தீபமும் ஆன்மீகமும்….

தீபமும் ஆன்மீகமும்….

இந்துக்களின் இறைவழிபாட்டில் நீர், மலர்கள் மற்றும் பழங்கள் போன்றவை முக்கியமானவை அதை போலவே மிக முக்கியமானது விளக்கு, தீபம் அதாவது அக்னியை (ஜோதி, ஒளி) வழிப்படுவது என்பது இந்துக்களின் இறைவழிபாட்டில் அக்னியை இறைவனின் பிரதி வடிவாக நினைத்து வழிபடுகின்றனர். இந்துக்களின் எந்த தெய்வத்தின் வழிபாட்டிலும் விளக்கு, தீபம் இருக்கும் ஏன் சன்மார்க்கம் சொன்ன வள்ளலாரும் அருட்பெரும் ஜோதி ஏற்றி வழிபாட்டை தொடங்கி வைத்தார்.

அருட்பெருஞ்சோதி தனி பெரும் கருணை - வள்ளலார்
"ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே" - திருவிசைப்பா
"தீப மங்கள ஜோதி நமோ நம" - அருணகிரிநாதர்
"விளக்கின் முன்னே வேதனை மாறும்" திருமந்திரம்
"ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு" - பூதத்தாழ்வார்
"வேதாந்த வீட்டில் விளக்கே பராபரமே" தாயுமானவர்

என்றெல்லாம் நம் பெரியோர் பாடி காட்டி உள்ளனர் அப்படி இந்த விளக்கு, தீபம் அதாவது (ஜோதி, ஒளி) என்பதில் என்ன நலம் உள்ளது என்று தோன்றலாம் விளக்கு, தீபம் ஆனது நிலம், நீர், தீ, வளி, வெளி என்ற பஞ்ச பூதங்களின் கூட்டை பிரதிபலிப்பதாகவும் மற்றும் அந்த பூதங்களுடன் மனிதன் உடலின் தொடர்புகளை காட்டக்கூடியாக அமைந்துள்ளது. அதாவது

நிலம் - மண் சட்டி விளக்கு - உடல்
நீர் - எண்ணெய்
தீ - ஒளி, வெப்பம்
வளி (காற்று) = ஒளி எரிய உதவும் பிராண காற்று
வெளி = இவற்றை எல்லாம் தாங்கி நிற்கும் மற்றும் ஏற்கும் ஆகாயம்

ஆக கருதபடும் ஒரு சித்த பெருமான் எண்ணெய்யை உணவாகவும் மற்றும் மண் சட்டியை உடலாகவும், எரிகின்ற விளக்கை ஒரு பாத்திரம் கொண்டு மூடினால் சிறிது நேரத்தில் அணைந்து விடும் அதனால் பிராண காற்றின் முக்கியத்துவத்தையும், திரியை உடலின் முதுகொலும்பாகவும் எரியும் ஒளிவிளக்கை உயிராகவும் ஒப்பிட்டு பாடி உள்ளார்.

எனவே இல்லற வாழ்வில் இருப்பவர்கள் விளக்கெற்ற வினைகளும் வாழ்வில் உள்ள இருளும் நீங்கும். ஞான வாழ்க்கை வேண்டி விளக்கெற்றும் ஒருவருக்கு அவரின் அறியாமையை ஒழித்து இறைவனின் தத்துவத்தை காட்டும் அருளை அடைய உதவுவதாகவும் இருக்கும்.

0 Response to "தீபமும் ஆன்மீகமும்…."

கருத்துரையிடுக

Powered by Blogger