கிரகங்களின் ஷட்பலம் - மகர இராசியில் நவகிரகங்கள் இருப்பதால் பெறும் ஸ்தான பலம்…

கிரகங்களின் ஷட்பலம் - மகர இராசியில் நவகிரகங்கள் இருப்பதால் பெறும் ஸ்தான பலம்

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஷட்பலம் காணப்பட்டு அது ஒருவரனின் ஜாதக பலனை அறிவதற்கு உபயோகமாக இருக்கும் ஒரு நல்ல முறையாகும், ஷட் (षट्- SaT) என்றால் "ஆறு" என பொருள்படும். "ஷட் பலம்" என்றால் "ஆறு விதமான வலிமை" எனப் பொருள்படும்.

கிரகங்களின் ஆறுவிதமான பலங்கள் -

1) ஸ்தான பலம்
2) திக் பலம்
3) கால பலம்
4) சேஷ்ட பலம்
6) த்ருக் பலம்

இந்த ஷட் பலத்தில் நாம் முதலில் பார்க்க இருப்பது ஸ்தான பலம் ஆகும் இந்த ஸ்தான பலத்திற்கு உள் பிரிவுகள் உண்டு அவை

ஸ்தான பலம் - உட்பிரிவுகள்

1) ஆறுநிலை பலம்
2) பால்பலம்
3) இருப்புபலம்
4) உச்சபலம்
5) கேந்திர பலம்
6) திரிகோண பலம்
7) வர்க்க பலம்

இது ஒரு புத்தகத்தில் அடங்கக் கூடிய அளவுக்கான விஷயங்கள் என்பதால் ஒர் இரு பதிவுகளில் கண்டுவிட முடியாது எனவே முதலில் ஸ்தான பலத்தின் உள் பிரிவான ஆறுநிலை பலம் மற்றும் பால்பலத்தை மட்டும் முதலாவதாக பார்ப்போம், அதில் ஒவ்வொரு இராசியாக பார்க்கலாம் காலசக்கரத்தின் முதல் இராசியான மேஷம் முதல் கடைசியான மீனம் வரை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

1) ஆறுநிலை பலம்
ஒவ்வொரு இராசியில் அமரும் போது ஒவ்வொரு விதமான பலம் மற்றும் பலவீனங்களை அடைகின்றன இது ஒரு ஜாதக கணிதத்தில் முக்கிய பங்காற்றுகின்றன அதாவது ஜோதிடத்தில் இராசி சக்கரத்தில் ஒவ்வொரு பிரிவு இராசி மண்டலத்திலும் ஒரு கிரகம் வந்து சேர்வதன் மூலம் அந்த இடத்திற்கு தக்கவாறு ஒரு அவஸ்தை (கிரணங்களில் சூழ்நிலை மாற்றம்) அடைகின்றன என்பதை நாம் முன்பே முந்தை பதிவுகளில் ஒவ்வொரு இராசியாக பார்த்தோம் அதாவது ஆட்சி, உச்சம், நட்பு, சமம், பகை, நீசம் என ஆறு வகையான அவஸ்தைகளாக பிரித்து எந்த எந்த இராசி எந்த எந்த கிரக்ங்களுக்கு இந்த ஆறு விதமாக கொண்ட தன்மைகளை (அவஸ்தை) என்பதை பார்த்தோம் அதை நீங்கள் மறந்திருக்கலாம் அதன் இணைப்பு குறிப்பு இது - 12 இராசிகளில் நவகிரகங்கள் இருப்பதால் பெறும் தன்மைகளின் தொகுப்பு...

2) பால்பலம்
பால்பலம் என்பது ஒவ்வொரு இராசியையும் ஆண்பால் இராசி, பெண்பால் இராசி என்று பிரிக்கபட்டுள்ளது அதன் விவரத்தை நான் ஏற்கெனவே இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளேன் 12 இராசிகளில் ஒற்றை மற்றும் இரட்டை, ஆண் பெண் இராசி... , அதே போல நவகிரகங்களையும் ஆண் பெண் அலி பிரிவுகள் உண்டு பண்ணபட்டுள்ளது சூரியன் = ஆண், சந்திரன் = பெண், செவ்வாய் = ஆண், புதன் = அலி, வியாழன் (குரு) = ஆண், சுக்கிரன் (வெள்ளி) = பெண், சனி = அலி, இராகு = பெண், கேது = அலி எனப்பிரிக்க பட்டுள்ளது

3) இருப்புபலம்
இருப்புபலம் என்பது ஒவ்வொரு இராசியையும் சரம், ஸ்திரம், உபயம் இராசி என்று பிரிக்கபட்டுள்ளது அதன் விவரத்தை நான் ஏற்கெனவே இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளேன் உங்கள் லக்னம் சரமா?, ஸ்திரமா?, உபயமா?... , அதே போல நவகிரகங்களையும் சரம், ஸ்திரம், உபயம் பிரிவுகள் உண்டு பண்ணபட்டுள்ளது சூரியன் = ஸ்திரம், சந்திரன் = சரம், செவ்வாய் = ஸ்திரம், புதன் = உபயம், வியாழன் (குரு) = உபயம், சுக்கிரன் (வெள்ளி) = சரம், சனி = சரம், இராகு = சரம், கேது = ஸ்திரம் எனப்பிரிக்க பட்டுள்ளது.


மகரம் ராசி மண்டலத்தில் நவகிரகங்கள் இருப்பதால் அவைகள் பெறும் ஆறுநிலை, பால்பலம், இருப்புபலம் விவரங்கள் -

கோள்கள்
அவஸ்தைகள்
ஆறுநிலை
பால்பலம்
இருப்புபலம்
மொத்தம்
சூரியன்
பகை
0%
0%
0%
0%
சந்திரன்
சமம்
50%
10%
10%
70%
செவ்வாய்
உச்சம்
125%
0%
0%
125%
புதன்
சமம்
50%
6%
0%
56%
வியாழன்
நீசம்
0%
0%
0%
0%
சுக்கிரன்
நட்பு
75%
10%
10%
95%
சனி
ஆட்சி
100%
6%
10%
116%
ராகு
நட்பு
75%
10%
10%
95%
கேது
நட்பு
75%
6%
0%
81%




0 Response to "கிரகங்களின் ஷட்பலம் - மகர இராசியில் நவகிரகங்கள் இருப்பதால் பெறும் ஸ்தான பலம்…"

கருத்துரையிடுக

Powered by Blogger