நவகிரக காரகத்துவ ஸ்தலங்கள் - சுக்கிரன் (வெள்ளி)...

நவகிரக காரகத்துவ ஸ்தலங்கள் - சுக்கிரன் (வெள்ளி)...

நவகிரகங்களும் தங்கள் தங்கள் ஆதிக்கம் அதிகம் காட்டும் இடங்களாக பிரித்து சொல்லும் ஒரு சமஸ்கிருத நூலின் மொழி பெயர்ப்பாக வந்த ஒரு பழம் தமிழ் நூலின் சில குறிப்பிட்ட இந்த பகுதி மட்டும் கிடைத்தது அதை தங்களின் முன் இந்த வலைபதிவின் மூலம் பதிவிக்கிறேன்.

நடனக்கூடம் கலை சங்கங்கள் விடுதி நல்சோலை மாடங்கள்
கடம்சூழ் அந்தப்புரம் விலைமாதர் வாழிடம் காசு அன்னச்சாலை  
ஓடம்சூழ் பொழுதுச் சாலை திருமண மண்டபம் படுக்கை
நாடக அரங்கு கலைக்கோயில் அசுரகுரு காரகதலங்களாம்.
- கிரகபதி சந்தம்

பொருள் - ஆடல் (நாட்டியம், Dancing) செய்யும் அரங்குகள். இசை, பாடல், கவிதை போன்ற கலைகளை வளர்க்கும் சங்கங்கள். விடுதிகள். செயற்கை மரங்கள் உடன் கூடிய கட்டிடங்கள். தோட்டங்கள் சூழ்ந்த அந்தப்புரம், விலைமாதர் சேர்ந்து வசிக்கும் இடம். உணவு அங்காடிகள். தெப்பம் படகுகள் சூழ்ந்த பொழுதுபோக்கு சாலைகள். திருமண மண்டபங்கள். படுக்கை அறைகள். நாடக மற்றும் திரையரங்குகள். சிற்பம் மற்றும் ஓவியங்களால் நிறைந்த கோயில்கள் அசுரகுரு (வெள்ளி) ஆதிக்கம் அதிகம் காட்டும் பூமியின் தலங்கள் ஆகும்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

0 Response to "நவகிரக காரகத்துவ ஸ்தலங்கள் - சுக்கிரன் (வெள்ளி)..."

கருத்துரையிடுக

Powered by Blogger