புதன், 12 ஆகஸ்ட், 2015

ஜாதகத்தில் குரு ஆட்சி, உச்சம் அடைந்தால் ஏற்படும் பொதுபலன்கள்…


ஜாதகத்தில் குரு ஆட்சி, உச்சம் அடைந்தால் ஏற்படும் பொதுபலன்கள்

முதலில் ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளவும் உச்ச பலம் பெற்ற ஒரு கிரகம் தன் உச்ச பலத்தை செயல்படுத்த முடியாத சில அமைப்புகளும், நீசம் அடைந்த ஒரு கிரகம் சில அமைப்புக்களால் சிறப்பான பலன்களை தருவதும் நம் அனுபவ உண்மை அதனால் ஒவ்வொரு ஜாதகத்திற்கும் தனிதனியாக தக்கவாரு அவைகள் மாறுபடும் தன்மை கொண்டவை எனவே ஆட்சி, உச்ச பலத்தை ஒருவர் அனுபவிக்க முடியாமலும் போகலாம் அல்லது குறைவாக அனுபவிக்கலாம், அல்லது அந்த முழுமையான திசா பலன்கள் இன்னும் வராமலும் இருக்கலாம்.

குருவின் ஆட்சி வீடு தனுசு, மீனம் ராசி
குருவின் உச்ச வீடு கடகம் ராசி

ஜாதகத்தில் குரு ஆட்சி வீடான தனுசு, மீனம் ராசியில் அமர்ந்திருந்தால்
குரு தனுசில் ஆட்சி ஆவதற்கும் மீனத்தில் ஆட்சி ஆவதற்கும் வித்தியாசம் நிறைய உள்ளது இருந்தாலும் பொதுவான அம்சங்களை மட்டும் இப்போது பார்போம், தன காரகன் ஆன குரு ஆட்சி நிதி வியாபாரம், நிதி நிர்வாகம் ஆகியவற்றில் சிறப்பாக இருப்பார், பெரிய அறிவாளி, ஆக்கப்பூர்வமான சக்தி ஓட்டம் மற்றும் படைப்பாற்றல் மிக்கவர், தன்நம்பிக்கை அதிகம், மதம் தொடர்பான சடங்குகளில் ஆர்வம் உள்ளவர், பண விஷயங்களில் எச்சரிக்கையானவர், தான தர்மம் செய்வார், திட்டங்கள் தீட்டுவதிலும் அதை செயல்படுத்துவதிலும் வல்லவர் ஆனால் உடன் சரியான உதவியாளர்களையோ அல்லது துணையை எதிர்பார்ப்பார், பிள்ளைகளால் லாபம் பெறுவர், படிப்பில் முன்னேற்றம், நல்ல நட்பு, நல்ல பழக்கம் வழக்கம், குடும்ப பாரம்பரிய சொத்து ஆகியவை உள்ளவர், அரசாங்கத்துடன் சிறந்த தொடர்பு, அரசு பணி ஏற்படும் வாய்ப்பு.

ஜாதகத்தில் குரு உச்ச வீடான கடகம் ராசியில் அமர்ந்திருந்தால்
ஒளிபொருந்திய முகம், செல்வாக்கு, நிதி வியாபாரம், நிதி நிர்வாகம் ஆகியவற்றில் சிறப்பாக இருப்பார், பதவி உயர்வு வாழ்வில் அடைந்த உயர்ந்த நிலையில் தாழ்ந்து விட மாட்டார், புண்ணியத்தால் கிடைக்கும் லாபம் மற்றும் செல்வ சேர்க்கை அதிகம், அனைவரையும் ஒன்று சேர்க்கும் ஆற்றல் பெற்றவர், கட்டுப்பாடு உள்ளவர், பிள்ளைகளால் பெறும் லாபம் அதிகம், ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கை அமையும், கல்வி போதித்தல் தொழில் ஜோலிப்பார், சுத்தமான உணவு, வசதிகள் அமைய பெற்றவர், பெரிய அறிவாளி,  நுண்கலைகள், கவின்கலைகளில் ஆர்வம் மிக்கவர், திருப்தியான குடும்ப சேமிப்பு இருக்கும், இரக்கமுள்ள, மென்மையான மனிதர்,  தான தர்மம் செய்வார். அரசாங்கத்துடன் சிறந்த தொடர்பு, அரசு உயர் பணி ஏற்படும் வாய்ப்பு.

குரு என்பதால் உச்சம் பெற்றால் கூட சரியான துணைகிரக ஆதரவு, நவாம்ச வலு ஆகிய சரியாக இருந்தால் தான் முழுமையான பலன்தருவார், தனித்திருந்தால் பலன் குறையும், ஆயில்யம் நட்சத்திரத்தில் அமர்ந்தால் நல்ல தலைமை திறன்கள் இருக்கும், பூசம் நட்சத்திரத்தில் அமர்ந்தால் ஆதரவு கருணை உள்ளம் கொண்டவர் இப்படி இருந்தாலும் உச்ச பெற்ற குருவின் பார்வையே மிகச்சிறந்த பலன்களை தரும்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக