ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 51 - விமலா யோகம்…

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 51 - விமலா யோகம்

ஜோதிடத்தில் உள்ள ராஜ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஜ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஜயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும். மேலும் சில யோக அமைப்புகளுக்கு அந்த யோக அமைப்புக்கு காரணமான கிரகசார திசா புத்திகள் நடைபெறும் காலம் வந்தால் தான் யோக அமைப்புக்கான பலன்கள் வந்து சேரும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.


விமலா யோகம்
ஜென்ம லக்னத்திற்கு திரிகோண ஸ்தானங்களில்குரு பகவான் ஆட்சி பெற்றாலும் மற்றும் 12 ஆம் ஸ்தானத்தின் அதிபதி 12 ஆம் ஸ்தானத்தில் ஆட்சி பெற்றாலும் இந்த விமலா யோகம் ஏற்படும். முதல் வகை  விமலா யோகம் புறத்தூய்மைக்கு அதிகமாக சம்பந்தபட்டது இரண்டாம் வகை விமலா யோகம் ஆன்மீகத்திற்கு அதிகமாக சம்பந்தபட்டது ஆகும். இதில் மற்ற கிரகங்களின் ஒத்துழைப்பு மிக முக்கியம்.

இதன் பலன்கள் -
முதல் வகை யோகத்தால் சுத்தமான ஆடை, நேர்மையான நடத்தை, பிரகாசமான முகம் அல்லது சுற்றத்தாரால் புகழ், கல்வியில் நாட்டம் அதில் குறிபிடத்தக்க வெற்றி. தொடர்ந்து சீர்மிக்க பாதையில் பயணிக்க கூடியவர். அமைதியானவர். தேவைக்குதக்க பணம் பொருள் ஆளுமை உள்ளவர். இரண்டாம் வகை யோகத்தால் அதீத சக்தி அல்லது தனிபட்ட ஏதேனும் சிறப்பு ஆற்றல் பெற்றிருப்பார். தியானம் அல்லது யோகக்கலையில் நாட்டம் ஏற்படும். மற்ற கிரகங்கள் ஒத்துழைக்க ஒருவித சமாதி சுகமும் கிடைக்கும் வாய்ப்பும் உண்டு.


2017 வருட அக்னி நட்சத்திரம் கத்திர வெயில் காலங்கள்…

2017 வருட அக்னி நட்சத்திரம் கத்திர வெயில் காலங்கள்

ஜோதிட சாஸ்திரத்தை நம்பாத மக்கள் கூட வாயில் பல ஜோதிட சொற்களில் பயன்படுத்துவார்கள் அப்படி ஒன்றுதான் இந்த அக்னி நட்சத்திரம் காலம் ஆகும், இப்போது இந்த வருட அக்னி நட்சத்திரம் கத்திர வெயில் காலங்களை பார்ப்போம். 2017 வது ஆண்டு வந்தது இருந்து ஒரே வெயில்காலமாக இருக்கிறது ஏற்கெனவே மணல் இல்லாமல் வறண்டு போன ஆறுகளை பார்த்த தமிழகம் இப்போது அணைகளுக்கும் அதே கதி மெல்ல வருவதை பார்த்து துடித்து கொண்டிருக்கிறது அனைத்து மதத் தினரும் மழைக்காக இறைவனை வேண்டி வழிபட்டு கொண்டிருக்க இப்போது தான் புரிகிறது நமக்கு வள்ளுவனின் மழை வெண்பாவின் அருமை

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.


பொருள் - நீர் இல்லாமல் உலக உயிர்கள் இல்லை அதுபோல் தான் ஒவ்வொருவருக்கும் தங்களின் இயல்பான இயக்க ஒழுங்கும் நீர் இன்றி அமையாது.இதை தற்போது நாம் கண்கூடாக பார்க்கிறோம் பல பேர்கள் தங்களின் வேலையை விட்டு விட்டுக்கூட தண்ணீருக்காக முந்தி கொண்டிருக்கிறார்கள்.
 
 ஜோதிட சாஸ்திரத்தில் கார்த்திகை நட்சத்திரத்திற்கு அக்னி நட்சத்திரம் என்று ஒரு பெயர் உண்டு இந்த கார்த்திகை (அக்னி) நட்சத்திரத்தை அக்னி கிரகமான சூரியன் பயணிக்கும் காலம் கத்திர வெயில் காலம் ஆகும், அந்த அக்னி கிரகமான சூரியன் பரணி நட்சத்திரம் 3 ஆம் பாதம் தொடங்கி ரோஹிணி நட்சத்திரம் 1 ஆம் பாதம் முடிய பயணிக்கும் காலம் அக்னி நட்சத்திர காலம் ஆகும்,

இது இந்திய நாட்டிற்கும் பூமத்திய ரேகை ஒட்டிய பல நாடுகளுக்கும் மட்டும் பொருந்தும் கணிதம் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

2017 வருட அக்னி நட்சத்திர காலம் : -  04-05-2017 முதல் 28-05-2017 வரை உள்ளது.

2017 வருட கத்திர வெயில் காலம் : -  11-05-2017 முதல் 24-05-2017 வரை உள்ளது.

25-05-2017 காலை வரை சூரியன் கார்த்திகையில் இருந்தாலும் அதாவது 25-05-2017 காலை வரை கத்திரி உள்ள போதும் 24-05-2017 மாலை வரை தானே இந்தியாவில் சூரியனின் வெயிலின் தாக்கம் இருக்கும்.

தனிபட்ட முறையில் இந்த வெயினால் அதிகமாக உடல்சூடு அடைந்தவர்கள் மற்றும் பாதிக்கபட்டவர்கள் சூரியனின் அதிதேவன் ஆன சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு இளநீர், பன்னீர் வழங்கினால் ஒருவரின் தனிபட்ட பாதிப்புகள் குறைய இறைவன் அருள் புரிவார்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


கோச்சார கிரக ஸ்தான பலன்கள் - வியாழன் (குரு) 1 முதல் 6 இராசியில்…

கோச்சார கிரக ஸ்தான பலன்கள் - வியாழன் (குரு) 1 முதல் 6 இராசியில்…

கோச்சாரம் என்பதை அறியாதவர்கள் கோச்சார கிரக ஸ்தான பலன்கள் - அறிமுகம்இந்த பதிவை படித்துவிட்டு வர கீழ் உள்ளது புரியும் இது நமது லக்னத்தில் இருந்து கிரகங்கள் உள்ள ஸ்தான பலன் அல்ல இது ஒருவரின் பிறந்த அதாவது ஜென்ம இராசியில் இருந்து நவகிரகங்கள் தற்காலத்தில் சஞ்சரிக்கும் ஸ்தான பலன் ஆகும்.

அப்படி ஒருவரின் பிறந்த அதாவது ஜென்ம இராசியில் இருந்து நவகிரகத்தில் ஐந்தாவது நாளின் (ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன்...) கிரகமாக விளங்கும் வியாழன் அதாவது குரு பகவான் ஜென்ம இராசி தொட்டு முதல் 6 இராசியில் வரும்போது என்ன என்ன பலன்களை பொதுவாக தருவார் என்பதற்கான விவரங்களை பார்ப்போம்



- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

Powered by Blogger