நவாம்ச லக்னம் மிதுனமானால்...


நவாம்ச லக்னம் மிதுனமானால் - மிதுனம் நவாம்ச லக்னமாக வரும்போது...

அசுவினி 3 பாதம்
ரோஹிணி 3 பாதம்
புனர்பூசம் 3 பாதம்
மகம் 3 பாதம்
ஹஸ்தம் 3 பாதம்
விசாகம் 3 பாதம்
மூலம் 3 பாதம்
திருவோணம் 3 பாதம்
பூரட்டாதி 3 பாதம்

ஒருவரின் லக்னமானது மேல் உள்ள நட்சத்திர பாதத்தில் இருக்கும் படி ஒருவர் பிறப்பை எடுத்திருந்தால் அவருக்கு நவாம்சத்தில் மிதுனம் லக்னமாக வரும் அப்படி மிதுனம் நவாம்ச லக்னமாக வரும்போது -  அற்புதமான தோற்றம், புத்திசாலித்தனமான நடத்தை, சொற்சுவையுடனோ அல்லது ஈர்க்கும் பேச்சுகளை உடையவர், சாஸ்திரங்களில் புலமை, நிலையற்றது அல்லது சலன எண்ணம் இருப்பது, இன்பத்தை அனுபவித்தல், தன்னடக்கமாக இருத்தல், தற்பெருமை பேசுதல், அதுவும் முக்கியமாக கணவன் \ மனைவி யோடு தற்பெருமை பேசி அதனால் சில பாதிப்பு, வாழ்க்கையில் அறிவார்ந்த அணுகுமுறை, அனைத்தையும் பகுத்தறிந்து பார்க்கும் ஆர்வம் கொண்டவர், நட்பாய் பழகுதல், கூட்டு ஒத்துழைப்பு தரக் கூடியவர்கள், ஒரு விஷயத்தை பற்றி பல்வேறு கருத்துகள் உடையவர்கள். இது நவகிரகங்களில் புதன், சுக்கிரன் (வெள்ளி), சனி, இராகு, கேது போன்ற கிரகங்களுக்கு ஏற்ற நவாம்ச இடம் ஆகும்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


0 Response to "நவாம்ச லக்னம் மிதுனமானால்..."

கருத்துரையிடுக

Powered by Blogger