ஜோதிட துணுக்குகள் பகுதி 7 - தைரியம் \அஞ்சாமையின் சிறப்பு பெருமைகள்…

ஜோதிட துணுக்குகள் பகுதி 7 - தைரியம் \ அஞ்சாமையின் சிறப்பு பெருமைகள்
தைரியம் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு தமிழில் அஞ்சாமை என்று அழைக்கபடுகிறது அதாவது இந்த தைரியம் \அஞ்சாமை உடையவர்களை கண்டால் தைரியம் இல்லாதவர்கள் அஞ்சுவர்கள் அதற்க்காக தைரியம் என்பது ஒரு பண்பு அல்ல அதாவது பண்பு என்றால் பிறர் இயல்பை அறிந்து நடக்கும் நற்குணம் (பிறரியல்பை யறிந்து நடக்கும் நற்குணம் பண்பெனப்படுவது - கலித்தொகை) அப்படியானால் இந்த தைரியம் \அஞ்சாமை என்பது என்ன என்று கேள்வி எழலாம் தைரியம் \அஞ்சாமை என்பது ஒரு இயல்பு (Nature) அதை நல்ல வழியில் பயன்படுத்தினால் அஞ்சாமை பண்பாகும் அதுவே தீய வழியில் பயன்படுத்தினால் அஞ்சாமை குற்றம் ஆகும்.

சரி இந்த தைரியம் \அஞ்சாமை பற்றி திருவள்ளுவரின் பலவித கண்ணோட்டங்களை பார்ப்போம்

அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் இந் நான்கும்
எஞ்சாமை-வேந்தற்கு இயல்பு. - திருக்குறள்

பொருள் - அஞ்சாமை, ஈகை, அறிவுடைமை, ஊக்கமுடைமை ஆகிய இந்த நான்கு குணங்களும் குறைவுபடாமல் இருத்தலே அரசனுக்குரிய இயல்பாகும்.

இதில் இருந்து தைரியம் \ அஞ்சாமை உள்ளவனே அரசனாக அல்லது ஒரு பொது நிறுவனத்தை முன்னெடுக்க முடியும் என்று தெரிகிறது.

அஞ்சாமை அல்லால், துணை வேண்டா-எஞ்சாமை
எண்ணி இடத்தான் செயின். - திருக்குறள்

பொருள் - மனத்திடமில்லாத இல்லாதவனுக்கு, இடம் பொருள் ஏவல் வாய்த்தும் பயனில்லை, அஞ்சாமை தான் இன்றியமையாத பெருந்துணையாகக் கூறிஉள்ளார்.

இதில் இருந்து என்ன தான் வாய்ப்பு ஒருவனுக்கு அமைந்தாலும் தைரியம் \ அஞ்சாமை தான் மிக முக்கிய துணையாக ஒருவனுக்கு இருக்கும் என்று தெரிகிறது.

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை; அஞ்சுவது
அஞ்சல், அறிவார் தொழில்.  - திருக்குறள்

தெளிவி லதனைத் தொடங்கா ரிளிவென்னு
மேதப்பா டஞ்சு பவர். - திருக்குறள்

பொருள் - முன்பு என்னதான் அஞ்சாமை மாட்சியாகச் சொல்லப் பட்டாலும் கூட அஞ்சுவதும் முக்கியம் தான் என்று இதில் கூறுகிறார் அதாவது பழி மற்றும் தீய வினைகளை உண்டாக்கும் செயல்களை கண்டு அஞ்சி அதை செய்யாமல் இருப்பதும் மற்றும் தெளிவில்லாத செயல்களை அதன் பயனையும் அறிந்து அஞ்சுவதும் தான் அறிவார்ந்த அஞ்சாமை என்று முடிக்கிறார்

இப்படி ஒருவனுக்கு பதவி, செல்வம், புகழ் என்ற நல்ல பலன்களையும் அதே நேரத்தில் பழி, குற்றம், இழிவு என்ற தீய பலன்களையும் தரும் சக்தி கொண்டது இந்த தைரியம் \அஞ்சாமை, இதை ஜோதிடத்தில் மூன்றாம் வீடு, ஆறாம் வீடு மற்றும் நவகிரகங்கள் எல்லாமும் இந்த தைரியம் \அஞ்சாமை யோடு  தொடர்பு இருக்கிறது இருந்தாலும் சந்திரன், செவ்வாய், சூரியன், குருவோ அல்லது புதனோ துணையான முக்கிய கிரகங்கள்.

தைரிய வீரிய பாரக்கிரம ஸ்தானம் ஆன மூன்றாம் வீட்டின் அதிபதி ஒருவரின் ஜாதகத்தில் ஆட்சி மற்றும் உச்சம் ஆகியிருந்தால் அவருக்கும் இயல்பாக இந்த தைரிய பாரக்கிரம சக்தி உடையவராக இருப்பார் அதனால் துணிவாகவும் துரிதமாகவும் உறுதியாகவும் நடவடிக்கை மேற்கொள்ளக்கூடியவர். மேலும் சுப கிரகங்களிலின் சம்பந்தமும் பட்டு 1,5,9 ஆம் திரிகோண வீடுகளின் அதிபதிகள் நல்ல நிலையில் இருந்து சேர்க்கை அல்லது பார்வை பெற்று இருக்க அது நல்லதுக்கான தைரியம் \அஞ்சாமை உள்ளவர்களாக அமையும்.

தைரிய வீரிய பாரக்கிரம ஸ்தானம் ஆன மூன்றாம் வீட்டின் அதிபதி ஒருவரின் ஜாதகத்தில் 1,5,9 ஆம் திரிகோண வீடுகளின் அதிபதிகளுடன் நல்ல விதமாக சேர்ந்து மூன்றாம் வீட்டை பார்த்தாலும் நல்லதுக்கான தைரியம் \அஞ்சாமை உள்ளவர்களாக அவர்களை அமைக்கும்.

தைரிய வீரிய பாரக்கிரம ஸ்தானம் ஆன மூன்றாம் வீட்டின் அதிபதி ஒருவரின் ஜாதகத்தில் 9 ஆம் திரிகோண வீட்டின் அதிபதியோடு சேர்ந்து ஆட்சி மற்றும் உச்சம் ஆகியிருந்தாலும் மற்றும் நட்பு சுப வர்க்கங்களிலில் போய் அமர்ந்திருந்தாலும் பாப கிரகங்களின் தொடர்பின்றி இருந்தாலும் முன்னே திருவள்ளுவர் சொன்னது போல் பழி மற்றும் தீய வினைகளை உண்டாக்கும் செயல்களை கண்டு அஞ்சி அதை செய்யாமல் இருக்கும் அறிவார்ந்த அஞ்சாமை கொண்டிருப்பார்.

சந்திரன், செவ்வாய், சூரியன் கிரகங்கள் மூன்றாம் வீட்டின் அதிபதி உடன் சேர்ந்து ஆட்சி மற்றும் உச்சம் ஆகியிருந்தாலும் மற்றும் நட்பு சுப வர்க்கங்களிலில் போய் அமர்ந்திருந்தாலும் துணிவான மற்றும் துரிதமான நடவடிக்கை மேற்கொள்ளக்கூடியவர் ஆக அமைக்கும்.

சைவத்தில் பார்வதி தேவியும் (துர்கை, காளி..) தைரிய சக்தியை தரும் பெண் சக்தியாகவும் சிவபெருமானின் ருத்திர பிரிவுகள் தைரிய சக்தியை தரும் ஆண் சக்தியாகவும் கருதபடுகிறது, வைணவத்தில் தைரியலட்சுமி, அனுமன், பலராமன்என தைரிய சக்தியை தரும்  தெய்வங்களாக கருதபடுகிறது.



தைரியத்திற்க்காக மக்களால் போற்றப்படும் தெய்வத்திரு ஜெயலலிதா அவர்களின் ஜாதகத்தில் மூன்றாம் இடத்தின் சிறப்பை தெரிந்து கொள்ளலாம். மூன்றாம் வீட்டில் 2,6,11 க்குடைய சந்திரன் செவ்வாய் இருவரும் மகம் நட்சத்திரத்தில் சந்திரமங்கள யோகத்துடன் நிற்க அதை அந்த மூன்றாம் வீட்டின் அதிபதி சூரியன் பார்வை செய்வது சிறப்பு அது மட்டுமல்லாமல் 1,4 க்கு அதிபதியான புதன் சேர்ந்து பார்வை செய்வது சிறப்பு மேலும் 7ல் ஆட்சி பெற்ற குரு பகவான் 9ஆம் பார்வையாக மூன்றாம் வீட்டை பார்வை செய்வது மேலும் சிறப்பு ஆகும்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "ஜோதிட துணுக்குகள் பகுதி 7 - தைரியம் \அஞ்சாமையின் சிறப்பு பெருமைகள்… "

கருத்துரையிடுக

Powered by Blogger