இந்திய மற்றும் மேற்கத்திய ஜோதிடத்தில் 12 ஸ்தானங்களின் நான்கு பிரிவுகளில் ஒன்றின் விளக்கம்…

இந்திய மற்றும் மேற்கத்திய ஜோதிடத்தில் 12 ஸ்தானங்களின் நான்கு பிரிவுகளில் ஒன்றின் விளக்கம்…

பராசர, வாரஹ, பிருகு மகரிஷிகள் தங்களது ஜோதிட சாஸ்திரத்தில்  குறிபிட்டுள்ள அடிப்படையான 12 வீடுகளை (ஸ்தானங்கள்) கேந்திரம், கோணம், உபஜெயம், பணப்பரம் போன்று பிரித்து உள்ளனர். அவ்வாறான ஒரு மாற்று பிரிவை மேற்கத்திய ஜோதிடத்தில் அடிப்படையான 12 வீடுகளை நான்கு பிரிவுகளாக பிரித்துள்ளனர் (Four Divisions)அவைகளின் அடிப்படையை இப்போது அடையாள படுத்தபடுகிறது.
1st Division = "The Houses of Life" (1st, 5th, 9th)
1 வது பிரிவு = "வாழ்வு சார்ந்த வீடுகள்" (1ஆம், 5ஆம், 9 ஆம் வீடுகள்) - அதாவது இது ஒரு மனிதருக்கு தேவையான உடல் பலம், மன ஆற்றல், உற்சாகம், உந்து சக்தி, சமய நம்பிக்கை, ஆன்மீக பலம், வாழுவதற்கு தேவையான உத்வேகம் தரும் வீடுகளாக சுட்டிகாட்டப்படுகின்றன.

2nd Division = "The Houses of Substance" (2nd, 6th, 10th)
2 வது பிரிவு = "பொருள் சார்ந்த ஒரு வீடுகள்" (2 ஆம், 6 ஆம், 10 ஆம் வீடுகள்) - அதாவது இது ஒரு மனிதருக்கு தேவையான உலகியல்ரீதியான பொருள் சார் உடைமைகள், பண சேமிப்பு. வேலை செய்யும் திறம், சுய தொழில். மரியாதை. 6 ஆம் வீட்டை உணவு, உடை, சுகாதாரம் முதலிய வசதிகளுடன் இங்கு ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது.

3rd Division = "The Houses of Relationships" (3rd, 7th, 11th)
3 வது பிரிவு = "உறவுககளுக்கான வீடுகள்" (3 ஆம், 7 ஆம், 11 ஆம் வீடுகள்) - அதாவது இது ஒரு மனிதருக்கு வீட்டில் உள்ள இரத்த உறவுகள், சகோதரர்கள், சகோதரிகள், நெருங்கிய உறவினர்கள் முதலிய உறவுகளை காட்டும் வீடு.  சொந்த அக்கம்பக்கத்தினர் அடங்கும் சமூக தொடர்புடையதாக நபர்கள். மனைவி மற்றும் நண்பர்கள், பங்குதாரர்கள் மற்றும் நெருங்கிய சகாக்கள், ஆலோசகர்கள் சுட்டிக்காட்டு வீடுகளாக உள்ளது

4th Division = "The Houses of Endings"( 4th, 8th, 12th)
4 வது பிரிவு = "எல்லையை காட்டும் வீடுகள்" (4 ஆம், 8 ஆம், 12 ஆம் வீடுகள்)  - அதாவது இது ஒரு மனிதருக்கு
சுகாதாரம், முதுமை, இறுதிகாலம், உறக்கம், மோட்சம், உச்சமான அல்லது முடிவான இன்பங்கள் ஆகியவற்றை சுட்டிக்காட்டும் வீடுகளாக உள்ளது.

இந்த பிரிவுகளில் பல வேதஜோதிடத்தை ஒத்திருக்கும் சில கலாசார மற்றும் கால எல்லைகளை ஒத்தும் மற்றும் நமது அதி உன்னத ஆத்மஞானிகள் மற்றும் மகரிஷிகளின் அருள் பங்களிப்பு பிரசாதத்தால் பல நமது வேதஜோதிடத்தில் சில விஷயங்கள் உயர்வு நிலையில் தனித்து சிறப்போடு இருக்கும்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "இந்திய மற்றும் மேற்கத்திய ஜோதிடத்தில் 12 ஸ்தானங்களின் நான்கு பிரிவுகளில் ஒன்றின் விளக்கம்…"

கருத்துரையிடுக

Powered by Blogger