புதன், 15 ஏப்ரல், 2015

ஜாதகத்தில் சூரியன் + செவ்வாய் சேர்ந்தால் பொதுப்பலன்கள்...

சூரியன் + செவ்வாய்  சேர்ந்தால் பொதுப்பலன்கள்

தலைமைத்துவம் திறன், நல்ல மேலாண்மை திறன், தனித்துவம், நல்ல நிலையில் நின்றால் சரியான கோபம், துணிவு சகோதர உறவுகளால் நன்மை அதற்கு மாறாக இருந்தால் வரம்புமீறிய கோபம், தவறான காரியங்களில் துணிவு, சகோதர உறவுகளால் பிரச்சினை. எதிரிகளை வீழ்த்தும் திறன், இரண்டு மூன்று வேலை மாற்றம் பிறகு நிரந்தர தொழில் அமையலாம்.

சூரியன்+செவ்வாய் பலமிழந்திருந்தால் உஷ்ண சம்மந்தபட்ட நோயிகள், கண்களில் பாதிப்பு இருதயக் கோளாறு, மஞ்சள் காமாலை, மூளை கோளாறு, தந்தைக்கு தோஷம் உண்டாகும். வண்டி வாகனங்களால் விபத்துகள் உடன் பிறந்தவர்களுடன் பிரச்சனை கெட்ட சகவாசங்களால் அவமானம், அரசாங்கத்திற்கு அபராதம் கட்டும் சூழ்நிலை உண்டாகும்.

இதில் சூரியன், செவ்வாய் ஒரு ஜாதகத்தில் எந்த வீட்டில் கூடியிருந்தாலும் இருதாரம் அமையும் என்ற பழமொழியும் உண்டு.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக