ஆன்மீகம் - ஜீவபோத சுத்தி (Refining of Ziva botham) பகுதி 12...

ஜீவபோத சுத்தி என்றால் உயிரின் உண்மை நிலையை விசாரணையின் மூலம் சுத்தம் செய்து உணர்தல் என்று பொருள், ஒவ்வொரு உயிரானதும் தனது உண்மை நிலையை உணர்வதன் மூலம் ஆன்மீக பக்குவம் அடையும் அப்படி ஆன்மீக பக்குவம் அடைந்தால் வாழ்வில் விடை தெரியாத பல்வேறு துன்பங்களும் இலையுதிர் கால மரத்தின் இலைகளை போல் கழண்டு விழும், இது ஒரு சிலருக்கு பயன்தரலாம் அதனால் ஜோதிடம் மட்டும் விரும்பம் உள்ளவர்கள் அதை எப்போது போல படித்து வரலாம்  இது நேரடியாக ஜோதிடத்தை சுட்டிக்காட்டாது ஆனால் ஜோதிடத்தின் அடிப்படை ஆன்ம தத்துவத்தில் தான் உள்ளது.

(12)
யாருக்கு ஆண், பெண், அலி பேதங்கள்
யாருக்கு பெயர், சாதி; யாருக்கு இனம், மதம்
யாருக்கு ஊர், நாடு பேதங்கள்? மழலையாகி
பார் உள்ளத்துள்ளே சிவமே அது! சிவமே அது!

Who take differences between male, female, transgender?
Who take differences between name, caste, race, religion?
Who take differences between city, country? having as Childhood
Look within the heart It Sivam! It Sivam!
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
பாடலின் விளக்கம் -
ஆண் பெண் அலி போன்ற பால் பேதங்களை காண்பவர் யார், பெயர் சாதி இனம் மதம் போன்ற பேதங்களை காண்பவர் யார், ஊர் நாடு போன்ற பேதங்களை காண்பவர் யார்,  இந்த பேதங்கள் சத்திய வஸ்து வாக இருக்குமானால் ஒவ்வொருவரும் தனது மழலை பருவத்தில் இது போன்ற பேதங்களினால் மகிழ்ச்சி அடையவோ அல்லது துக்கமடையவோ செய்வதிருக்க வேண்டும் ஆனால் இது போன்ற பேதங்களின் உணர்வே அற்றவராகவே மழலை பருவத்தில் ஒவ்வொருவரும் இருந்திருப்பார் எனவே பேதங்கள் அற்ற அந்த சத்திய வஸ்துவை ஒவ்வொருவரும் அவர் அவரது உள்ளத்தின் உள்ளே சார்ந்து பார்த்து உணர வேண்டும் அது சிவமே அது சிவமே என்று.

சிவன் என்பதும் சிவம் என்பதும் ஒரு கடவுளை குறிக்கும் பெயர்ச்சொல் மட்டும் அல்ல சிவம் என்றால் எப்போதும் எங்கும் வேண்டுதல் வேண்டாமை இன்றி உள்ள ஆளுமை என்று பொருள் இதற்கு சமஸ்கிருதத்தில் ஈஸ்வரன் என்று சொல்லப்படும் ईश्वर Izvara என்றால் Supreme Being , Supreme ruling என்று பொருள்.

Heart என்பது பொதுவாக உடலில் உள்ள இதயம் என்ற உறுப்பை குறிப்பதாக இருப்பது ஆனால் ஆன்மீகத்தில் இருதயம் என்பது ஆத்மாவின் மையம், அதை தமிழ் உள்ளம் என்று பொருள் கொள்ளலாம், உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்று திருமூலர் விளக்கி இருப்பார், அந்த உள்ளத்தின் உள்ளே இறைவன் எப்போதும் தோன்றாதே எழுந்தருளி உள்ளான்.

0 Response to "ஆன்மீகம் - ஜீவபோத சுத்தி (Refining of Ziva botham) பகுதி 12..."

கருத்துரையிடுக

Powered by Blogger