சனி, 14 மே, 2016

குரு சண்டாள யோகம் இந்த யோகம் எப்படி ஏன் ஏற்படுகிறது...

குரு சண்டாள யோகம் இந்த யோகம் எப்படி ஏன் ஏற்படுகிறது...


குருசண்டாள யோகம் இது ஒரு கோடீஸ்வர யோகம் என்று பரவலாக சொல்லப்பட்டு மற்றோரு பக்கம் இது ஒரு துர்யோகம் என்றும் சொல்லப்பட்டு வருவதால் இதன் மீது மக்களின் பார்வை அதிகம் இதன் விளக்கத்தை இப்போது பார்ப்போம்,

குரு சண்டாள யோகம் இந்த யோகம் எப்படி ஏற்படுகிறது -
தேவகுரு அதாவது குரு (வியாழன்) கோளும் அரக்கன் அதாவது ராகு கோளும் சேர்ந்து ஒரே இராசியில் இருந்தால் இந்த குருசண்டாள யோகம் ஏற்படும் என்று ஜோதிடம் சொல்கிறது இதுவே இந்த யோகம் வரும் முறையான அமைப்பு. குருவும் ராகுவும் சுமாராக 7 முதல் 8  வருடங்களுக்கு  ஒரு முறை இராசி சக்கரத்தில் ஒரு இராசி இணையும் வாய்ப்பு உள்ளவர்கள்,

சிலர் கூற்றின் படி குரு ராகுவின் காரகத்துவம் பெற்ற நட்சத்திர சாரம் பெற்று ராகு குருவின் காரகத்துவம் பெற்ற நட்சத்திர சாரம் பெற்று நட்சத்திர பரிவர்த்தன அடைந்தால் இந்த குரு சண்டாள யோகம் ஏற்படும் உண்மை ஆனால் ஆராய்ந்தே ஏற்றுக்கொள்ள வேண்டும், இதே போலத் தான் குரு கேது சேர்ந்தால் குரு சண்டாள யோகம் என்று சொல்லப்படுவதும் ஆராய்ந்தே ஏற்றுக்கொள்ள முடியும்.

சிலர் கூற்றின் படி குருவும் சனியும் ஒரே இராசி சேர்ந்தாலும் குரு சண்டாள யோகம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது ஆனால் இது என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை ஏனென்றால் இராகு ஒரு அரக்கன் மற்றும் சண்டாள கிரகம் பெரும்பான்மையாக கொடூரமான தீய செயலுக்காக காரகத்துவம் பெற்றவர்கள் ஆனால் சனியோ ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரர் அதாவது ஒருவருக்கு புண்ணிய பலமிருந்தால் சிறப்பான நன்மைகளை தருபவராகவும் சாதகமான வாய்ப்புகளை ஏற்படுத்தி தருபவராக இருப்பார் பாப பலமிருந்தால் மட்டுமே தண்டனை சோதனை தருபவர் அதாவது ஒரு நீதிபதி போல இப்படி யிருக்கையில் சனியை குரு சண்டாள யோகத்தோடு ஒப்பிடுவது மிகச்சில அமைப்புகள் வேண்டுமானால் ஒத்துவரலாம் முழுமையாக ஒப்பிடுவது சரியாக படவில்லை.

குரு சண்டாள யோகம் இந்த யோகம் ஏன் ஏற்படுகிறது -
குரு என்றால் தேவர்களின் ஆசான் உயிரினங்களுக்கு புத்துணர்ச்சியை தருபவர் உதாரணமாக காட்டு விலங்களுக்கு சிறுநோய்கள் வந்தால் அதுவாக மெல்ல மெல்ல நோய் நீங்கி மறுபடியும் ஜீவிக்க ஆற்றலை வழங்குபவர், மனிதர்களை பொருத்தவரையில் தனம் தான்யம் கல்விச் செல்வங்களை வழங்கும் கிரகராஜன் ஒழுக்கத்திற்கும் ஆன்மீகம் சமய சாஸ்திரங்களுக்கும் அதில் சொல்லப்படும் பண்பாட்டிற்கும் எடுத்துகாட்டாக இருப்பவர்.

இராகு என்றால் அசுரன் விஷமுள்ள பாம்பு மனிதர்களை பொருத்தவரையில் கடுமையாக அல்லது தீவிரமாக விரும்பம், வன்முறை கொடூரமான இரக்கமற்ற நடத்தை ஆகியவற்றை ஏற்படுத்துபவர் ஆனால் மிகவும் வலிமையானவரும் கூட அதனால் சுயநல உணர்வை தூண்டிவிட்டுக் கொண்டிருப்பவர்.

இவர்கள் இருவரும் சேரும் போது அதை இவ்வாறெல்லாம் வர்ணிக்கலாம் -
குரு + இராகு = குறைந்தபட்ச கண்ணியம் மற்றும் அதிகபட்ச பேராசை
குரு + இராகு = குறைந்தபட்ச பொதுநலம் மற்றும் அதிகபட்ச சுயநலம்
குரு + இராகு = குறைந்தபட்ச ஆன்மீகம் மற்றும் அதிகபட்ச அஞ்ஞானம் அல்லது நாத்திகம்

இதை எனது ஸ்டைலில் ஆங்கிலத்தில் மொழியில் சொல்வதானால் - minimum dignity and maximum materialistic
 இந்த யோகத்தை ஆராய்ந்தே முடிவுக்கு வரவேண்டும் வெறும் குரு இராகு சேர்க்கையை வைத்து மட்டும் சொல்லி விடக்கூடாது.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக