கோடீஸ்வர்களின் ஜாதகங்கள் - பகுதி 1

கோடீஸ்வர்களின் ஜாதகங்கள் - பகுதி 1

எப்போதும் எந்த காலத்திலும் பெரும்பாலனவர்களால் அடைய துடிக்கும் மற்றும் வாழ்வில் லட்சியமாக கருதும் ஒன்று இருக்குமானால் அது செல்வம் அதற்கு நிதி, பணம், பொருள், திரவியம், வளம் என்று பல சொற்கள் கையாளப்பட்டு வருகிறது, ஈஸ்வரனின் நிதிபதியாக சொல்லப்படும் குபேரனும் நவ நிதிகளை சேமித்து வைத்திருக்கிறானாம் அது எங்கே சொர்கத்திலோ அல்லது குபேரன் வசிக்கும் மகாமேருவிலோ சேமித்து வைத்திருக்கிறான் என்று கருதுபவர்களும் உண்டு ஆனால் அந்த குபேரன் சேர்த்து வைக்கும் அல்லது சேமித்து வைத்திருக்கும் நிதியானது உண்மையில் ஒவ்வொருவரது உடலுக்குள்ளும் தான் இருக்கிறது.

குபேரன் மட்டும் தான் நிதியை சேகரித்து வைக்கும் அதிகாரியா? நாமும் குபேரன் தான் ஆம் நமது வீட்டிலும் நவ நிதி சேமிப்புகள் உள்ளன வேடிக்கையாக சொல்வதானால் நம் ஒவ்வொருவர் வீட்டிலும் நாளைகளுக்கு தேவையான நீர், உணவு தானியம், நெருப்பு, ஆடை, பொன் பொருட்கள், கல்வி பட்டயங்கள், நில மற்றும் பங்கு பத்திரங்கள், சமையல் பாத்திரங்கள், உபயோகிக்கும் இயந்திர சாதனங்கள் என நவ நிதிகள் உள்ளன. இந்த பொருட்களை சேகரித்து வைக்கும் பண்பு எப்படி வந்து என்று பார்த்தால் வரும் காலத்திற்கு தேவை என்ற எண்ணம் தான்

இதையும் வேடிக்கையாக உவமையாக சொல்வதானால் அணிலும் எலியும் ஒரு இனத்தின் வெவ்வேறு பிரிவு விலங்கு, அணில் ஆனது தன் முன் எவ்வளவு உணவுகள் இருந்தாலும் தனக்கு தேவையான அளவு உண்டு விட்டு விளையாட்டிலும் பொழுதுபோக்கிலும் ஈடுபட ஆரம்பித்துவிடும் அதுவே எலி ஆனது தனக்கு தேவையான அளவு உண்டது போக போந்து வலை தோண்டி அதில் கிடைத்த உணவை எடுத்து கொண்டு போய் சேமித்து வைத்து கொள்ளுமாம் சில ஆராய்ச்சிகளில் எலியின் டி.என்.எ விற்கும் மனிதனின் டி.என்.எ விற்கும் பல ஒற்றுமை சம்பந்தங்கள் உள்ளதாக கூட ஆராய்ச்சிகள் சில சொல்லும்.  வரும் காலத்திற்கு தேவை என்ற எண்ணத்தால் பொருட்களை சேகரித்து வைக்கும் நிலையில் இருந்து அடுத்த கட்டமாக பணக்காரன் மற்றும் ஏழை என்ற பிரிவு எப்படி வந்தது என்று சிறிய அளிவில் சுருக்கமாக சொல்கிறேன் நடந்த கதையாக படித்த விஷயம் இது,

அதாவது பசுபிக் பெருங்கடலில் ஒரு தீவு இருந்தது அதில் இருந்த மீனவர்கள் ஒவ்வொரு பேரும் ஒவ்வொரு நாளும் மீன் பிடிக்க சென்று கிடைக்கும் மீன்களை வைத்து அந்த தீவில் விளைந்த மற்ற சில தாவரங்களை வைத்து உண்டு வாழ்ந்து வந்திருந்தார்கள் சென்ற நூற்றாண்டில் பிரிட்டிஷ்காரர்கள் அந்த தீவை கைபற்றி காசு, பணத்தாளை அந்த மீனவர்களுக்கு அறிமுகபடுத்திய பின் அந்த தீவின் மக்களிடத்திலேயே பின் காலத்தில் பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் என்ற பிரிவு உருவானது அங்கு துறைமுகம் உருவான பின் அது மேலும் வலுவான பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் இடைவெளியை உருவாக்கியது.

காசு, பணத்தாள் அல்லது பணச்சீட்டு இவைகளின் காரணமாக மேலே சொன்ன மனிதனுக்கு தேவையான நீர், உணவு தானியம், நெருப்பு, ஆடை, நிலம் என அனைத்து உடைமைகளையும் காசு, பணத்தாள் அல்லது பணச்சீட்டு என்ற ஒரே இடைபேரக் கருவியால் தீர்த்து வைத்துக் கொள்ளும் வசதி கிடைத்தது அந்த எளிதில் மக்கி கெட்டுப் போகாத வசதியின் எதிர்விளைவாக மனிதர்கள் அந்த காசு, பணத்தாள் அல்லது பணச்சீட்டை அளவை தாண்டி சேமிக்கும் வாய்ப்பு கிடைத்தது மனிதர்களுக்குள் இருக்கும் இயல்பான ஆசை மற்றும் திறமையின் காரணமாக அந்த பணத்தை பெருமளவில் குவிக்க ஆரம்பிக்கிறார்கள் வலுவான பணக்கார மற்றும் ஏழை இடைவெளி உருவானது. அதன் எதிர்விளைவாக இருப்பதை பகிர்வோம் என்ற பொதுவுடைமை கொள்கைகளும் உருவானது.


1 Response to "கோடீஸ்வர்களின் ஜாதகங்கள் - பகுதி 1"

  1. Unknown says:

    தெளிவான கருத்து . நன்றி

கருத்துரையிடுக

Powered by Blogger