புதனும் விஷ்ணு பகவானும் சுக்கிரனும் மகாலட்சுமியும்..



புதனும் விஷ்ணு பகவானும் சுக்கிரனும் மகாலட்சுமியும்...


வேத ஜோதிடத்தில் புதனின் அதிதேவதையாக மகாவிஷ்ணு ஆக உள்ளார் அதே போல சுக்கிரனின் அதிதேவதையாக மகாலட்சுமி உள்ளார் பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது திருக்குறள் அதாவது இவ்வுலகில் வாழ எந்தளவுக்கு பொருள் முக்கிய தேவை என்பதை சுட்டிக்காட்டும் விதமாக உள்ளது இந்த வாசகம் சரி விஷயத்திற்கு வருவோம் இன்று இவ்வுலகை தனக்கு பள்ளியறையாக கொண்டிருக்கும் ஸ்ரீ ரங்கநாதர் தன் திருக்கோயில்களில் பக்தர்களுக்குகாக வைகுண்ட வாசலில் வந்து அருள் புரியும் பொன்னாள் இன்னாளில் புதனின் அம்சமாக உள்ள மகாவிஷ்ணுவையும் சுக்கிரனின் அம்சமாக உள்ள மகாலட்சுமியை வழிபாடு செய்வதில் பலவிசேஷங்கள் உள்ளன்.

அதாவது அவ்வாறு வழிபாடு செய்வதனால் புதனின் காரகத்துவமான வணிகம், கணக்கியல் (Accounting), கணினி, உற்பத்தி வியபாரம், அறிவுசார் தொழில்கள் போன்ற தொழில்கள் செழிக்க வளம் பெறும், மாணவர்களுக்கு கல்வியில் நல்ல விருத்தி ஏற்படும், செய்யும் தொழில்களில் நிபுனத்துவம் ஏற்படும் அதனால் பிரச்சினைகள் விலகி நன்மை பெருகும்.

அதுபோக மகாலட்சுமியை வழிபாடு செய்வதனால் சுக்கிரனின் காரகத்துவமான வாகனம், வீடு வாசல் செழிக்கும், பொன்பொருள் சேர்க்கையில் முன்னேற்றம் ஏற்படும், குடும்பத்தில் ஒற்றுமை, உணவு வசதிகள் ஏற்படும், மேலும்  வாகனம், துணி வியாபாரம், கலைத்துறை சார்ந்த தொழில்கள் செழிக்க வளம் பெறும்,

சுக்கிரன் மற்றும் புதன் இணையும் போது ஒருவித சிறந்த ரசவாதம் (A good alchemical reaction) ஏற்படுகிறது அதாவது சுக்கிரன் கன்னி இராசியில் நீசம் அடைகிறார் அதற்கு எதிரான இராசியான விஷ்ணுவின் அம்சமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் உச்சம் அடைகிறார் இதை எளிமையாக புரியும் விதமாக கூறுவதானால்

சுக்கிரன் (லட்சுமி) சிறந்த நுண்ணறிவு தரும் புதனுடன் (விஷ்ணு) சேர்ந்தில்லாமல் இருந்தால் சிறப்பாக செயல்பட முடியாது அதே போல புதன் (விஷ்ணு) செல்வ வளங்கள் தரும் சுக்கிரனுடன் (லட்சுமி) சேர்ந்தில்லாமல் இருந்தால் செயல்பட்டது தக்க பயனை பெறவதில் குறைவு ஏற்படும் எனவே தான் இவர் இருவர் சேர்ந்திருந்தால் சிறப்பு

இதற்கு தான் ஜாதகத்தில் புதனும் சுக்கிரனும் சேர்ந்து நல்ல நிலையில் அமரும் போது சிறந்த நிபுனத்துவ யோகம் ஏற்படும் என்று முன்னோர்கள் கூறி உள்ளனர் அதனால் எடுக்கும் காரியங்களில் புத்திசாலித்துடன் கூடிய அதிர்ஷ்டத்தில் அந்த காரியத்தை வென்று சிறப்படைவார் ஆக இன்னாளில் புதனும் சுக்கிரனும் ஜாதகத்தில் சேர்ந்து உள்ளவர்கள் மேலும் புதனின் நட்சத்திரங்களான ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரகளில் பிறந்தவர்கள், சுக்கிரனின் நட்சத்திரங்களான பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரகளில் பிறந்தவர்கள் சென்று ஸ்ரீ ரங்கநாதர் மற்றும் நம்பெருமாள் எழுந்தருளி உள்ள திருக்கோயில்களில் வழிபாடு செய்து நன்மைகள் பெறவும்.


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 



0 Response to "புதனும் விஷ்ணு பகவானும் சுக்கிரனும் மகாலட்சுமியும்.."

கருத்துரையிடுக

Powered by Blogger