ஒழுங்குடன் சிறப்பாக அந்த திருப்பணியை செய்துவந்தால் அவரின் பின்வரும் சந்ததிகள் வரை புண்ணியங்கள் சேரும் அதுவே அந்த பதவியை அடைந்த பின் புகழ், பொருள், ஆசை காரணமாக  ஒழுங்குமுறை தவறி செய்தால் பாவங்கள் பின் தொடரும். இதையே தமிழர்களின் அனுபவ முதுமொழியாக "சிவன் சொத்து குல நாசம்" என்று இறைவனின் பொது சொத்தை தனக்கு உரியதாக்க நினைத்தால் பரம்பரைக்கும் பாவம் வரும் என்று பொருள் கொள்ளும் இந்த முதுமொழி பல காலங்காலமாக வழங்கி வரப்படுகிறது.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக