மிதுனம் & சிம்மம், மிதுனம் vs சிம்மம் - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…

மிதுனம் & சிம்மம், மிதுனம் vs சிம்மம் - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்

ஜோதிடத்திற்கு என்று வலைபதிவு தொடங்கி காலத்தில் இருந்து நான் ஜோதிடத்தை பற்றிய கல்வி குறைவாக உள்ளவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஆழமாகவோ அல்லது முக்கிய குறிப்புகளை மட்டும் வாசிக்க விரும்புபவர்களுக்கும் சரி என அனைவருக்குமாகவே எழுதிக்கொண்டு வருகிறேன், சில ஆய்வு ஜோதிட கட்டுரைகள் ஜோதிடத்தை ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்கள் மட்டும் அதாவது குறைவான பேர்கள் வாசித்தாலும் அதை எழுதுவதையும் விடாமல் அதே நேரத்தில் அதிகமான பேர்கள் வாசிக்கிறார்கள் என்பதற்க்காக பொதுவான  ஜோதிட விஷயங்களை மட்டும் எழுதிக்கொண்டு இருக்காமல் என்னால் முடிந்த அளவு அனைத்து விஷயங்களும் வருவிதமாக வலைதளத்தை கொண்டு சென்று உள்ளேன் அது தங்களுக்கு தெரிந்திருக்கலாம் இப்போது நாம் பார்க்க உள்ள தொடர்

பாரம்பரிய திருமணம் என்ற உடன் தான் பொருத்தம் என்ற விஷயங்கள் வரும் ஆனால் மனம் ஒத்த காதலர்கள்  அல்லது காதலாக பழகி கொண்டிருப்பவர்கள், வெவ்வெறு பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி மற்றும் ஒரே பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி இந்த நட்பு, காதல் 12 இராசிக்கு இடையே ஏற்படும் போது அது எவ்வாறு அமையும் அதன் பலம் பலவீனம் என்ன என்று விளக்குவதே இந்த தொடர் பதிவு ஆகும்.

உதாரணமாக ஒருவர் மிதுனம் இராசியாக இருந்து அவரின் நண்பரோ அல்லது காதலரோ சிம்மம் இராசியாக இருந்தால் அவர்களுக்கு இடையே ஏற்படும் நட்பு, காதல் பலம் பலவீனம் என்ன என்று பார்க்க உள்ளோம்.

மிதுனம் & சிம்மம், மிதுனம் vs சிம்மம் -
இந்த இரு மிதுன சிம்ம ராசிக்காரகளுக்குமிடையே ஒரு நட்போ அல்லது காதலோ அமையும் போது அது மிகவும் உற்சாகத்துடன் கூடிய இணைப்பாக இருக்கும் வாய்ப்பு உண்டு. இந்த நட்பு ஒவ்வொரு நிகழ்விலும் நம்பிக்கை நிறைய கொண்டதாக அல்லது எதிர்பார்க்கும் ஒரு நட்பாக இருக்கும். சிம்ம இராசிகாரரிடம் உள்ள ஆக்கத்திறனுடன் கூடிய படைப்பாற்றல் மற்றும் ஊக்கமூட்டும் பண்பு மிதுன இராசிகாரருக்கு ஈர்ப்பாக அமையும். சிம்ம இராசிகாரர் நட்பானாலும் காதலானாலும் மிதுன ராசிகாரரின் மீது அதிகமாக அடக்குதல் அல்லது கட்டுபாடுகாட்டினால் அது மிதுன ராசிகாரரை உணர்ச்சிபூர்வமாக தூண்டிவிட்டு தேவையற்ற வாதங்களையும் மற்றும் பிரிவு தரும் பேச்சுகளும் வந்துவிடும் எனவே சிம்ம இராசிகாரர் மிதுன ராசிகாரரை அடக்குதல் அல்லது கட்டுபாடுகாட்டில் வைத்தல் போன்ற நடவடிக்கைகளில் வலிந்து ஈடுபடக்கூடாது. மிதுன இராசிகாரர் பல்வேறு கோணங்களில் சிந்திக்க மற்றும் யோசனைகள் கூற வல்லவர் எனவே லட்சிய தன்மை கொண்டவரான அந்த சிம்ம இராசிகாரருக்கு மிக ஈர்ப்பாக அமையும்.

இதனால் இருவருக்கும் நட்பானால் அறிவார்ந்த உரையாடல் வழிவகுக்கும். இதவே இருவருக்கும் காதலானால் தற்கால மற்றும் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான உரையாடலுக்கு வழிவகுக்கும். சிம்மம் மற்றும் மிதுனம் இருவரும் ஆற்றல்மிகு ராசிகளாகும் எனவே ஒன்றாக இருவரும் நேரம் செலவழித்து அவர்களின் பொதுவான இலக்குகளை நட்பானாலும் காதலானாலும் அதில் புத்தியை சிரத்தையுடன் செலவழிக்கும் போது இலக்குகளில் பாராட்டதக்க முன்னேற்றத்தை காண்பார்கள். இந்த இருவரும் மற்றவர்க்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யாது நழுவுவதில் ஈடுபடக்கூடியவர்கள் இதை தங்களுக்குள்ளேயே வெளிப்படுத்தினால் கஷ்டம் தான். மிதுன இராசிகாரர் அறிவுச் சுதந்திரம் உடையவர் எனவே ஒரு விஷயத்தை அனைத்து பக்கங்களிலும் பார்த்து தங்கள் சிம்மம் நண்பரின் எதை தேர்வு செய்கிறார் என்ற காரணத்தை கண்டுபிடித்துவிட கூடியவர். சிம்ம நண்பர் மிதுன நண்பருக்கு உறுதியான முடிவுகளை எடுக்க உதவ கூடியவர்.

மிதுன ராசிக்காரர் இராசிநாதன் புதன் ஆகும் சிம்ம ராசிக்காரர் இராசிநாதன் சூரியன் ஆகும் இந்த கிரகங்கள் தங்களுக்கிடையே நட்பு மற்றும் சமம் கலந்த உறவில் இருக்கும் கிரகங்கள் இதில் இந்த இரண்டு கிரகங்களும் தனிப்பட்ட கருத்துரு மற்றும் தனித்துவமான தகவல் தொடர்பாடல் பேச்சுகள் வெளிப்படுத்தக்கூடிய தன்மை கொண்டவர்கள். இதன் காரணமாக சுதந்திரத்துடன் கூடிய இணக்கமான இயல்பு மற்றும் நல்லமுறையில் வெவ்வேறு வழிகளில் தங்களது திட்டங்களை நிறைவேற்றும் பண்பும் கொண்டவர்கள். இதுவே காதலர்களானால் தங்களது கனவுகளை வெவ்வேறு வழிகளில் பகிர்ந்து கொள்வார்கள். வர்களுக்கிடையே சூடான விவாதங்கள் அடிக்கடி நடக்கலாம் ஆனால் மிதுன இராசிகாரர் அதை வேடிக்கையாக மற்றும் அறிவுசார் விவாதமாக அதை எடுத்துக்கொள்ளலாம் ஆனால் சிம்மம் அதை பெரிதாக அல்லது விபரீதமாக எடுத்துக்கொள்ளவும் வாய்ப்பு உண்டு. எப்போது ஒன்றாகவே பயணிக்கும் இந்த இரு கிரகங்களும் பொதுவாக சூரியனிடம் மரியாதை கொண்ட புதன் ஆக இருக்கும். இருவரின் ஜாதகத்திலும் சுப சூரியனிடம் மரியாதை கொண்ட சுப புதனாக ஆக இருக்குமானால் சந்திரனும் வலு தந்தால் நன்றாக ஒத்துப்போகும் வாழ்க்கை தான்.

மிதுனம் ஒரு காற்றுத்தன்மை இராசியாகும் சிம்மம் ஒரு நெருப்புத்தன்மை இராசியாகும் அதனால் இந்த இருவரும் நட்பால் அல்லது காதலால் இணையும் போது தீ எரிய காற்று ஒரு முக்கிய ஊக்கியாகும்.  மிதுன இராசிகாரர் சிம்ம இராசிகாரரின் திட்டங்களுக்கு தன்னால் ஆன படைப்பாற்றல் மற்றும் அறிவாற்றலால் உதவிகள் செய்யும் இதனால் இவர்கள் வெற்றி செம்மைபடும். சிம்மம் ஒரு விஷயத்தை பேசிக்கொண்டே இருப்பதை விட அதை செயல் நடவடிக்கையாக காட்டுவதையே முன்னணி முக்கியத்துவமாக கருதும். இந்த நண்பர்கள் சாதுரியமான நடவடிக்கை மற்றும் எல்லைகளை கடந்து அதிகமாக போகாமலும் கவனமாக இருக்க வேண்டும். இரண்டு இராசிகாரர்களும் பரந்த-நலன்களை முக்கிமாக கொண்டு நடவடிக்கைகளை எடுத்தால் அவர்களுக்கு சிறந்த அனுபவங்களை கொடுக்க கூடியாதாகவும் மற்றவர்களுக்கும் பயன் அளிக்கும்.

மிதுனம் ஒரு உபய இராசியாகும் மற்றும் சிம்மம் ஒரு ஸ்திர இராசியாகும் அதனால் இந்த இருவரும் நட்பால் அல்லது காதலால் இணையும் போது சிம்மம் சிறந்த செயல் தலைவராக செயல்படும் திறமை பெற்றது மற்றும் மிதுன இராசிகாரர் நட்பானால் அந்த சிம்ம இராசிகாரரின் செயல்திட்டங்களில் அந்த மிதுன இராசிகாரருக்கும் அந்த விஷயங்களில் விருப்பம் இருக்குமானால் சிறந்த புத்திசாலித்தனமான ஒத்துழைப்புகளை கொடுத்து வெற்றிக்கு துணை நிற்கும் நல்ல தோழனாக இருக்கும். அதுவே காதலானால் அந்த சிம்ம இராசிகாரரின் வாழ்க்கை விருப்பங்களில் அந்த மிதுன இராசிகாரருக்கும் அந்த விஷயங்களில் விருப்பம் இருக்குமானால் வாழ்க்கையின் கடமைகளில் முக்கிய ஆலோசனைகள் தந்து உடன் இருந்து நல்ல உறவை வெளிப்படுத்தும். மிதுன இராசிகாரர் அந்த விஷயங்களில் விருப்பமில்லை என்றால் குறைவான கவனத்தையும் பற்றாக்குறையான பங்களிப்பையே தரும்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


0 Response to "மிதுனம் & சிம்மம், மிதுனம் vs சிம்மம் - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…"

கருத்துரையிடுக

Powered by Blogger