செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

குரு சந்திரன் இணைப்பு மற்றும் சம்பந்தத்தின் ஒரு மேலோட்ட பார்வை…

குரு சந்திரன் இணைப்பு மற்றும் சம்பந்தத்தின் ஒரு மேலோட்ட பார்வை

வேதஜோதிடத்தில் சந்திரனும், வியாழனும் (குரு) இரண்டு முக்கியமான கிரகங்கள் உள்ளன இவை வாழ்வில் நிலைத்திருக்கவும் மற்றும் கேடுகளில் பாதுகாக்கும் செய்யதக்க இரண்டு கிரகங்கள் இவை. குரு சந்திரன் இணைப்பு மற்றும் சம்பந்தத்தின் மூலமாக குருசந்திர யோகம், கஜகேசரி யோகம், சகட யோகம் என்று மூன்றுவித யோகங்களுக்கு துணை போகும் இருப்புகளாக உள்ளது.

குருவில் இருந்து சந்திரனோ அல்லது சந்திரனில் இருந்து குருவோ அந்த கிரகம் நின்ற இடத்திலிருந்து 12 இடங்களுக்கும் குரு சந்திரன் ஒருவருக்கு ஒருவர் இருக்க ஒவ்வொரு யோக அமைப்புகள் பிறப்பதாக காண்கிறோம்

குரு சந்திர இணைவு அதாவது 1 ல் இருந்தால் குருசந்திர யோகம்
சந்திரனிலிருந்து குரு 2 ல் இருந்தால் சகட யோகம்
சந்திரனிலிருந்து குரு 3 ல் இருந்தால் இதற்கு யோகங்கள் கூறப்படவில்லை
சந்திரனிலிருந்து குரு 4 ல் இருந்தால் கஜகேசரி யோகம்
சந்திரனிலிருந்து குரு 5 ல் இருந்தால் குருசந்திர யோகம்
சந்திரனிலிருந்து குரு 6 ல் இருந்தால் சகட யோகம்
சந்திரனிலிருந்து குரு 7 ல் இருந்தால் கஜகேசரி யோகம்
சந்திரனிலிருந்து குரு 8 ல் இருந்தால் சகட யோகம்
சந்திரனிலிருந்து குரு 9 ல் இருந்தால் குருசந்திர யோகம்
சந்திரனிலிருந்து குரு 10 ல் இருந்தால் கஜகேசரி யோகம்
சந்திரனிலிருந்து குரு 11 ல் இருந்தால் இதற்கு யோகங்கள் கூறப்படவில்லை
சந்திரனிலிருந்து குரு 12 ல் இருந்தால் சகட யோகம்

குருசந்திர யோகம் இதன் பலன்கள் -
இந்த யோகம் ஏற்பட்ட ஜாதகர் வாழ்க்கை சீரும் சிறப்பும் ஆக இருக்கும், வாழ்வில் பெரிய துயரங்களோ, இடர்களோ வராது, ஒழுக்கும் நல்ல பண்புகளும் உள்ளவர், கல்வியறிவு உலக அறிவு நிறைந்தவர், நிம்மதி நிறைந்த மனமும் வாழ்க்கையும் அமையும், மிகவும் அறிவார்ந்த நபர் மற்றும் நிதி நிறுவனங்கள் ஈடுபாடு, வணிக அரசியல் சார்ந்த சட்டங்களில் பரிச்சியம்.

கஜகேசரி யோகம் இதன் பலன்கள் -
சிங்கம்போல அவரது எதிரிகளை அழிக்ககூடியவர்கள் என்று தான் இந்த யோகம் வர்ணிக்க படுகிறது. கண்ணியமான மற்றும் நல்ல பண்பான நடத்தை உள்ளவர், நிறைய உறவினர்கள் வாய்க்கும் அவர்களை நன்றாக பேணுவார், கண்ணியமான பதவிகள் பொறுப்புகள் வந்து சேரும், நீடித்த புகழ் வாழ்க்கை, கல்வி கேள்விகள் வல்லமை, தீர்க்கமான பேச்சு உள்ளவர், நெறியாளர், சீர்தூக்கி பார்க்கும் பார்வை, நீண்ட ஆயுள்.

சகட யோகம் இதன் பலன்கள் -
மனம் பலகீனமானவராக இருக்க வைக்கும், வாழ்வில் அதிர்ஷ்டங்கள் குறைவாக இருக்கும், பற்றாக்குறையான வசதி வாய்ப்புகள், முன்னேற்றம் மேலும் கீழும் ஆக இருக்கும், வறுமை, இடர்பாடுகள் மற்றும் உறவினர்கள் பகை போன்றவை ஏற்படும், வாழ்க்கையில் சிரமங்கள் அதிகமாக ஏற்படும், காரணம் புரியாத குழப்பங்கள், அடிக்கடி நிலையை இழந்தல், மற்ற கிரகங்கள் சாதகமாக இருந்தால் மேலே சொன்ன பலன்கள் குறைவாக நடக்கும்.

ஆனால் இதற்கு பல விதிவிலக்குகள் உள்ளன உதாரணமாக குரு சந்திர சேர்க்கையில் உடன் சூரியன், இராகு, கேது, சனி இருந்தாலும் அல்லது குருவும் சந்திரனும் மிக நெருங்கி சேர்ந்திருந்தாலும் யோகத்திற்கு பங்க குறைவு ஏற்படும். சில லக்னங்களுக்கு கஜகேசரி யோகம் பெரிதாக வேலை செய்வதில்லை என்று சில ஆய்வுகளும் சொல்கின்றன். சகட யோகம் ஏற்பட்டிருந்து குரு வக்கிரம் அடைந்திருந்தாலும் சகட யோகம் வேலை செய்யாது என பல விதிவிலக்குகள் உள்ளன, இவ்வாறாக ஒரு பிரபல நடிகர் நின்றால் நடந்தால் செய்தி (News) ஆவது போல குரு சந்திரன் ஜாதக கட்டத்தில் நின்றால் இருந்தால் யோகங்கள் தான் போல.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

2 கருத்துகள்: