ஜோதிட அசுப தோஷங்கள் பகுதி 9 - கேந்திரசர்ப்ப தோஷம்…

ஜோதிட அசுப தோஷங்கள் பகுதி 9 - கேந்திரசர்ப்ப தோஷம்

ஜோதிடத்தில் உள்ள அசுப தோஷங்கள் பற்றி சில சில தோஷங்களாக இந்த பகுதிகளில் பார்த்து வருகிறோம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த ஒரு தோஷமானாலும் அது அந்த ஜாதகரீதியாக தீவிரமானால் தான் அந்த தோஷங்களால் தீய பலன்கள் ஜாதகருக்கு ஏற்படும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.


கேந்திரசர்ப்ப தோஷம்
லக்னம் மற்றும் லக்னத்திற்கு 4, 7, 10 ஆகிய வீடுகள் கேந்திர ஸ்தானங்கள் என்று அழைக்கபடுகிறது, இந்த கேந்திர ஸ்தானங்களில் மூன்று சாதகமற்ற கிரகங்கள் குறைந்தது மூன்று கேந்திரங்களில் அமைந்துள்ளது போது அது கேந்திரசர்ப்ப தோஷம் ஆகும். சாதகமற்ற கிரகங்கள் என்பது ஒவ்வொரு ஜாதகத்திற்கு தக்கவாறு மாறுபடலாம் பொதுவாக சாதகமற்ற கிரகங்கள் என்று அழைக்கப்படுவது முக்கியமாக இராகு, கேது அதற்கு அடுத்து சனி, சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் ஆகும்.

இதன் பலன்கள் -
மிக மந்தம் அல்லது மிக வேகம் காட்டக்கூடிய தன்மை. கள்ளத்தனம். நேர்மையற்ற அல்லது ஒழுங்கற்ற காரியங்கள். தந்திரமான அறிவு, தடைகள் சுற்றி நிறைந்த வாழ்க்கை ஆனாலும் அதை தாண்டி வாழும் விவேகம் உடையவர். சூழலுக்கு தக்கவாறு தன்னை மாற்றிக்கொள்வார் போன்ற பலன்கள் நடக்கும் சுப குரு கோள் பார்த்தால் தீமைகள் குறையும்.


0 Response to "ஜோதிட அசுப தோஷங்கள் பகுதி 9 - கேந்திரசர்ப்ப தோஷம்…"

கருத்துரையிடுக

Powered by Blogger