ஆன்மீகம் - ஜீவபோத சுத்தி (Refining of Ziva botham) பகுதி 13...

ஆன்மீகம் - ஜீவபோத சுத்தி (Refining of Ziva botham) பகுதி 13...
ஜீவபோத சுத்தி என்றால் உயிரின் உண்மை நிலையை விசாரணையின் மூலம் சுத்தம் செய்து உணர்தல் என்று பொருள், ஒவ்வொரு உயிரானதும் தனது உண்மை நிலையை உணர்வதன் மூலம் ஆன்மீக பக்குவம் அடையும் அப்படி ஆன்மீக பக்குவம் அடைந்தால் வாழ்வில் விடை தெரியாத பல்வேறு துன்பங்களும் இலையுதிர் கால மரத்தின் இலைகளை போல் கழண்டு விழும், இது ஒரு சிலருக்கு பயன்தரலாம் அதனால் ஜோதிடம் மட்டும் விரும்பம் உள்ளவர்கள் அதை எப்போது போல படித்து வரலாம்  இது நேரடியாக ஜோதிடத்தை சுட்டிக்காட்டாது ஆனால் ஜோதிடத்தின் அடிப்படை ஆன்ம தத்துவத்தில் தான் உள்ளது.

(13)
யாருக்கு இன்பம், துன்பம்; யாருக்கு புகழ், இகழ்
யாருக்கு உயர்வு, தாழ்வு; யாருக்கு சினம், பொறாமை
யாருக்கு விருப்பு, வெறுப்பு; வெறும் பாவனையாம்
பார் உள்ளத்துள்ளே சிவமே அது! சிவமே அது!

Who feel pleasure and pain? Who feel fame and Shame?
Who feel rise and down? Who feel anger and envy?
Who feel like and dislike? Just a conception
Look within the heart It Sivam! It Sivam!
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
பாடலின் விளக்கம் -
இன்பத்தையும் துன்பத்தையும் அனுபவிப்பனாய் உள்ளவர் யார். புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் அனுபவிப்பனாய் உள்ளவர் யார். உயர்வையையும் தாழ்வையையும் அனுபவிப்பனாய் உள்ளவர் யார். விருப்பையும் வெறுப்பையும் அனுபவிப்பனாய் உள்ளவர் யார். இப்படிபட்ட உணர்ச்சிகளும் அந்த உணர்ச்சிகளை அனுபவிப்பவனும் எல்லாம் வெறும் பாவனையாம் (கற்பிதம், புனைவு, கருக்கொள்ளுதல்) இந்த இடத்தில் பாவனை என்ற சொல்லின் பூரண அனுபவ அறிவு அல்லது பூரண அனுபவ விளக்கம் பெற இதை விரிவாக சொன்னால் விளங்கலாம் ஆனால் சுருக்கமாக உரைப்பதானால் மனம் என்ற மலர் மலராமல் இருக்கும் குழந்தைகளையும் மனம் என்ற மலரின் தன்மை செம்மையானவர்களுக்கும் (ஞானி, மகான்) முன் சொன்ன உணர்ச்சிகளால் பாதிக்கபடுவதில்லை அதனால் அவர்களின் மனம் என்ற மலர் இனிமையான வாசனைகளை பூரணமாக பரப்புவதாக இருக்கிறது அதனால் தான் ஞானிகளுக்கும் சிறு குழந்தைகளுக்கும் எப்போது ஒரு வித ஈர்ப்பு சக்தி இருந்து கொண்டே உள்ளது. நீங்கள் புகழ்ந்தாலும் இகழ்தாலும் அதன் (குழந்தை, ஞானி) தன்மை மாறாமல் இருக்கும்.

சிவன் என்பதும் சிவம் என்பதும் ஒரு கடவுளை குறிக்கும் பெயர்ச்சொல் மட்டும் அல்ல சிவம் என்றால் எப்போதும் எங்கும் வேண்டுதல் வேண்டாமை இன்றி உள்ள ஆளுமை என்று பொருள் இதற்கு சமஸ்கிருதத்தில் ஈஸ்வரன் என்று சொல்லப்படும் ईश्वर Izvara என்றால் Supreme Being , Supreme ruling என்று பொருள்.

Heart என்பது பொதுவாக உடலில் உள்ள இதயம் என்ற உறுப்பை குறிப்பதாக இருப்பது ஆனால் ஆன்மீகத்தில் இருதயம் என்பது ஆத்மாவின் மையம், அதை தமிழ் உள்ளம் என்று பொருள் கொள்ளலாம், உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்று திருமூலர் விளக்கி இருப்பார், அந்த உள்ளத்தின் உள்ளே இறைவன் எப்போதும் தோன்றாதே எழுந்தருளி உள்ளான்.


0 Response to "ஆன்மீகம் - ஜீவபோத சுத்தி (Refining of Ziva botham) பகுதி 13..."

கருத்துரையிடுக

Powered by Blogger