புதன், 6 ஜூலை, 2016

நவகிரகங்களில் சந்திரனுக்கான மந்திரங்கள், பாடல்கள், காரகத்தவ சாஸ்திரங்கள்…

நவகிரகங்களில் சந்திரனுக்கான மந்திரங்கள், பாடல்கள், காரகத்தவ சாஸ்திரங்கள்

இந்துமதத்தில் நவகிரகங்களும் வழிபாட்டுக்குரிய தேவர்களாக கலந்துள்ளனர் அதே நேரத்தில் பழங்காலங்களில் சூரியன், சந்திரன் தனிபட்ட முறையில் வணங்கினாலும் பின் வந்த காலங்களில் முதல் தெய்வங்களின் வழியாகவும் அவர்களை வழிபடுவதையே சிறந்தாக கருதபடுகிறது அப்படியாக நவகிரகங்களுக்குரிய காரகத்துவ தெய்வங்கள், சாஸ்திரங்களும், பாராயண மந்திரங்களும், தனிபட்ட காயத்தரி மற்றும் நவகிரகங்கள் வழிபட்டு பேறுபெற்ற தேவார தல பதிகங்கள் என ஒரு தொகுப்பாக ஒவ்வொரு கிரகங்களுக்கும் கொடுக்கபட உள்ளது, நம் பாரம்பரிய மருத்துவத்தில் "உணவே மருந்து மருந்தே உணவு"  என்று சொல்வது முதுமொழி அதே போல் இந்துமதத்தில் பக்தி (சரியை), கிரியை (கர்மம்), யோகம், ஞானம் நான்கு மார்க்கங்கள் உள்ளன அதில் யோகம், ஞான மார்க்கங்களில் உள்ளவர்களுக்கு வழிபாடு பிரதான மானதல்ல, அதில் பக்தி, கர்மம் ஆகிய இரு மார்க்கங்களில் உள்ளவர்களுக்கு "வழிபாடே பரிகாரம் பரிகாரமே வழிபாடு" அந்த வழிபாட்டுக்கு உதவுவது தான் முன்னோர்கள் வழிபட்ட மந்திரங்கள், பாடல்கள் இவ்வகைகள் நிறைய இந்துமதத்தில் உள்ளதால் நூல்கள் எடுத்து இயம்பும் முக்கியமானவற்றை மட்டும் விளக்கி உள்ளேன் மேலும் சிலருக்கு வழிபாட்டால் பரிகாரம் ஆகாது தீர்வு தராது அதற்கு காரணங்கள் உண்டு அதை இந்த இடத்தில் விளக்க விரும்பவில்லை.

கோள்
காரகத்துசாஸ்திரங்கள் (Seasons)
சந்திரன்
வேதம், பொது சாஸ்திரங்கள், வானியல் சாஸ்திரங்கள்

கோள்
தெய்வம்
சந்திரன்
பார்வதி (சக்தி)

கோள்
காயத்ரி
சந்திரன்
"ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேமரூபாய தீமஹி
தந்நோ ஸோம: ப்ரசோதயாத்||" 

கோள்
பாராயண மந்திரம்
சந்திரன்
சௌந்தர்ய லஹரி, ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், அபிராமி அந்தாதி, உமையம்மை பிள்ளைத்தமிழ்கள்

கோள்
தேவார பதிகங்கள்
சந்திரன்
கீழப்பழையாறை, திருவெண்காடு, திருப்பழனம், திருக்கஞ்சனூர், திருப்புன்கூர், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், திருச்செங்காட்டங்குடி, திருநெல்லிக்காவல், திங்களூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக