வியாழன், 5 மே, 2016

12 இராசியில் நவகிரகங்களின் உச்சம், நீசம் அடையும் பாகை…

12 இராசியில் நவகிரகங்களின் உச்சம், நீசம் அடையும் பாகை

ஒரு அன்பரின் தீவிர வேண்டுகோளின் படி 12 இராசியில் நவகிரகங்கள் இருப்பதால் பெறும் தன்மைகள் பதிவு செய்து முடித்துவிட்டீர்கள் எமக்கு 12 இராசியில் நவகிரகங்கள் பூரண உச்சம், பூரண நீசம் அடையும் பாகைகள் உள்ளதாமே அதையும் தெரிவுபடுத்த வேண்டும் என்று அவரின் தீவிர வேண்டுகோளின் படி இதை பதிவு செய்கிறேன், இதில் எனக்கு முரண்பட்ட கருத்துக்கள் உள்ளது என்றாலும் தற்போதை ஜோதிட நூல்களில் சொல்லப்படும் பூரண உச்சம், பூரண நீசம் அடையும் பாகைகள் விவரங்கள் இது -

கிரகங்கள்
பூரண உச்சம் பெறும் பாகை
பூரண நீசம் பெறும் பாகை
ஆட்சி வீடு
சூரியன்
மேஷம் 10°:00':00" பாகை
துலாம் 10°:00':00" பாகை
சிம்மம்
சந்திரன்
ரிஷபம் 03°:00':00" பாகை
விருச்சிகம் 03°:00':00" பாகை
கடகம்
செவ்வாய்
மகரம் 28°:00':00" பாகை
கடகம் 28°:00':00" பாகை
மேஷம், விருச்சிகம்
புதன்
கன்னி 15°:00':00" பாகை
மீனம் 15°:00':00" பாகை
மிதுனம், கன்னி
வியாழன்
கடகம் 05°:00':00" பாகை
மகரம் 05°:00':00" பாகை
தனுசு, மீனம்
சுக்கிரன்
மீனம் 27°:00':00" பாகை
கன்னி 27°:00':00" பாகை
ரிஷபம், துலாம்
சனி
துலாம் 20°:00':00" பாகை
மேஷம் 20°:00':00" பாகை
மகரம், கும்பம்

இராகு, கேது பொருத்த வரை எனது கருத்து நிழல்கிரகங்கள் என்பதால் உச்சம், நீசம் காண்பது என்பது நடைமுறைக்கு ஒத்துப்போவதில்லை எனவே நான் இராகு, கேது கிரகங்கள் வலிமை அடையும் இராசி மண்டலங்கள் என்று காண்பதே சிறந்தது என்று கருதுகிறேன்

சாயா கிரகங்கள்
வலிமை அடையும் இராசி
வலிமை இழக்கும் இராசி
இராகு
விருச்சிகம், கன்னி, மிதுனம், மீனம்
மேஷம், தனுசு, சிம்மம், ரிஷபம்
கேது
மேஷம், தனுசு, சிம்மம், விருச்சிகம்
ரிஷபம், கன்னி, மிதுனம், மீனம்

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக