ஒன்பதாம் ஸ்தானமும் உங்களின் அதிர்ஷ்டமும்…

ஒன்பதாம் ஸ்தானமும் உங்களின் அதிர்ஷ்டமும்


முதலில் ஒவ்வொருவரும் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் போது
உனக்கென்னயா நீ ரோம்ப அதிர்ஷ்டசாலி
உமக்கென்ன ஓய் நீர் பெரிய பாக்கியசாலி
உனக்கென்னப்பா அதிர்ஷ்டசாலி
நான் ரோம்ப அதிர்ஷ்டசாலி

இப்படி பல்வேறு வகையில் மக்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதை நாம் பார்த்தும் கேட்டும் உள்ளோம் இந்த அதிர்ஷ்டம் என்றால் என்ன என்று முதலில் பார்ப்போம்

அதிர்ஷ்டம் என்றால் என்ன?
திர்ஷ்டம் என்றால் பார்க்கபடும் அல்லது காணப்படும் ஒருவரது பலம், அதிர்ஷ்டம் என்றால் நம்மால் பார்க்கபடாத அல்லது காணப்படாத ஒருவரது பலம்.

உதாரணமாக 6 நாடுகளின் கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன என்று வைத்துக்கொள்ளவோம் அதில் அந்த அணிகளின் திறன்கள், ஆற்றல், இதற்கு முன் விளையாட்டில் ஏற்பட்ட வெற்றி தோல்விகள் இது போன்ற விஷயங்கள் தான் கண்ணுக்கு தெரிந்திருக்கும் விவாதங்களிலும் இதை தான் விவாதித்து கொண்டிருப்பார்கள் ஆனால் இந்த அணிகளில் ஒரு அணிக்கு தான் அந்த தொடரில் வெற்றியடையும் அதிர்ஷ்டம் மறைந்திருக்கும் இதுவே பார்க்கபடாத அல்லது காணப்படாத அந்த அணியின் வெற்றி பலம்.

வெற்றிக்கான அதிர்ஷ்டம் என்ன?
நீங்கள் சரியான நேரத்தில், சரியான நபராக, சரியான இடத்தில் இருக்க வேண்டும்.


இந்த சரியான நேரத்தில், சரியான நபராக, சரியான இடத்தில் இருக்க ஒருவரை இருக்க வைக்கும் செயலை காட்டும் ஸ்தானங்கள் தான் இந்த லக்னம் 4,5,9,10 ஆம் ஸ்தானங்கள் அதில்
 
ஒருவருக்கு இருக்கும் பாக்கியத்தை அதாவது அதிர்ஷ்டத்தை காட்டும் 12 ஸ்தானங்களில் முக்கிய ஸ்தானமாக உள்ளது 9 ஆம் ஸ்தானம் ஆகும் மற்ற லக்னம் 4,5,10 ஆம் ஸ்தானங்கள் அதிர்ஷடத்தை காட்டினாலும் அதிகமாக ஒருவரது அதிர்ஷடத்தை தெரிந்து கொள்ள உதவுவது இந்த 9 ஆம் ஸ்தானம் தான்.

9 ஆம் ஸ்தானாதிபதி ஆட்சி, உச்சம் பெற்றால் வாழ்வில் சிறப்பான அதிர்ஷ்டங்கள் ஏற்படும் அதைவிட 9 ஆம் ஸ்தானாதிபதி 9ஆம் வீட்டில் தனக்கு நட்பு பெறும் கிரகங்களுடன் சேர்ந்து ஆட்சி பெற்றால் சிறந்த அதிர்ஷ்டசாலியாக வலம் வருவார்.

தனது ஜென்ம லக்னத்தை ஸ்திர லக்னமான அதாவது ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பமாக ஒருவர் பெற்றிருந்தால் 9ஆம் ஸ்தானம் பாதக ஸ்தானம் ஆக வரும் அதாவது வாழ்வில் பாதகமான விஷயங்கள், இடையூறுகள், தேவையில்லாத புதிய பிரச்சினைகள் கிளம்பிவருவது போன்ற சிறப்பற்ற பலன்களை தரவேண்டியவராக ஸ்திர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இந்த 9 ஆம் ஸ்தானாதிபதி இருப்பார் அப்படி ஆனாலும் மற்ற சர, உபய லக்னங்களை போல் அல்லாமல் ஸ்திர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மிதமான அளவில் பாதகமான விஷயங்களை செய்தாலும் புயலுக்கு பின்னே அமைதி என்பதை போல் சாவல்களுக்கு பின் சிறப்பான வெற்றியை தந்து விட்டு போவார்.

12 லக்னங்களுக்கும் 9 க்குடைய ஸ்தானாதிபதி ஆட்சி, உச்சம் பெறும் இடங்கள் : -

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 9 ஆம் ஸ்தானாதிபதி குரு 9,12 ஆம் ஸ்தானம் அதாவது தனுசு, மீனத்தில் ஆட்சி அடைவார், 4ஆம் ஸ்தானம் கடகம் இராசியில் உச்சம் அடைவார்.

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 9 ஆம் ஸ்தானாதிபதி சனி 9,10 ஆம் ஸ்தானம் அதாவது மகரம், கும்பத்தில் ஆட்சி அடைவார், 6ஆம் ஸ்தானம் துலாம் இராசியில் உச்சம் அடைவார்.

மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 9 ஆம் ஸ்தானாதிபதி சனி 8, 9 ஆம் ஸ்தானம் அதாவது மகரம், கும்பத்தில் ஆட்சி அடைவார், 5ஆம் ஸ்தானம் துலாம் இராசியில் உச்சம் அடைவார்.

கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 9 ஆம் ஸ்தானாதிபதி குரு 6, 9 ஆம் ஸ்தானம் அதாவது தனுசு, மீனத்தில் ஆட்சி அடைவார், லக்னத்தில் கடகம் இராசியில் உச்சம் அடைவார்.

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 9 ஆம் ஸ்தானாதிபதி செவ்வாய் 4, 9 ஆம் ஸ்தானம் அதாவது விருச்சிகம், மேஷத்தில் ஆட்சி அடைவார், 6ஆம் ஸ்தானம் மகரம் இராசியில் உச்சம் அடைவார்.

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 9 ஆம் ஸ்தானாதிபதி சுக்கிரன் 2, 9 ஆம் ஸ்தானம் அதாவது துலாம், ரிஷபத்தில் ஆட்சி அடைவார், 7ஆம் ஸ்தானம் மீனம் இராசியில் உச்சம் அடைவார்.

துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 9 ஆம் ஸ்தானாதிபதி புதன் 9, 12 ஆம் ஸ்தானம் அதாவது மிதுனம், கன்னியில் ஆட்சி அடைவார், 12ஆம் ஸ்தானம் கன்னி இராசியில் உச்சம் அடைவார்.

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 9 ஆம் ஸ்தானாதிபதி சந்திரன் 9 ஆம் ஸ்தானம் அதாவது கடகம் இராசியில் ஆட்சி அடைவார், 7ஆம் ஸ்தானம் ரிஷபம் இராசியில் உச்சம் அடைவார். ஒரே ஆதிபத்தியம் உள்ளதால் பாதக ஸ்தானம், பாக்கிய ஸ்தானம் இரண்டின் பலன்களும் வீரியமாக நடக்கும் வாய்ப்பு உண்டு.

தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 9 ஆம் ஸ்தானாதிபதி சூரியன் 9 ஆம் ஸ்தானம் அதாவது சிம்மம் இராசியில் ஆட்சி அடைவார், 5ஆம் ஸ்தானம் மேஷம் இராசியில் உச்சம் அடைவார். ஒரே ஆதிபத்தியம் உள்ளதால் பாதக ஸ்தானம், பாக்கிய ஸ்தானம் இரண்டின் பலன்களும் வீரியமாக நடக்கும் வாய்ப்பு உண்டு.

மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 9 ஆம் ஸ்தானாதிபதி புதன் 6, 9 ஆம் ஸ்தானம் அதாவது மிதுனம், கன்னியில் ஆட்சி அடைவார், 9ஆம் ஸ்தானம் கன்னி இராசியில் உச்சம் அடைவார்.

கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 9 ஆம் ஸ்தானாதிபதி சுக்கிரன் 4, 9 ஆம் ஸ்தானம் அதாவது ரிஷபம், துலாத்தில் ஆட்சி அடைவார், 2ஆம் ஸ்தானம் மீனம் இராசியில் உச்சம் அடைவார்.

மீனம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 9 ஆம் ஸ்தானாதிபதி செவ்வாய் 2, 9 ஆம் ஸ்தானம் அதாவது மேஷம், விருச்சிகத்தில் ஆட்சி அடைவார், 11ஆம் ஸ்தானம் மகரம் இராசியில் உச்சம் அடைவார்.

இப்படி 9 ஆம் ஸ்தானாதிபதி பலம் அடைந்தாலும் தீய பகை கிரகங்களின் பார்வை, சேர்க்கை பெற்றிருந்தால் அதிர்ஷ்ட பலன்கள் பாதிக்கபடும், மேலும் அவ்வாறு தீய பகை கிரகங்களின் பார்வை, சேர்க்கை பெறாமல் இருந்து நல்ல நிலையில் இருந்தால் 9 ஆம் ஸ்தானாதிபதி மற்றும் அவருடன் சுப சம்பந்தபட்ட கிரகங்களின் திசா புத்தி காலங்களில் அந்த சிறப்பான அதிர்ஷ்ட பலன்கள் அவரை வந்து சேரும். நூறு பேர் போட்டி போட்டாலும் மிகபலமான 9 ஆம் ஸ்தானாதிபதி மற்றும் அவருடன் சுப சம்பந்தபட்ட கிரகங்களின் திசா புத்தி காலங்கள் கொண்ட அந்த நபர் வென்று அங்கீகரிக்க படுவார்.


0 Response to "ஒன்பதாம் ஸ்தானமும் உங்களின் அதிர்ஷ்டமும்…"

கருத்துரையிடுக

Powered by Blogger