மேற்கத்திய ஜோதிடம் - நெப்டியூன் பற்றிய சில குறிப்புகள்…

இந்த பெரும் பாரத நாட்டின் பெரும்பாலான மக்கள் கடும் சிரமமான பணபரிவர்த்தனை காலத்தில் இருப்பதால் அவர்களின் சங்கடமான இந்த காலத்தில் எனக்கும் சகமனிதர்களின் இந்த சிரமமான கால நிலை கண்டு இந்த சிரமமான காலத்தில் பெரிதாக எந்த ஜோதிட பதிவையும் இட மனமில்லை இருந்தாலும் தொடர்ச்சி விடக்கூடாது என்பதற்காக சில நாட்களுக்கு ஒரு முறை பதிவுகளை இடு கிறேன்.

மேற்கத்திய ஜோதிடம் - நெப்டியூன் பற்றிய சில குறிப்புகள்
அடியேன் நமது வேதஜோதிடத்தின் அடிப்படையை பின்பற்றி மேலும் நவீன மாற்றங்களுக்கு தக்கவாறு சில அடிப்படை மற்றும் புதுமைகளை புகுத்தி ஜோதிட பலன்களை பார்ப்பவன். இருந்தாலும் இந்தியாவிலோ அல்லது உலகில் உள்ள மற்ற ஜோதிட கருத்துருக்களையும் கேட்டுக்கொள் பவனே மற்றும் சிறிது படிப்பவனே அது போல மேற்கத்திய ஜோதிடத்தின் உள்ள கருத்துருக்களையும் படிப்பவன்.

வேதஜோதிடம் வெறும் ஆகாய கோள்களையும் நட்சத்திரங்களையும் மட்டும் அடிப்படையாக கொண்டதல்ல அது ஆழமான ஆன்ம தத்துவத்துடன் தொடர்பு பெற்றது ஆனால் மேற்கத்திய ஜோதிடம் அவ்வாறு இல்லாமல் வெறும் திடப்பொருள்களாக உருண்டு சுற்றிக் கொண்டிருக்கும் கோள்களையும், ஒளிரும் நட்சத்திரங்களையும் மட்டும் எடுத்து விளக்குவதானால் அந்த ஜோதிடம் உடலை விட்டு இழந்த கையின் துடிப்பு போல் ஆகி விடும்.

அதாவது பல்லியின் வால் வெட்டப்பட்ட பின்னும் சிறிது நேரம் துடிக்கும் அப்படி துடிப்பதற்க்காக வாலுக்கு உயிர் இருப்பதாக கருதி விட முடியாது அந்த வால் சிறிது நேரத்தில் சடம் ஆகிவிடும் அது போல் ஆன்ம தத்துவத்துடன் தொடர்பு இல்லாத ஜோதிடம் என்ன தான் வலிமையிருப்பது போல் காட்டினாலும் அது அந்த பல்லியின் வால் போல் ஆகிவிடும். இப்படி இருந்தாலும் மேற்கத்திய ஜோதிடத்தில் உள்ள கருத்துருக்களை தெரிந்துகொள்ளவது ஒன்றும் தப்பில்லை. மேற்கத்திய ஜோதிடத்தில் மூன்று நவீன கிரகங்களான யுரேனஸ், நெப்டியூன், மற்றும் புளூட்டோ ஆகிய கோள்களையும் பலனுக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது அதில் நெப்டியூன் கிரகத்தை பற்றிய மேற்கத்திய ஜோதிடத்தின் கூறுகளை தற்போது பார்ப்போம்.

நெப்டியூன் சுமார் பதினான்கு ஆண்டுகள் ஒரு இராசியில் சஞ்சரிக்கும். நெப்டியூன் மர்மம் மற்றும் மாயையை கிரகமாக கருதபடுகிறது. நெப்டியூன் கற்பனை சக்தி, கனவு வாழ்க்கை மற்றும் விசித்திரமான குண இயல்புங்கள் பிரதிப்பாக கருதபடுகிறது. மாயமந்திரம், மயக்கும் வசீகரம், மயக்கம்,  அபூர்வ மனநிலை, கலைப் பார்வை, ஆன்மீக விஷயங்களில் வித்தியாசமான அனுபவம் தரும் கிரகமாக உள்ளது. ரோமன் பாரம்பரியத்தில் மற்றும் சோதிடத்தில் நெப்டியூன் சமுத்திரங்கள், ஆறுகள், நீரோடைகள், நீரூற்றுக்கள், மற்றும் அனைத்து தண்ணீரால் உள்ள பகுதிகளின் தேவதையாக கருதப்படுகிறது திரவஎண்ணெய் மற்றும் உயர்ந்த மனப்பான்மை மற்றும் ஆன்மீக விஷயமான உள்ளுணர்வு, மறைவிஷயங்கள் மற்றும் ஞானதிருஷ்டியின் பிரதிப்பாக கருதபடுகிறது. நெப்டியூனின் சாதகமான பிரதிப்பாக கலை உணர்வு, கற்பனை திறம், கவர்ச்சி மற்றும் புதிய தரிசனங்கள் தொலைநோக்கு பார்வை ஆகியன கருதபடுகிறது, பாதகமான பிரதிப்பாக மோசடி, துரோகம், மருத்துவமனைகள், சிறைச்சாலைகள், விஷம், மற்றும் போதைப்பழக்கம் கருதபடுகிறது. நுட்பமான ஐம்புலன், மற்றவர்களையும் தூண்டும் தன்மை, உயர்ந்த உள்உணர்வு, புதிய மருத்துவ சிகிச்சை குறிப்பாக உளவியல் இவற்றின் பிரதிப்பாக கருதபடுகிறது.

கோள்
ஆட்சி வீடு
பகை
உச்சம்
நீசம்
நெப்டியூன்
கடகம், விருச்சிகம்
ரிஷபம்
மீனம்
கன்னி

நெப்டியூன்
அடிப்படை அம்சங்கள்:  தனித்தன்மையான குண அமைப்பு, தெய்வீகத்தன்மை, மறைபொருள் அறிவு.
நேர்மறையான தகுதிகள்: அக தூண்டுதல் மற்றும் ஈர்ப்பு, ஆன்மீக தகுதிகள்.
எதிர்மறையான தகுதிகள்: மாயா, மோசடி, மந்தபோக்கு.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்



0 Response to "மேற்கத்திய ஜோதிடம் - நெப்டியூன் பற்றிய சில குறிப்புகள்…"

கருத்துரையிடுக

Powered by Blogger