வெள்ளி, 8 ஜனவரி, 2016

சிம்ம லக்கினத்தில் தோன்றியவருக்கு கணவன் - மனைவி துணை ஸ்தான பலன்…

சிம்ம லக்கினத்தில் தோன்றியவருக்கு கணவன் - மனைவி துணை ஸ்தான பலன்
 
முதல் பாடலின் விளக்கம் -
சூரியன் (ஆதவன்) இராசி சிம்மம் சிம்ம லக்னத்தில் தோன்றியவருக்கு களத்திர (வாழ்க்கை துணை) ஸ்தானம் கும்பம் ஆகும் அதற்கு நாயகன் சனி (நீலன்) பகவான் ஆகும் இந்த லக்கினத்தில் தோன்றியவருக்கு இல்வாழ்க்கையை பற்றி கூறுகிறேன் கேட்பாய் ஆக ஜாதகன் நிறத்தை விட அவருக்கு அமையும் துணையின் சற்றேனும் குறைவாக இருக்கும் மேற்கு திசையில் அல்லது தென்மேற்கு, வடமேற்கு திசையில் இருந்து கணவன்/ மனைவி அமையும், அவரது இல்லறம் நல்லவிதமாக இருக்க சூரியன், சனியை குரு, சுக்கிரன் பார்வை செய்ய வேண்டும் மேலும் சூரியன், சனி ஒருவர்க்கு ஒருவர் அமர்ந்த இடங்கள் தங்களுக்குள் ஒத்துப்போக வேண்டும் அவ்வாறு அமைந்தால் திடமான இல்லறமும், தங்களின் முயற்சி மற்றும் கட்டமைப்புக்கு ஆதரவாக ஒத்துப்போகக்கூடிய கணவன்/ மனைவி அமையும், சொன்ன சொல்லை மதிக்கும் கேட்கும் வாழ்க்கை துணையாகவும் அமையும், சுற்றத்தாரால் புகழும் வண்ணம் குடும்பத்தை அமைத்துக்கொள்வார்.

இரண்டாம் பாடலின் விளக்கம் -
சனி (அந்தன்) பகவான் சுப பலத்தை கூறுகிறேன் கேட்பாய் ஆக  சிம்ம லக்கினத்திற்கு 3ஆம், 5ஆம், 10ஆம், 11 ஆகியவை  சனி பகவான் அமர ஏற்ற  ஸ்தானங்கள் மற்றபடி தனித்து அமரந்தால் 6ஆம், 7ஆம் வலிமை தரும் இப்படிபட்ட ஸ்தானங்களில் பலமான குடும்பமாக அமையும், ஸ்திரமான இணைப்பாகவும் இருக்கும், சொந்தங்கள் ஏற்கும் வகையில் நல்வாழ்வை வாழ்வார், அசுப நிலையில் சனி பகவான் அமர வாழ்வில் ஒன்றுக்கு மேற்பட்ட  திருமணம், சேர்ந்து ஒத்துப்போகாத கணவன்/ மனைவி அமையும், சொன்ன சொல்லை மதிக்கும் கேட்கும் வாழ்க்கை துணையாகவும் அமையாது, பந்தங்கள் எல்லை மீறும் கார்மேகத்திற்கு காத்துக்கிடக்கும் நிலம் போல் நல்ல சுபமான திருமண வாழ்க்கைக்கு ஏங்க வேண்டியாக வந்துவிடும் இதை நவகோள்களின் நிலைகளையும் ஆராய்ந்து பின் உரைப்பாய் இந்த கோள்முனி சொன்னதை.- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக