சனி, 26 மார்ச், 2016

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 34 - சந்திராம்ச யோகம்…

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 34 - சந்திராம்ச யோகம்

ஜோதிடத்தில் உள்ள ராஐ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஐ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும். மேலும் சில யோக அமைப்புகளுக்கு அந்த யோக அமைப்புக்கு காரணமான கிரகசார திசா புத்திகள் நடைபெறும் காலம் வந்தால் தான் யோக அமைப்புக்கான பலன்கள் வந்து சேரும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.


சந்திராம்ச யோகம்
ஜென்ம இராசிகட்டத்தின் லக்ன லக்னாதிபதியும் சந்திரன் நின்ற இராசியாதிபதியும் சேர்ந்து கேந்திர, திரிகோணங்களில் அமைந்து அதில் ஏதேனும் கிரகம் ஆட்சி, உச்சம் பெற்று அதே போல நவாம்சத்திலும் லக்ன லக்னாதிபதியும் சந்திரன் நின்ற இராசியாதிபதியும் சேர்ந்து கேந்திர, திரிகோணங்களில் அமைந்து அதில் ஏதேனும் கிரகம் ஆட்சி, உச்சம் பெற்று இருந்தால் ஏற்படும் யோகம் சந்திராம்ச யோகம் ஆகும். இதில் பாப பகை கிரகங்களின் தொடர்பு ஏற்பட்டால் யோகம் பங்கப்படும்.

இதன் பலன்கள் -
இந்த யோகத்தை பெற்றவர்கள் எண்ணங்களை செயல்படுத்துவதில் வித்தகர், அரசர்களின் உதவி தோழமைகளை பெற்றவர், நல்ல உடல்நலம், அழகான அல்லது மற்றவர்களை கவரக்கூடிய ஈர்ப்பாற்றல் உள்ளவர், வாழ்வில் சிறப்பான இடத்தில் இருத்தல், கௌரவம், விருப்பங்களை நிறைவேற்றிக்கு கொள்ளும் தகுதி பாண்டித்தியம் உள்ளவர், வாழ்வின் அனைத்து வாய்ப்புக்களிலும் தன்னை ஈடுபடுத்தி உயர்வு அடைய முயற்சிப்பவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக