திசாபுத்தி கணிதமுறையின் பகுதி 9 - இராகு திசாபுத்தியின் காலக்கட்டங்கள்…

திசாபுத்தி கணிதமுறையின் பகுதி 9 - இராகு திசாபுத்தியின் காலக்கட்டங்கள்

இந்திய ஜோதிட கணித சாஸ்திரத்திற்கு சிறப்பு சேர்க்கும் ஜோதிட கணித முறைகளில் இந்த திசா கணிதமுறை ஜோதிட பலன்களை நிர்ணயிப்பதில் திசாபுத்தி கணக்கிட்டு அறிவது என்பது பிரதானமானது, இந்த திசாபுத்தி கணக்கிட்டு பலன் அறியாமல் மற்ற பலன்கள் சொல்வது என்பது காலில்லாத உடலுக்கு சமம் என்று சொல்லாம், காரணம் ஜாதக பலன்கள் யாவும் திசாபுத்தி காலக்கட்டங்களின் படிதான் நடைபெறுகிறது. நவகிரகங்களும் தங்களின் பலாபலன்களை அவர் அவர்க்குரிய திசாபுத்தி காலக்கட்டங்களில் தான் வழங்குகின்றன எனவே தான் சொன்னேன் திசாபுத்தி அறியாது பலன் சொல்வது காலில்லாத உடலுக்கு சமம் என்று. இதன் படி நாம் இப்போது பார்க்க இருப்பது ஒவ்வொரு கிரகத்தின் திசா மற்றும் அதன் புத்தியின் காலக்கட்டங்களின் அளவுகள்.

ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் தொட்டு ஒருவரின் திசாபுத்திகள் தொடங்கும் உதாரணமாக ஒருவர் திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரங்களில் ஒருவர் பிறந்தால் அவருக்கு இராகு திசை முதலாவதாக கொண்டு திசாபுத்தி வயது காலகட்டங்கள் தொடங்கும் அதில் தாயின் கர்ப்பத்தில் குழந்தை இருந்த காலத்தை இராகு திசையில் கழித்து மீதி இராகு திசை நடக்கும் அதனால் இராகு திசை முதலாவது திசையாக தொடங்கினால் அது முழுமையாக பதினெட்டு ஆண்டுகள் நடப்பில் இருக்காது.

இராகுவுக்குரிய நட்சத்திரங்கள் மற்றும் திசையின் ஆண்டுகள் -

நட்சத்திரம்
நட்சத்திரத்திற்கு உரிய கிரக திசைகள்
கிரக திசையின் ஆண்டுகள்
திருவாதிரை
ராகு திசை
18 ஆண்டுகள்
சுவாதி
ராகு திசை
18 ஆண்டுகள்
சதயம்
ராகு திசை
18 ஆண்டுகள்

இராகு திசையில் இராகு உள்ளபட மற்ற கிரகங்களின் புத்திகள் கால அளவுகள் -

எந்த கிரகத்தின் திசை தொடங்குகிறதோ அந்த கிரகத்தின் புத்தி தான் முதலாவதாக வரும்.

இராகுவின் திசை 18 ஆண்டுகள் = 6480 நாட்கள் = 155520 மணி நேரம்

ராகு
திசை
6480
18 வருடம், 0 மாதம், 0 நாட்கள்
ராகு
புத்தி
972
2 வருடம், 8 மாதம், 12 நாட்கள்
குரு
புத்தி
864
2 வருடம், 4 மாதம், 24 நாட்கள்
சனி
புத்தி
1026
2 வருடம், 10 மாதம், 6 நாட்கள்
புதன்
புத்தி
918
2 வருடம், 6 மாதம், 18 நாட்கள்
கேது
புத்தி
378
1 வருடம், 0 மாதம், 18 நாட்கள்
சுக்கிரன்
புத்தி
1080
3 வருடம், 0 மாதம், 0 நாட்கள்
சூரியன்
புத்தி
324
0 வருடம், 10 மாதம், 24 நாட்கள்
சந்திரன்
புத்தி
540
1 வருடம், 6 மாதம், 0 நாட்கள்
செவ்வாய்
புத்தி
378
1 வருடம், 0 மாதம், 18 நாட்கள்

ஒருவருக்கு செவ்வாயின் திசை நடப்பு திசையாக இருந்து கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம் அந்த திசையின் 7 ஆண்டுகள் முடிந்தால் அடுத்ததாக அவர் அப்போது இருக்கும் வயதில் இருந்து தொடங்கி இராகு திசையின் 18 ஆண்டுகள் முழுமையாக நடக்கும்.

உதாரணமாக இராகு திசை ஒருவருக்கு அவரின் வயது 54 வருடம், 06 மாதம், 29 நாட்களில் ஆரம்பம் ஆகிறது என்று வைத்துக்கொள்வோம் அப்போது அவருக்கு தொடந்து நடக்கும் புத்திகளின் வயது காலகட்டங்கள் விவரம் பின்வருமாறு காலகட்டங்களில் வரும்.

ராகு
திசை
6480
13411
37 , 3 , 1
ராகு-திசை-ராகு-புத்தி
புத்தி
972
14383
39 , 11 , 13
ராகு-திசை-குரு-புத்தி
புத்தி
864
15247
42 , 4 , 7
ராகு-திசை-சனி-புத்தி
புத்தி
1026
16273
45 , 2 , 13
ராகு-திசை-புதன்-புத்தி
புத்தி
918
17191
47 , 9 , 1
ராகு-திசை-கேது-புத்தி
புத்தி
378
17569
48 , 9 , 19
ராகு-திசை-சுக்கிரன்-புத்தி
புத்தி
1080
18649
51 , 9 , 19
ராகு-திசை-சூரியன்-புத்தி
புத்தி
324
18973
52 , 8 , 13
ராகு-திசை-சந்திரன்-புத்தி
புத்தி
540
19513
54 , 2 , 13
ராகு-திசை-செவ்வாய்-புத்தி
புத்தி
378
19891
55 , 3 , 1

திசாபுத்தி கணிதத்தில் சிலர் வருடத்திற்கு 360 நாட்கள் என்று கணக்கிடுபவர்களும் உண்டு நான் மேலே கொடுத்து வருவது வருடத்திற்கு 360 நாட்கள் என்ற கணிதம் சிலர் வருடத்திற்கு 365  நாட்கள் என்று கணக்கிடுபவர்களும் உண்டு.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

கைரேகையும் ஜோதிடமும் பகுதி 3 - செவ்வாய் மேடு…

கைரேகையும் ஜோதிடமும் பகுதி 3 - செவ்வாய் மேடு

மனித வாழ்வை காலந்தொட்டு கணிக்க உதவும் வேத ஜோதிடத்திற்கு பிறகு அடியேனால் மிக மதிக்கபடும் கணிதங்கள் கைரேகை ஜோதிடம் மற்றும் நாடிஜோதிடம் ஆகும். இதில் கைரேகை ஜோதிடத்தில் மற்றும் நாடிஜோதிடத்தில் எனக்கு பெரிய படிப்பும் மற்றும் அனுபவமும் இல்லையேன்றாலும் வேத ஜோதிடத்தை ஒட்டிய ஒப்பீடு ஆன சில கருத்துகளை படித்துள்ளேன்  அதில் வேத ஜோதிடத்தில் எப்படி நவகிரகங்கள் இருக்கின்றனவோ அது போல கைரேகையிலும் இராகு கேது தவிர சப்தகிரகங்களின் தொடர்பு இருக்கிறது அதை கைரேகையில் கிரக ஆதிக்க மேடுகள் என்று அழைக்கப்படுகிறது அந்த சப்தகிரக மேடுகளுடன் நமது  வேத ஜோதிட கிரக மற்றும் ஸ்தான காரகத்துவங்களையும் சேர்த்து ஒப்பிட்டு இந்த பதிவை படித்த மற்றும் அனுபவ அறிவையும் இணைத்து எழுதுகிறேன்

செவ்வாய் மேடு -
கைரேகையில் செவ்வாய் மேடு இரண்டு பக்கங்களில் இருக்கும் முதலாவது மேல் செவ்வாய் மேடு கட்டை விரலுக்கும் (thump finger) ஆயள்ரேகைக்கும் நடுவில் இருக்கும் படத்தில் அது காட்டப்பட்டுள்ளது. அடுத்த செவ்வாய் மேடு கீழ் அதற்கு எதிர்புறத்தில் இருதய ரேகையின் முடிவில் ஒட்டி தொடங்கி சந்திர மேட்டின் எல்லையில் முடியும். ஆயள்ரேகையோட்டி வரும் மேல் செவ்வாய் மேடு ஆயுளுக்கு தேவையான உடல்பலத்தை முக்கியமாக காட்டும். சந்திர மேட்டை ஒட்டி வரும் கீழ் செவ்வாய் மேடு மனோதிடம், இருதய பலம் ஆகியவற்றை காட்டும். இராசி சக்கரத்திலும் இதை நாம் காணலாம் காலபுருஷ தத்துவத்தின் படி மேஷம் இராசி மனோதிடம், இருதய பலம் காட்டுவதாகவும் மேலும் விருச்சிகம் இராசி ஆயுள் பலம் மற்றும் ஆயுளுக்கு தேவையான உடல்பலத்தை காட்டுவதாகவும் அமைந்துள்ளது. செவ்வாய் மேடுகள் காரகத்துவம்  உடல்பலம், மனோதிடம், துணிவு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, அரசியல் அரசு சார்ந்த பலம், வீரம், கோபம், யுத்த வல்லமை, சம்காரம், வன்முறை ஆகியன செவ்வாய் கிரகம் மற்றும் செவ்வாய் மேட்டின் காரகத்துவங்கள் ஆகும். செவ்வாய் மேடுகள் பருத்து பரந்து நல்ல மேல் நோக்கிய சுருள் உடன் மேலும் நல்ல குறிகளுடனும் (நட்சத்திரம், சதுரம்...) அமைந்தால் நல்லது அதனால் மேலே சொன்ன காரகத்துவ பலன்கள் அவருக்கு சிறப்பான முறையில் அமையும். அதே போல ஜாதகத்தில் செவ்வாயின் மற்றும் அதன் ஸ்தானங்களான 1,8 ஆம் ஸ்தானமும் மற்றும் அதற்கு அடுத்து 2,3,6,7,10,11 ஆம் ஸ்தானமும் செவ்வாயின் பலத்தை பிரதிபலிக்கும் ஸ்தானங்கள் ஆகும். இவ்வாறு உள்ள அமைப்புகள் ஜாதகத்தில் நல்லவிதமாக அமைய மேலே சொன்ன செவ்வாயின் காரகத்துவ பலன்கள் வாழ்வில் பலப்படும்.

ராகுல் பஜாஜ் (Rahul Bajaj) ஜாதகம் கணிப்பு - தொழிலதிபருக்கான உயர்வுகள்..

ராகுல் பஜாஜ் (Rahul Bajaj) ஜாதகம் கணிப்பு -

ராகுல் பஜாஜ் இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவர். இவர் தனது தந்தை ஜம்னாலால் பஜாஜ் ஆல் 1945ல் தொடங்கிய பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் இளம் வயதில் பஜாஜ் குழுமத்தில் 1965 ல் மிக முக்கிய தலைமை பொறுப்பிற்கு வந்து சேர்ந்தார் அவரது தலைமையின் கீழ் பஜாஜ் ஆட்டோ சில வருடங்கள் கழித்து புதிய உயரங்களை தொட்டு வளர்ந்து வந்தது அதாவது பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் Rs.72 லட்சமாக இருந்த விற்றுமுதலை Rs.4600 கோடி விற்றுமுதலாக உயர்ந்தி காட்டினார். இவரின் ஜாதகத்தில் உள்ள தொழிலதிபருக்கான சிறப்பு யோகங்களை சிறிய அளவில் பார்ப்போம்.

ராகுல் பஜாஜ் (Rahul Bajaj) ஜாதகம்


இவரின் ஜாதக சிறப்புகளை பார்ப்பதற்கு முன் இந்தியாவில் சில பாரம்பரிய மக்கள் பிரிவால் மட்டுமே பெரிய தொழிலதிபராக முடியும் என்ற மனப்பான்மை நிலவுகிறது. அப்படியல்ல ஒழுக்கம், பொறுமை, ஒற்றுமை, புதுப்பித்தல்,  தலைமைத்திறன், முதலீட்டு அறிவு, விற்பனை அறிவு, தைரியம் போன்ற தொழிலுக்கான சிறப்பு பண்புகளுடன் காலமும் யோகமும் கூடிவர இந்தியாவின் எந்த ஒரு சாதாரண குடிமக்களும் கூட சிறந்த பெரிய தொழிலதிபர் ஆகலாம். அதற்கு உதாரணமாக எத்தனையோ வாய்ப்புகள் காட்டப்படாமல் விடப்பட்ட தமிழர்கள் எத்தனையோ பேர்கள் வெளிநாட்டில் அந்த கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகள் தரப்பட்டு காலமும் யோகமும் கூடிவந்து உயர்ந்து வெளிநாட்டிலேயே சிறந்த தொழிலதிபர்கள் ஆகிவுள்ளார்கள் எனவே இனி வரும் காலங்களில் நல்ல வளமான கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளான சூழலை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி தருவதாலும், இளைஞர்கள் தம்மில் உள்ள சாதி மத வேறுபாடுகளை களைந்து ஒன்றுபட்டு இணைந்து செயல்பட்டாலும் சிறந்த தொழிலதிபர்களை உருவாக்கலாம்.



மேலும் தான் ஒருவனே தொழில் நிறுவனத்தை தலைமை பொறுப்பில் ஆள்வேன் மற்றும் எனது சொந்தங்களே முக்கிய பொறுப்புகளில் இருப்பார்கள் போன்ற பழைமையான தொழில் மரபுகளை மாற்றி, திறமைக்கு தக்க இடத்தை உழைப்பவர்களுக்கு தந்து அவர்களையும் உயர் பொறுப்புகளில் கொண்டு வரும் அமெரிக்க ஜப்பான் சீனாவில் நிலவுகிற தொழில் மரபுகளை இங்கு கொண்டு வரவேண்டும். உலகில் 8 கோடிக்கி மேல் தமிழ் மக்கள் தொகை இருக்கிறார்கள் என்று சொல்லுவது பெருமை அல்ல எத்தனை சிறந்த தொழிலதிபர்கள், விஞ்ஞானிகள், கலை மற்றும் கல்வி அறிஞர்கள் உலக அளவில் தன்னை மேம்படுத்தி உள்ளார்கள் என்பதே பெருமை. அதற்கு ஒழுக்கம், ஒற்றுமை, காலத்திற்கு தக்கவாறு மரபுகளை புதுப்பித்தல், திறன்களை வளர்த்தல் போன்ற பண்புகள் வளர வேண்டும்.



இனி ராகுல் பஜாஜ் அவர்களின் ஜாதக சிறப்புகளை பார்ப்போம் சுயதொழில் நடத்தும் தனது தந்தையே ஒரு சிறந்த தொழில் முனைவாராக இருந்து வழிகாட்டினார் இவரின் ஜாதகத்தில் தந்தை ஸ்தானத்திற்கும் மற்றும் கர்ம தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதிகள் ஒரு கிரகமே அது சனி பகவான் அந்த சனி பகவான் 11க்குடைய லாப ஸ்தானத்தில் அமர்ந்து 10க்குடைய சனியாகவே இருந்து அந்த தந்தை ஸ்தானத்தின் அதிபதி இவரின் ஜென்ம லக்னத்தை 3ஆம் பார்வையாக பார்பதுவும்  லாப ஸ்தானாதிபதி 10ல் அமர்ந்து குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்துள்ள லக்னாதிபதியை 5ஆம் பார்வையாக பார்ப்பதும் சேர்ந்து அமைந்ததால் மேலும் 5க்குடைய பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி லக்னத்தில் இருந்து அவரையும் தந்தை மற்றும் தொழில் ஸ்தானத்தின் அதிபதி சனி 3ஆம் பார்வையாக பார்வை செய்வதால், மேலும் நவாம்சத்தில் இருவரும் ஆட்சி அம்சம் போனதாலும் தனது தந்தையால் தொடங்கபட்ட நிறுவனத்தில் இவரின் தொழில் வாழ்க்கை மேம்பட்ட ரீதியாக ஆரம்பமானது.



அதற்கு முன் இவரின் ஜாதகத்தில் 4,5 க்குடைய சூரியன், புதன் சேர்ந்து அமைந்து சனியாலும் பார்க்கபட்டு மேலும் 4,5 ஸ்தானத்தை  சனி, குரு, செவ்வாய் பார்வை இருப்பதால் பொருளாதாரம், சட்டத்துறையில் பட்டம் பெற்றார் பின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் M.B.A. முடித்தார். இளவயதில் படித்த படிப்பு குடும்பத்தின் தொழில் துறைக்கும் மேலும் அவரின் தொழிலதிபர் ஆகும் கனவுக்கும் சிறந்த இணைப்பு பாலமாக தொடங்கியது.



சரி முக்கிய விஷயத்திற்கு வருவோம் ஆம் பெரிய தொழிலதிபர் யோகம் பெற இதற்கு 2ஆம், 5, ஆம், 8ஆம், 11 ஆம் ஸ்தானங்களுக்கு இடையே ஒன்றுக்கொன்று பலமான சுப தொடர்பாக இருக்க வேண்டும்,  அத்துடன் லக்னம் மற்றும் 10 ஆம் ஸ்தானத்திடமும் சுப பலமான தொடர்புகள் 2,5,8,11 ஸ்தானத்துடன் இருக்க வேண்டும். இவரின் ஜாதகத்தில் -



> 2 ஆம் அதிபதி 5 ஆம் அதிபதியான புதன் லக்னாதிபதியான சுக்கிரனுடன் சிறப்பாக சொல்லப்படும் பரிவர்த்தனை யோகம் ஏற்பட்டுள்ளது.

> 8 ஆம் அதிபதி 11 ஆம் அதிபதியான குரு பகவான் 10ல் அமர்ந்து சிறப்பாக சொல்லப்படும் பரிவர்த்தனை யோகத்தை சனி பகவானுடன் ஏற்பட்டுள்ளது.

> சுப பார்வை பலம் கொண்ட குரு பகவான் பணபர ஸ்தானமான 8 ஆம் அதிபதி 11 ஆம் அதிபதியாகி லக்னாதிபதியான சுக்கிரனை பார்வை செய்துள்ளது.

> 10, 11 ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை மற்றும் இந்த ஜென்ம லக்னத்திற்கு யோகாதிபதிகளான 1,2 ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை வலுவடைந்து அமர்ந்துள்ளது.

> 5 ஆம் ஸ்தானத்தை 9,10க்குடைய சனி பகவான் 7 ஆம் பார்வையாக பார்ப்பது.



இப்படியாக 1,2,5,8,10,11 ஆகிய ஸ்தானங்கள் இராசி கட்டத்தில் வலுவாக பிணைந்திருந்தாலும் இது மட்டும் பத்தாது, இவருக்கு பரிவர்த்தனை யோகம் எப்படி மேம்பட்டதாக அமைதுள்ளதோ அது போல இராசி கட்டத்தில் எந்த ஒரு கிரகமும் ஆட்சி உச்சம் அடையாத போதும் நவாம்சத்தில் இராசி கட்டத்தின் 1,8,10,11 ஆகிய ஸ்தானங்களின் அதிபதிகள் வலுவடைந்துள்ளனர் அதாவது நிறைவாக லக்னாதிபதி சுக்கிரன் நவாம்சத்தில் ஆட்சி அம்சம். 9,10 ஆம் ஸ்தானாதிபதி சனி நவாம்சத்தில் ஆட்சி அம்சம். 8,11 ஆம் ஸ்தானாதிபதி குரு பகவானும் நவாம்சத்தில் ஆட்சி அம்சம். இராசி கட்டத்தில் வாகன ஸ்தானமான 4 ஆம் ஸ்தானாதிபதி சூரியனும் நவாம்சத்தில் ஆட்சி அம்சம். வரிசையாக நான்கு கிரகங்கள் நவாம்சத்தில் ஆட்சி அம்சத்தை அடைந்துள்ளன.



9,10 க்குடையவர்கள் ஒரே அதிபதியாக இருந்து அந்த கிரகம் 11க்குடையனுடன் பரிவர்த்தனை பெற்று அமைந்திருப்பதும் ஒரு வகையில் தர்மகர்மாதிபதி யோகம் ஆகும் இந்த யோகம் தான் செய்யும் செயல்களுக்கு நல்ல லாப பலன் கிடைக்கும், சிறந்த தொழில் மதிப்பு, மரியாதையை பெறும் மேலும் சிறந்த நிர்வாகத்திறன், சிறப்பாக திட்டமிடும் ஆற்றல் தரும்.



தொழிலதிபரின் ஜாதகத்தில் 10ஆம் தொழில் ஸ்தானாபதியான சனி வலுவடையாமல் இருக்குமா ஆம் இவருக்கு அம்ஸ கட்டம், பஞ்சாம்சம், சஷ்டாம்சம், சப்தாம்சம், திரிம்சாம்சம் ஆக தசவர்க்கங்களில் ஐந்து வர்க்கங்களில் சனி பகவான் ஆட்சி பெற்று அமைந்துள்ளது.


மேலும் 11 ஆம் ஸ்தானம் 39 பரல்களும் அம்சங்கள் கூட்டி மொத்த ஸ்தான பலன்களில் பார்த்தால் வரிசையாக 9ஆம் ஸ்தானம்,10ஆம் ஸ்தானம்,11 ஆம் ஸ்தானம் என உயர்வான பரல்களை கொண்டுள்ளது. இதை சற்று எடுத்துகாட்டும் விதமாக நவாம்சத்தில் லக்னாதிபதி 10க்குடையவன் ஆன குரு பகவான் 10ல் 9க்குடைய செவ்வாயுடன் சேர்ந்து ஆட்சி அம்சம், அடுத்து 11க்குடைய சனி 11ல் ஆட்சி அம்சம். சனி திசையில் 33 வயது வரை இருந்தது இதில் நிறுவனத்தில் தலைமை பெறுப்பை ஏற்றார். புதன் திசையில் 50 வயது வயது வரை இருந்தது இதில் தான் 1000 கோடிகளுக்கு மேல் விற்றுமுதலை உயர்த்தினார். கேதுவிற்கு பிறகு வந்த சுக்கிரன் திசையில் பத்ம பூஷன், முன்னாள் மாணவர் சாதனையாளர் விருது (ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல்), திலக் விருது இன்னும் பல தேசிய மற்றும் சர்வதேச கவுர விருதுகளை பெற்றார்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

கிரகங்களின் ஷட்பலம் - தனுசு இராசியின் நவகிரகங்கள் இருப்பதால் பெறும் ஸ்தான பலம்…

கிரகங்களின் ஷட்பலம் - தனுசு இராசியின் நவகிரகங்கள் இருப்பதால் பெறும் ஸ்தான பலம்

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஷட்பலம் காணப்பட்டு அது ஒருவரனின் ஜாதக பலனை அறிவதற்கு உபயோகமாக இருக்கும் ஒரு நல்ல முறையாகும், ஷட் (षट्- SaT) என்றால் "ஆறு" என பொருள்படும். "ஷட் பலம்" என்றால் "ஆறு விதமான வலிமை" எனப் பொருள்படும்.

கிரகங்களின் ஆறுவிதமான பலங்கள் -

1) ஸ்தான பலம்
2) திக் பலம்
3) கால பலம்
4) சேஷ்ட பலம்
6) த்ருக் பலம்

இந்த ஷட் பலத்தில் நாம் முதலில் பார்க்க இருப்பது ஸ்தான பலம் ஆகும் இந்த ஸ்தான பலத்திற்கு உள் பிரிவுகள் உண்டு அவை

ஸ்தான பலம் - உட்பிரிவுகள்

1) ஆறுநிலை பலம்
2) பால்பலம்
3) இருப்புபலம்
4) உச்சபலம்
5) கேந்திர பலம்
6) திரிகோண பலம்
7) வர்க்க பலம்

இது ஒரு புத்தகத்தில் அடங்கக் கூடிய அளவுக்கான விஷயங்கள் என்பதால் ஒர் இரு பதிவுகளில் கண்டுவிட முடியாது எனவே முதலில் ஸ்தான பலத்தின் உள் பிரிவான ஆறுநிலை பலம் மற்றும் பால்பலத்தை மட்டும் முதலாவதாக பார்ப்போம், அதில் ஒவ்வொரு இராசியாக பார்க்கலாம் காலசக்கரத்தின் முதல் இராசியான மேஷம் முதல் கடைசியான மீனம் வரை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

1) ஆறுநிலை பலம்
ஒவ்வொரு இராசியில் அமரும் போது ஒவ்வொரு விதமான பலம் மற்றும் பலவீனங்களை அடைகின்றன இது ஒரு ஜாதக கணிதத்தில் முக்கிய பங்காற்றுகின்றன அதாவது ஜோதிடத்தில் இராசி சக்கரத்தில் ஒவ்வொரு பிரிவு இராசி மண்டலத்திலும் ஒரு கிரகம் வந்து சேர்வதன் மூலம் அந்த இடத்திற்கு தக்கவாறு ஒரு அவஸ்தை (கிரணங்களில் சூழ்நிலை மாற்றம்) அடைகின்றன என்பதை நாம் முன்பே முந்தை பதிவுகளில் ஒவ்வொரு இராசியாக பார்த்தோம் அதாவது ஆட்சி, உச்சம், நட்பு, சமம், பகை, நீசம் என ஆறு வகையான அவஸ்தைகளாக பிரித்து எந்த எந்த இராசி எந்த எந்த கிரக்ங்களுக்கு இந்த ஆறு விதமாக கொண்ட தன்மைகளை (அவஸ்தை) என்பதை பார்த்தோம் அதை நீங்கள் மறந்திருக்கலாம் அதன் இணைப்பு குறிப்பு இது - 12 இராசிகளில் நவகிரகங்கள் இருப்பதால் பெறும் தன்மைகளின் தொகுப்பு...

2) பால்பலம்
பால்பலம் என்பது ஒவ்வொரு இராசியையும் ஆண்பால் இராசி, பெண்பால் இராசி என்று பிரிக்கபட்டுள்ளது அதன் விவரத்தை நான் ஏற்கெனவே இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளேன் 12 இராசிகளில் ஒற்றை மற்றும் இரட்டை, ஆண் பெண் இராசி... , அதே போல நவகிரகங்களையும் ஆண் பெண் அலி பிரிவுகள் உண்டு பண்ணபட்டுள்ளது சூரியன் = ஆண், சந்திரன் = பெண், செவ்வாய் = ஆண், புதன் = அலி, வியாழன் (குரு) = ஆண், சுக்கிரன் (வெள்ளி) = பெண், சனி = அலி, இராகு = பெண், கேது = அலி எனப்பிரிக்க பட்டுள்ளது

3) இருப்புபலம்
இருப்புபலம் என்பது ஒவ்வொரு இராசியையும் சரம், ஸ்திரம், உபயம் இராசி என்று பிரிக்கபட்டுள்ளது அதன் விவரத்தை நான் ஏற்கெனவே இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளேன் உங்கள் லக்னம் சரமா?, ஸ்திரமா?, உபயமா?... , அதே போல நவகிரகங்களையும் சரம், ஸ்திரம், உபயம் பிரிவுகள் உண்டு பண்ணபட்டுள்ளது சூரியன் = ஸ்திரம், சந்திரன் = சரம், செவ்வாய் = ஸ்திரம், புதன் = உபயம், வியாழன் (குரு) = உபயம், சுக்கிரன் (வெள்ளி) = சரம், சனி = சரம், இராகு = சரம், கேது = ஸ்திரம் எனப்பிரிக்க பட்டுள்ளது.


தனுசு ராசி மண்டலத்தில் நவகிரகங்கள் இருப்பதால் அவைகள் பெறும் ஆறுநிலை, பால்பலம், இருப்புபலம் விவரங்கள் -

கோள்கள்
அவஸ்தை
ஆறுநிலை
பால்பலம்
இருப்புபலம்
மொத்தம்
சூரியன்
நட்பு
75%
10%
0%
85%
சந்திரன்
சமம்
50%
0%
0%
50%
செவ்வாய்
நட்பு
75%
10%
0%
85%
புதன்
சமம்
50%
4%
10%
64%
வியாழன்
ஆட்சி
100%
10%
10%
120%
சுக்கிரன்
நட்பு
75%
0%
0%
75%
சனி
சமம்
50%
4%
0%
54%
ராகு
நட்பு
75%
0%
0%
75%
கேது
நட்பு
75%
4%
0%
79%


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

Powered by Blogger