ஒன்பதாம் ஸ்தானத்தின் பெருமை விளக்கம் தர்மத்தின் பிரதிபலன் தூய்மையான இன்பம் பாக்கியத்தின் பிரதிபலன்

மகாசிவராத்திரி நாளான இன்று உயரிய ஜோதிடத்தில் இராசி சக்கரத்தில் ஆன்மீக ஸ்தானமாக விளங்கும் லக்னத்தில் இருந்து எண்ணி வர வரும் ஒன்பதாம் ஸ்தானத்தின் பெருமை இப்போது பார்ப்போம். ஒன்பதாம் ஸ்தானத்திற்கு தர்ம ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானம் என்று பெயர்கள் உண்டு அத்துடன் சிறப்பாக தேவதா ஸ்தானம் என்று அதாவது புனித தெய்வங்கள், தேவர்கள், தேவதைகள் வாசம் செய்யும் இடமும் ஆகும். இதை ஒவ்வொன்றாக இப்போது பார்போம்.

முதலில் தர்ம ஸ்தானத்தை பற்றி பார்ப்போம் இந்த இந்து மதத்தில் இறைவனுக்கு நிகரான ஒரு வார்த்தை இருக்குமானால் அந்த வார்த்தை தர்மம் ஆன்மீக பெரியோர்களால் இறைவனுக்கும் மேலாக சில இடங்களில் போற்றிய வார்த்தை இந்த தர்மம். இது இந்து மதத்தில் மட்டும் மல்ல புத்த மதத்தில் புத்தரின் கூற்றுப்படி கடவுளை பற்றி விளக்க தேவையில்லை நீ இன்பமாக இருப்பதற்கும் துன்பமாக இருப்பதற்கும் உன் உள் இருக்கும் ஆசாபாசங்களே காரணம் என்ற புத்தரும் இந்த தர்மம் என்ற வார்த்தை தனது போதனையில் அடிக்கடி சேர்த்து கொள்வார்.

தற்காலத்தில் எக்காலத்திலும் அரசியலில் இந்த "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்" என்ற சொற்றொடர் சொல்லப்படும் ஆனால் அதன் உண்மையான தத்துவ வார்த்தை என்பது இது தான் "தர்மத்தை நீ காப்பாற்றுவாயானால் தர்மம் உன்னையும் காப்பாற்றும்" அதாவது அரசியலில் தர்மத்தை நீ காப்பாற்றி நடந்து கொள்வாய் ஆனால் தர்மமும் உன்னை காப்பாற்றும் விதத்தில் நடந்து கொள்ளும் உடனே வெற்றிதான் தர்மத்தின் பரிசு என்று கருத வேண்டாம் கிழே கொடுத்துள்ள திருக்குறள் அதற்கு விளக்கும் சாட்சி.

சரி சில பாமரர்கள் மத்தியில் பலரும் இந்த தர்மம் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு தமிழில் ஈதல் (தானம்) அதாவது இல்லாதவருக்கு இருப்பவன் தருவது என்று மட்டும் பொருள் கொள்ளப்படுகிறது, அது மட்டும் மல்ல தமிழில் தர்மத்திற்கு நிகரான பல சொற்கள் உண்டு அவை அறம், ஒழுங்கு, நல்வினை என்று பல வார்த்தைகள் உள்ள போதும் அதில் தமிழ் சான்றோர்களால் அதிகமாக கடைபிடித்த வார்த்தை அறம், ஒழுக்கம் அதை திருவள்ளுவர் அறத்தின் பெருமையை கூறும் விதத்தை பாருங்கள்

அறத்தான் வருவதே இன்பம்; மற்று எல்லாம்
புறத்த; புகழும் இல. - திருக்குறள்

பொருள் - அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும்; அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை; புகழும் இல்லாதவை.

மேலே சொன்னது இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் தர்மத்தின் பரிசு அதாவது தர்மத்தை கடைபிடிப்பதால் கிடைக்கும் பரிசு வெற்றியல்ல தர்மத்தை கடைபிடிப்பதால் கிடைக்கும் பரிசு இன்பம். பொது வாழ்வில் அதற்கு சிறந்த உதாரணம் பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த காலத்தில் உரிய பணிகளை தர்மத்தின் படி கர்மம் செய்து கர்ம வீரர் என்று போற்றபட்டார் கடைசிகால வாழ்க்கை மரணத்திற்கு பின் அரசியல் சாயம் இல்லாத மக்களாலும் திருவள்ளுவர் சொன்ன அந்த புகழுடன் வரலாற்றில் நிறைந்தார்.


இது போன்று இல்லாமல் சாதனைகள் பெரிதாக செய்யாமல் சாதாரணமான மனிதராக வாழும் மனிதர்களில் கூட பலர் இந்த ஒன்பதாம் ஸ்தானம் நன்றாக இருக்க கூடிய நபர்கள் எத்தனையோ குடும்பஸ்தர்கள் தங்களின் இல்லற வாழ்வில் தர்மத்தின் படி தொழில் செய்து வாழ்ந்து பெரிய பெயர் புகழ் அடையவிட்டாலும் கூட தங்களின் தொழில் வாழ்விலும் குடும்ப சமூக அளவிலும் தங்களுக்கு உண்டான அளவில் நல்ல பெயர் புகழ் அடைந்து மனநிறைவையும் அடைந்து எத்தனையோ பேர்கள் இன்றளவிலும் இல்லறத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் இதன் மூலம் நாம் தெரிந்து கொள்வது தர்ம ஸ்தானமான ஒன்பதாம் ஸ்தானத்தின் வழியாக ஒருவருக்கு கிடைக்கும் நல்ல பலன் தூய்மையான இன்பம், புகழ்.

பாக்கிய ஸ்தானத்தை பற்றி பார்ப்போம் இந்த பாக்கியம் என்றால் சென்ற பிறவியில் செய்த புண்ணியத்தால் கிடைக்கும் பரிசு (அதிர்ஷ்டம்) தான் இந்த பாக்கியம், பாக்கியம் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு தமிழில் அருள் அல்லது நல்லருள் (நல்வினை பயன்) என்று சொற்கள் கையாளப்படுகின்றன, அதாவது போன பிறவியில் செய்த புண்ணியத்தின் பயனாக இந்த பிறவியில் இவனுக்கு கிடைக்கும் அதிர்ஷ்டமே இந்த பாக்கியம். அதாவது பொதுவாக அனைவரும் "போகும் போது என்னப்பா கொண்டு போகப்போகிறோம்" என்று பேச்சு வழக்கில் செல்லுவது உண்டு அதன் பொருள் இறந்த பிறகு எதையும் கொண்டு போக முடியாது என்பது தான். ஆனால் ஆன்மீக உண்மை என்ன தெரியுமா இறந்த பிறகு ஒவ்வொருவரும் சிலவற்றை எடுத்து கொண்டு தான் போகிறார்கள். ஆச்சரியமாக இருக்கிறதா நான் சொன்னால் கூட உங்களுக்கு சந்தேகம் வரலாம் இதோ திருமூலர் சொல்கிறார் இறந்த பிறகு ஒவ்வொருவரும் இரண்டு விஷயங்களை எடுத்து கொண்டு போகிறார்களாம்

பண்டம் பெய் கூரை பழகி விழுந்தக்கால்
உண்ட அப் பெண்டிரும் மக்களும் பின் செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநடவாதே. - திருமூலர்

பொருள் -
வினைநுகர்வுப் பண்டங்களைப் பெய்துவைத்து மேற் கூரையும் அமைத்து நன்மையும் வன்மையும் உள்ளனபோற் காணப்படும் இவ்வுடல் நாட்பட மூப்புப் பிணியுற்றுச் சாக்காட்டினை எய்தும். எய்தவே, இவ்வுடலாலும் உடலுழைப்பாற் பெற்ற உடைமையாலும் ஐம்புலன் நுகர்வு ஆரத்துய்த் தின்புற்ற பெண்டிரும் மக்களும் தத்தம் உடம்பினை நீக்கி அவ் ஆவியுடன் பின் செல்லார். ஆயின் செந்நெறியாகிய நன்னெறிக்கண் நின்று மேற்கொண்ட திருவருளால் எய்தும் சீலமும் திருவடியுணர்வுமே உடன் துணையாய் ஒத்து வழிநடக்கும். ஏனைய உலகியற் பொருள்களும் செயல்களும் நிலைத்த துணையாக அவ்வழியில் நடவாவென்க. சீலமும் அறிவும் சொல்லவே இனக்கோளாக நோன்பும் செறிவும் கூட்டிக் கூறிக்கொள்க.

புரியாதவர்களுக்கு எளிய பொருள் -
உடல் உறுப்புகளின் செயல்பாடுகளால் இயங்கி அடைந்த செல்வங்களை நம்முடன் கூட நின்று அனுபவிக்கும் கணவன் \ மனைவி, பிள்ளைகளும் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் நின்று இறந்த பின் உடன் வரமாட்டார்கள் ஒருவன் தன் வாழ்வில் செய்த தூய புனித நடவடிக்கை, செயல்பாடுகள் (விரதம்) மற்றும் அந்த வாழ்வில் இறைவனை அடைவதற்க்காக அடைந்த பக்குவம், கல்வி (ஞானம்) இந்த இரண்டும் மட்டும் ஒருவன் இறந்த போது அவனை பின் தொடர்ந்து வரும்.

போன பிறவியில் செய்த இந்த தூய புனித நடவடிக்கை, செயல்பாடுகளால் இப்பிறவியில் ஒருவனுக்கு கிடைப்பதே பாக்கியம் அதை பிரதிபலிக்கும் ஸ்தானமோ இந்த ஒன்பதாம் ஸ்தானம் அது நன்றாக இருக்குமானால் அதனால் அவன் இப்பிறவியில் எடுக்கும் நல்ல காரியங்கள் தடையின்றியும், கெட்ட காரியங்களுக்கு தடை உண்டாகி அவனை இறைவன் தடுத்து நல் வழிபடுத்தும் அருளும் கிடைக்கும். காலபுருஷ தத்துவ படி ஒன்பதாம் ஸ்தானம் என்ற பெருமையை தனுசு இராசி பெறுகிறது அந்த தனுசு இராசியை வேதங்களும் மந்திரங்களும் முழங்கும் இராசி என்று ஜோதிட நூல்கள் புகழ்கின்றன.

இந்த மகாசிவராத்திரி நன் நாளாலில் அனைவரும் தர்ம படி நடந்து தர்மமும் பாக்கியமும், விரதம் ஞானம் கடைபிடித்து உயர்ந்த செல்வங்களையும், அறிவையும் பெற்று இறைவன் அருள் கொண்டு உலகை அனுபவித்து வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

நவகிரகங்களுக்கான திதிகளின் ஆட்சி...

நவகிரகங்களுக்கான திதிகளின் ஆட்சி...

ஒவ்வொரு திதியையும் ஒவ்வொரு கிரகங்கள் ஆட்சி செலுத்துகின்றன அவைகளின் அட்டவனை பின் வருமாறு கொடுத்துள்ளேன்.  ஜோதிடத்தில் திதிகளின் அடிப்படை தெரிந்துகொள்ள இதை சொடுக்கவும் - ஜோதிடத்தில் திதிகளின் அடிப்படை விளக்கம்

திதிகளின் எண்
திதிகளின் பெயர்
ஆட்சியாளர்
1 & 9
பிரதமை - நவமி
சூரியன்
2 & 10
துவதியை - தசமி
சந்திரன்
3 & 11
திருதியை - ஏகாதசி
செவ்வாய்
4 & 12
சதுர்த்தி - துவாதசி
புதன்
5 & 13
பஞ்சமி - திரியோதசி
வியாழன்
6 & 14
சஷ்டி - சதுர்தசி
சுக்கிரன்
7 & முழுமதி
சப்தமி - பௌர்ணமி
சனி
8 & இருள்மதி
அஷ்டமி - அமாவாசை
இராகு, கேது

காலசர்ப்பம் (இராகு, கேது) காலசர்ப்ப யோகம் & காலசர்ப்ப தோஷம்...

காலசர்ப்பம் (இராகு, கேது) காலசர்ப்ப யோகம் & காலசர்ப்ப தோஷம்...


ஜோதிடத்தில் பயின்ற பல ஜோதிடர்களை குழப்பும், பலன்களை எடுப்பதிலும் அதற்க்கான விதிகளை பிடிப்பதிலும் முரண்பட்ட கருத்துருக்களை கொண்டு வருவதாக இருப்பது இந்த காலசர்ப்பம் இதை யோகமா அல்லது தோஷமா என்று பலரும் பலவிதத்தில் விதிகளை வகுத்து சொல்லுவார்கள். சிலர் சில விதியை சொல்லி அதுவே உண்மையானது என்றும் சொல்லுவார்கள். இப்படி பல ஜோதிட கருத்துருக்களை கொண்ட இந்த காலசர்ப்ப யோகமோ & காலசர்ப்ப தோஷமோ அதை பற்றிய விளக்கமோ அல்லது விவாதமோ செய்ய எப்போதும் விரும்பவில்லை அதை பற்றி பதிவும் இது இல்லை இதில் காலசர்ப்பத்தின் அடிப்படை விஷயங்களை மட்டுமே இங்கு சொல்ல உள்ளேன்.

காலசர்ப்பம் என்றால் என்ன என்பதை தெரிவதற்கு முன் இராகு கேது வின் அடிப்படை வரலாற்றின் சிறு அறிமுகம் துர்வாசரின் சாபத்தால் தேவர்கள் முதுமையுற நேர்ந்தது அதை போக்க மரணமும் முதுமையும் மற்ற ஆயுளை பெற அமிர்தம் தேவர்களுக்கு தேவைபட்டது பாற்கடலை கடைய அது கிடைக்கும் என்று அறிந்து அதை கடைய மத்து வேண்டும், கருடனின் துணை கொண்டு மந்தார மலையை மத்துக்காக கொண்டு வந்தனர், கயிறுக்காக வாசுகியை அழைக்க அது சுணக்கம் காட்ட அதன் பாதாள லோகத்து ருத்திரர்களின் தலைவனான சிவனிடம் விஷ்ணு முறையிட அவர் வாசுகியை செல்ல பணித்தார் இப்படியாக பாற்கடலை கடைய ஆலகால விஷத்தை சிவனிடம் கொடுத்து விட பின் அமிர்தம் அருந்தபட்டது அதனை திருமால் மோகினி அவதாரம் கொண்டு முதலில் தேவர்களுக்கு வழங்குகையில், குறுக்கே புகுந்து ஒரு அசுரன் அமிர்தத்தை பருகியதை அறிந்த சூரிய-சந்திரர்கள் இவ்விடயத்தை திருமாலிடம் கூற அவர் தன் சக்ராயுதத்தால் அவனை வெட்ட அத்துண்டங்களே ராகு கேது ஆயினர். அவ்வசுரனின் உடல் இரண்டாக பிளவுபட்டு பாம்பின் தலையோடு கூடிய உடல் கேதுவாகவும் முண்ட உடலுடன் உள்ள வால் இராகு ஆனது என்பது புராண ஐதீகம்.

இப்படியாக காலசர்ப்பம் என்றால் கொடிய விஷம் கொண்ட கருப்பு அல்லது அடர் நீல ராஜநாகம் என்று பொருள் இது 360 பாகை கொண்ட இராசி சக்கரத்தில் எதிர் எதிர் ஆக 180 பாகை தலை வால் கொண்டு இந்த கருப்பு அல்லது அடர் நீல ராஜநாகம் (இராகு, கேது) ஆக இடஞ்சுழியாக (வக்கிரமாக) சுற்றி வருகிறது. மேல் படத்தை பார்த்து கொள்ளவும் அதில் ரிஷபத்தில் இராகுவும் விருச்சிகத்தில் கேதுவும் இருந்தால் எப்படி பாம்பின் அமைப்பு இருக்கும் என்று காட்ட பட்டுள்ளது.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


Powered by Blogger