செவ்வாய், 29 டிசம்பர், 2015

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 25 - அம்சவத்ரா யோகம்…


ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 25 - அம்சவத்ரா யோகம்

ஜோதிடத்தில் உள்ள ராஐ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஐ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும். மேலும் சில யோக அமைப்புகளுக்கு அந்த யோக அமைப்புக்கு காரணமான கிரகசார திசா புத்திகள் நடைபெறும் காலம் வந்தால் தான் யோக அமைப்புக்கான பலன்கள் வந்து சேரும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.

போன பதிவில் -

அம்சவத்ரா யோகம்
குருவும் சுக்கிரனும் ஜென்ம லக்னத்திற்கு கேந்திரத்தில் இருந்து லக்னாதிபதி சர ராசியில் (மேஷம், கடகம், துலாம், மகரம்) இருந்து சனி பகவான் கேந்திரத்தில் உச்சம் ஆட்சி அடைந்தும் இருந்தால் இந்த அம்சவத்ரா யோகம் ஏற்படும்.

இதன் பலன்கள் -
தூய்மையான புகழ், பல்வேறு துறைகளிலும் தகவல் அறிவு இருக்கும், தன் உழைப்புக்கு நல்ல பலன் தரும் இடத்தில் இருப்பார், பாலியல் இன்பங்களில் நாட்டம், லட்சிய பாதையில் பயணம் செய்வார், கொள்கை பிடிப்பு, பரந்த மனபான்மை உள்ளவராகவும் இருப்பார்.

அம்சவத்ரா யோகம் ஒரு வகை உதாரண படம்
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக