வியாழன், 18 ஆகஸ்ட், 2016

நவகிரகங்களும் அதன் காரகத்துவ மூன்று சக்தி வடிவங்களும்...

நவகிரகங்களும் அதன் காரகத்துவ மூன்று சக்தி வடிவங்களும்...


சிவனின் மனைவியாக அறியபடுபவளும் உலக உருவாக்கத்தின் மூலமாகவும் வர்ணிக்கபடுபவள் பார்வதி இவளே உலகங்கள் எல்லாவற்றிற்கும் தோன்றி காக்கும் சக்தி வடிவமாக உள்ளாள் இவளையே ஆதிசக்தி அல்லது ஆதிபராசக்தி என பல பெயர்களாலும் வணங்கபடுபவள் எல்லாவற்றிற்கும் ஆதி ரூபி. அண்டாண்டகளை எல்லாம் ஆற்றலை நகர்த்தி இயக்கி கடத்தி வருவதால் அண்டத்தில் பராசக்தி என்று அழைக்க படுகிறாள். அதுவே பிண்டத்தில் அதாவது நமது உடலில் உள்ள சக்தி வடிவங்களுக்கு மூன்று முக்கிய வடிவங்களாக பிரிக்கிறார்கள் அவை கிரியா சக்தி, இச்சா சக்தி, ஞான சக்தி. இதை தான் அம்மன் கோயிலில் அம்மனின் சந்நிதிக்கு முப்புறமும் இந்த கிரியா சக்தி, இச்சா சக்தி, ஞான சக்தி தேவியின் சிலை நிறுவபட்டிருக்கும். இந்த மூன்று சக்திகளும் தங்களின் பணியை ஒவ்வொரு உடலிலும் செய்கிறார்கள் அதை நவகிரகங்களுக்கும் ஜோதிஷத்தில் காரகத்துவங்கள் பிரிக்க பட்டுள்ளன அவை தான் கீழே கொடுக்க பட்டுள்ளன. இது போக குண்டலினி சக்தி உள்ளதாக யோக மார்க்கம் பேசும் ஆனால் அது மறைவான சூட்சம சக்தியாகும்.


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக