வெள்ளி, 16 செப்டம்பர், 2016

சாந்தியும் காந்தியும் வேணும்....


சாந்தியும் காந்தியும் வேணும்


அகிம்சையால் சுதந்திரம் பெற்ற சகோதரர்கள் இன்று தங்களுக்குள் தண்ணீருக்காக வன்முறை செய்கிறார்கள்
அகிம்சையால் சுதந்திரம் பெற்றவர்கள் இன்று தன் சகோதரனை
தண்ணீருக்காக நிர்வாணப் படுத்துகிறார்கள்
உப்பு சத்தியாகிரகம் கண்ட நாட்டில் இன்று சகோதரர்கள்
தண்ணீருக்காக யுத்தவசனங்கள் பேசுகிறார்கள்
அடிமைச்சங்கிலியை அமைதியாக தீர்த்து பெற்ற சுதந்திர நாட்டில்
தண்ணீருக்காக அமைதி மறந்து தீ கங்குகளை வீசுகிறார்கள்
தடி அடி பெற்று சுதந்திரம் பெற்றவர்கள் இன்று
தண்ணீருக்காக உருட்டுக்கட்டை உருட்டுகிறார்கள்
சமதான புறாக்களை பறக்கவிடவோ
சாந்தியை பரப்பவோ முடியுமா
காந்தியை மறந்த நாட்டில்
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

உலகில் பலநாடுகளும் யுத்தம் செய்து சுதந்திரம் பெற அகிம்சையால் சுதந்திரம் பெற்ற நாம் நதி நீர் பிரச்சினைகளை சாந்தமான முறையில் தீர்க்க முயற்சிப்போம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக